Sonntag, 30. August 2015


ஒரு ஆசை முத்தம் தாராயோ?

பெண் பாவை நீயோ ஒரு அழகின் சிகரமடி

நீ என் சிந்தனையை தொட்டு விட்ட தமிழ் கவிதையடி

நீ மலர்களிலே வாசமுள்ள மல்லிகை மலரடி

என் மனம் கவர்ந்தது உன் மாந்தளிர் மேனியடி

சிரிப்பை சிந்துகின்ற உன் முகமோ வட்ட நிலா தோற்றமடி

 

சுற்றி பறக்கின்ற கூந்தல் அழகோ கரு மேக கூட்டமடி

கண்கள் இரண்டும் எனை இழுக்கும் இரு காந்த சுடர்களடி

அதன் மேல் அழகு தருவது வில் போல் உன் புருவமடி

பிரிகின்ற செவ்விதழோ என்னை பித்தம் பிடிக்க வைக்குதடி

தெரிகின்ற வெண் முத்து பல்வரிசை மோகனமாய் இருக்குதடி

 

உன் மின்னுகின்ற மென் கழுத்தோ மயிலின் சாயலடி

பொங்கி வரும் உன் மார்பழகோ ஒரு மாங்கனி தோட்டமடி

உன் சுட்டு விரல்கள் எல்லாம் என்னை தட்டி வீணை மீட்குதடி

உன் பின்னழகும் முன்னழகும் என்னை முத்தமிட தூண்டுதடி

நீ பேசுகின்ற வாய் மொழிகள் என்னை கிறங்க வைக்குதடி

 

நீ நடக்கும் நடை அழகில் நான் மயங்கி போனனடி

காலம் எல்லாம் கைகோர்த்து சேர்ந்து வர என் மனம்  ஏங்குதடி

மலரை சுற்றும் வண்டாக சித்தமோ தினம் சுழலுதடி

கரையை தொட துடிக்கும் கடல் போலே மனமும் அலை பாயுதடி

ஒரு மூன்று வார்த்தை மொழிவதற்க்கு என் இதழ்கள் தவிக்குதடி

 

உன் கண்ணோடு கண் கலப்பதற்க்காய் விழிகள் தூங்காதிருக்குதடி

காதல் தந்த போதையில் நான் பித்தனாய் போனனடி

என் பயித்தியம் முற்றும் முன்பே நீ வைதியம் பாராயோ?

ஆசையாய் ஓர் முத்தம் அன்பாக தாராயோ?

வேல்

 

பாலை போலே

பால் என்றால் வெண்மை மட்டுமின்றி அதில் தாய்மையின் சிறப்பும் அடங்கியுள்ளது, ஒவ்வொரு உயிரினத்துக்கும் பால் இறைவனால் கொடுத்த கொடை தாய்மை அடையும் போது பால் தானாக சுரக்கின்றது  பிள்ளை மேலே பாசம் பொங்கும் போது பாலும் பொங்கி சுரப்பது இறை அருள்.

 பசுவின் கன்றுக்கு என்றே சுரக்கும் பாலில் பசுவின் பாலை மனிதர்களே பெரிதும் சுவைக்கிறார்கள், அதனால்தான் பசுவை தெய்வம் போலே பாவிக்கிறார்கள் இந்துக்கள், தாயின் பாசத்தோடு மனிதர்களுக்கும் பாலை பொழிந்து கொடுக்கும் பசு அன்பின் வடிவமாக கருதப்படுகிறது.

அன்பின் வடிவான பசு தரும் பாலில் எத்தனை  விதமான சத்துக்களும் தாது பொருட்களும் நிறைந்திருக்கு, மேலும் பால் ஆயுர் வேத மருத்துவத்தில் மிக முக்கியமான  உணவாக கருதப்படுகிறது. பாலில்தான் பல மருந்துகளை கரைத்து குடிக்க சொல்கிறார்கள் மருத்துவர்கள் பாலில் எதை கலந்தாலும் அதனால் ஒரு நோய் குணமாகிறது,


பாலோடு மஞ்சளை கலந்து குடிப்பதால் தொற்று கிரிமிகள் சளி தொல்லை நீங்கும் பாலோடு தேனோ வேறு மருந்தகளோ கலந்து குடிப்பது நாட்டு வைத்தியத்தில் முக்கியம். 


 


பாலை போலே வெள்ளை மனம் கொண்ட மனிதர்களை காணபதும் அரிது  இன்றைய காலகட்டத்தில் பால்போலே கள்ளமில்லா உள்ளம் உடையோரை விரல் விட்டு எண்ணினாலும் கிடைப்பது அரிது.

பாலில் நிறைந்த ஊட்டச்சத்து இருப்பதால்  இந்த பாலை பருகுவோருக்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பது போலேதான் நல்ல அறிவு கொண்ட மனிதர்களோடு பழகும் போது எமக்கும் மனத்தைரியமும் வாழ்கையில் முன்னேற்றமும் கிடைக்க கூடியதாக அமையும்.

 

பால் கோப்பியில் கலந்தால் பால் கோப்பி

பால் தேசி புளியில் கலந்தால் பன்னீர்

பால் புழித்தால் தயிர் ஆகிறது

அதையும் பிரித்தால் மோர் ஆகிறது

மேலும் வெண்ணெய் என்றும் நெய் என்றும்

சீஸ் என்றும் பட்டர் என்றும்

பால் பவுடர் என்றும் சுவை வேறாகியும்

பாலின் தன்மை மாறாது இருப்பது போலே

நாம் எங்கு போனாலும் யாரோடு பழகினாலும்

எமது குணம் தரம் மாறாது இருப்பதே மேல்

 

கவி மீனா

 

ஏன் மறந்தாய் மானிடனே

 மண்ணுக்குள்ளே போகும் மானிடனே

மனதை தொட்டு பாருங்க

கொஞ்சம் கண்ணை மூடி யோசிங்க

நாடும் நகரமும் வேணும் என்று

அடித்து புரண்டு நரகத்தை நாடும் மானிடனே

கொஞ்ச நேரம் சிந்தியுங்க

 

ஜொலிக்கும் வைரமும் மண்ணுக்குள்ளே

தகிக்கும் தங்கமும் மண்ணுக்குள்ளே

முளைக்கும் பெரும் விருட்சமும்

விதையாய் மண்ணுக்குள்ளே

முத்தும் மாணிக்கமும் மண்ணுக்குள்ளே

 

ஊத்துத் தண்ணியும் மண்ணுக்குள்ளே

மாடி வீடு கட்ட உதவும்

கல்லுகூட மண்ணக்குள்ளே

ஓடும் நதியும் மண்ணக்குள்ளே

இரும்பு கூட மண்ணக்குள்ளே

உன் இரும்பு இதயம் கூட

ஒரு நாள் மண்ணுக்குள்ளே

 

இத்தனையும் ஆண்டு

ரசிக்கும் மானிடனே

உன்னை ஆட்டி படைக்கும்

ஆண்டவன் கையை மறந்து

நீஅதிகாரமும் ஆணவமும் கொண்டு

அலைவதினால் பயன் உண்டோ

 

அழிகின்ற உடலோடு அலைவதில்தான்

பயன் உண்டோ

ஒரு நாள் நீயும் இந்த மண்ணுக்குள்ளே

என்பதை ஏன் மறந்தாய்

ஏன் மறந்தாய் மானிடனே

 
கவி மீனா