Freitag, 17. September 2021

 

தடுப்பூசி 

இரவு முழுதும் தூக்கமில்லை

காரணம் விடிஞ்சால் தடுப்பூசி போட போறாங்கள் என்று


எத்தனையோ ஊசி இதுவரை போட்டாச்சு ஆனாலும் இந்த கொரோனா (
Covid 19 ) தடுப்பூசிக்கு

இம்மட்டு பயம் அத்தனை பயமுறுத்தல்கள் இதுவரை அந்த தடுப்பூசியை பற்றி வெளியான சேதிதான் என்னையும் பயத்துக்கள்ளாக்கியது


இல்லாட்டி ஊசி போடுவதே எனக்கு ஒரு யுஜிப்பி மற்றர்
,

விடிய 5 மணிக்கே எழும்பி வெளிகிட்டு 8 மணிக்கே டொக்கர் இடத்துக்கு போனால் அங்கை றோட்டுவரை சனம் கியுவிலை நிக்கினம்

அம்மளவு சனம் தடுப்பூசியை விரும்பி போட வந்திருப்பது நல்ல விடயம் என்றே நான் நினைத்தேன், எல்லாரும் தடுப்பூசியை போட்டால்தான் இந்த நோயின் பாதிப்பு இந்த நாட்டை விட்டு போகும்

நெஞ்சு படக் படக் கென்று அடிக்க அவர்கள் தந்த பேப்பர்களை நிரப்பி கொடுத்ததும் என்னை கூப்பிட்டார்கள், நானும் பயத்தோடுதான் நடப்பது நடக்கட்டும் அம்மாளாச்சி துணை என்று தடுப்பூசியை ( Byontech ) போட்டு கொண்டன்

அது ஒன்றும் நோவலை வளக்கமாக மற்ற ஊசிகளை  ஏத்துவது போல அவர்கள் ஏற்றி விட்டார்கள் எனக்கும் பெரிதாக நோகவும் இல்லை

எனி எப்படி நோகுமா? காச்சல் வருமா? தெரியாது ஒரு 15 நிமிடம் அங்கு இருந்து விட்டு ரக்சி பிடிச்சு வீடு வந்து சேர்ந்தன், அப்பாடா என்று மனசில் ஒரு நின்மதி எனி இரண்டாவது ஊசி அடுத்த மாசம் கிடைக்கும்

இந்த  தடுப்பூசி ( Byontech ) எல்லாருக்கும் கிடைக்காது ஏதோ கடவுளின் அருள் எனக்கு கிடைச்சது

நேற்று மலை போல இருந்த பயம் இன்று பனி துளியாக உருகியது

அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து இந்த கொரோனாவை விரட்ட முடியுமானால் அதை போலே மகிழ்சி வேறு எதுவுமே இன்றைய கால கட்டத்தில் இல்லை என்பேன்

இன்று 400 பேருக்கு குறையாமல் தடுப்பூசி போட போவதாக பேசி கொண்டார்கள், கிளினிக்கில் வேலை செய்யும் பெண்கள் மெசினை விட வேகமாக ஓடி ஓடி வேலை செய்வதும், இப்படியான மருத்துவ வசதிகளும், மருந்தும் கண்டு பிடிச்சதும் எல்லாமே கடவுளின் செயல்தான் விஞ்ஞானிகள் மருந்தை கண்டு பிடித்தது என்னவோ உண்மைதான், அதற்கும் கடவுளின் அருள் இன்றி எதுவுமே நிறைவேறாது

என்பது எனது நம்பிக்கை!

 

தனி வழியே

என்னத்தை சொல்ல ?


நேரமோ ஓடுது

நினைவுகளும் கூடுது

வாழ்க்கை மட்டும் விட்ட இடத்தில்

அரக்காமல் நிக்குது

காலங்களும் மாறுது

பருவங்களும் குளிரும் மழையுமாய்

வந்து போகுது

எம்மை சுற்றிய மனித உருவங்களும்

நாளுக்கு நாள் மாறுது

 

அன்பு என்று வந்த உறவும்

வம்பாகி போகுது

நட்பு என்று நினைபதும்

நயவஞசகமாய் ஆகுது

மாறத அன்பும் நேர்மையான நட்பும்

உலகில் இல்லையென்றானது

வருபவர் வரட்டும் போபவர் போகட்டும்

 மனித வாழ்வோ சில நாள்

இதில் யார் வந்தென்ன

யார் போய் என்ன

நம்ம வழி என்றும் தனி வழியே!

Mittwoch, 1. September 2021

 

இதுதானே  வாழ்க்கை சக்கரம்

வாழ்ந்தது போல் நீ நடித்தாய்

வாழ்வதாக நானும் நடித்தேன்

உலகமேடையிலே நீயும் நானும் நடிகரே

எச்சில் சோற்றை உண்பவனும்


அடுத்தவன் இலையில் எடுப்பவனும்

எல்லமே பசிக்குதான்

சிலர் வாழ்வு உடல் பசிக்குதான்

 


ஆட்டுக்கல்லு அம்மி கல்லு என

பூட்டி வைத்த வரும்

போகும் போது ஒரு கூழாம் கல்லை

கூட எடுத்து செல்லவில்லை

 காணி  வீடு என பொத்தி பொத்தி

பாத்த நிலம் இன்று

யார் யாரோ வந்து போகும்

சந்தை மடம் ஆனது

 

ஊருக்கு உலை வைப்போர்  வீட்டில்

இன்று  உலை வைக்கவில்லை

இது கொரோனா தந்த தண்டனையா

இல்லை கடவுள் கொடுத்த தண்டனையா?

யார் அறிவார் உலகில்?

 

எவர் வருவார் எவர் போவார்

என்பதும் தெரியாது

சுயநலலமான வாழ்க்கையிலே

யாரும்  உண்மை அன்பும் இல்லை

நன்றி உணர்வும் இல்லை

யார்தான் ஒட்டி இருந்தாலும்

பாடையிலே போகையிலே

யாரும் கூட வருவதுமில்லை

 

காதென்ன தோடேன்ன கழுத்து நிறைய

நகையென்ன கை குலுங்க வளையல் என்ன

பட்டென்ன பொட்டென்ன பவிசாய் வாழ்ந்தென்ன

பேய் பிடித்தால் மூலையிலே இருளோடு ஒதுங்கிடுவர்

தீயில் இட்டால் எல்லாமே தீஞ்சுதானே போய் விடும்

 

காற்றை உள்ளிழுத்து நீரை பருகி

நிலத்தில் நடந்து ஆகாயத்தை பார்த்து

கடைசியிலே தீயோடு போகுது

இந்த ஐம்பூதங்களின் சேர்கையே

இந்த உடலை தந்தது அந்த

ஐம் புதங்களினாலே உயிரும் வாழுது

அந்த ஐம் புதங்களுக்குள்ளே உடலும் சாயுது

 

சுத்தி சுத்தி பூமி வருகுது

அதில் சுத்தி சுழன்று உறவும் பெருகுது

வந்து போகும் உறவும் கூட நடக்கும் பயணியும்

பாதை மாறி போகுது பயணங்களும் மாறுது

மனித நேயம் ஒன்று மட்டும்

 மாறாது இருந்து விட்டால்

மானிட வாழ்க்கையும் மாசாக போகும்

இதுதானே  வாழ்க்கை சக்கரம்

அதுவே ஓம் என்னும் தத்துவம்

கவி  மீனா