எழுதும் கைகள் ஓய்வதில்லை
நாம் அழிந்தாலும் நம் தமிழ் அழியாமல் இருக்கவும்
நான் மறைந்தாலும் என் எழுதுக்கள் மறையாமல் இருக்கவும்
எண்ணம் கொண்டு இங்கு எழுதுகிறேன்
வாசகர்களே கருத்துப் பிழையோ எழுத்துப் பிழையோ இருப்பின்
முகம் சுழிக்காது மன்னித்து தவறுகளை அறிய தரவும்
பாரதி எங்கே? பாரதிதாஸன் எங்கே? பரதேசியாய் சொந்த நாட்டை
விட்டு புறப்பட்ட நான் எங்கே? என் தமிழ்தான் எங்கே?
ஈழத்து தமிழ் மண்ணிலே துள்ளி திரிந்த காலம் விதி என்னும் சுறை காற்றில் அடியுண்டு தூக்கி எறிய பட்டேன் ஐரோப்பாவில்
ஆனாலும் நான் தமிழை கை விடவில்லை
அன்னிய தேசத்திலும் நம் தமிழ் ஓங்கி ஒலிக்கும் வண்ணம்
சில காலம் ஐரேபாவிலுள்ள தமிழ் வான் அலைகளில் என்
கவிதைகளும் இலக்கியங்களும் ஒலி பரப்பாகின அதைவிட தமிழ் சஞ்சிகைகள் நூல்கள் என எனது எழுதுக்கள் அறிமுக படுத்தபட்டன
மேலும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ் ஆர்வலர்கள் எனது
எழுதக்களையும் வாசிக்க வேண்டும் என்னும் நோக்கில் இந்த பக்கத்தில்
கருத்துள்ள சில கவிதைகள் பொருள் உள்ள சில கட்டுரைகள் உண்மைகளை
எடுத்து சொல்லும் சில சிறுகதைகள் என பலவிதமாய் இந்த மின் நூலில்
பதிவாக உள்ளது
நம் தமிழ் வாழ்க
கவி மீனா
AntwortenLöschenமொழி கண்டேன்
விழி திறந்தேன் .
நிலையில்லா இவ்வுலகில்
அழியாத கலை கண்டேன்.
கவிபாடும் கடல் அலையை
கரை நின்றே தினம் ரசித்தேன்.
அகம் அறியும் என் உள்ளம் - உன்
முகம் கண்டு என்னுல் பெரும் வெள்ளம்.
உன் உள்ளம் ஊற்றெடுத்த கவி சுவைத்தேன்
என் உள்ளம் ஊற்றெடுத்த கவி அறிந்தேன்.
என் எண்ணங்களே உனக்கு அர்ப்பணம்
கவி வண்ணங்களே உனக்கு சமர்ப்பணம்.
வாழ்க உன் எண்ணங்கள்.... வளர்க உன் கவி வண்ணங்கள்.
Thanks a lot
AntwortenLöschen