Freitag, 3. Oktober 2014


தமிழன் வாழ்வும்

பசிக்குது பசிக்குது

சோறும் கறியும் சேர்த்து குளைத்து

உருட்டி சாப்பிட மனம் நினைக்குது

பழக்க தோசம் மாறல்லை

பானை வயிறும் போகலை

பரந்த தேசம் பறந்து போயினும்

பாணை உண்டு வாழ முடியல்லை

பாழும் வயிறும் கேட்கலை

ஈழத் தமிழன் வாழ்வும் சேற்றிலே

பாவி மனமோ சோற்றிலே

கவி மீனா

இந்த மண்ணே

சிலர் தாம் முன்னேற வேணும் என்று தலை தெறிக்க ஓடுகிறார்கள் பணத்தை சேர்க்க சேர்க்க  தலைக்கனம் பிடித்தே அலைகிறார்கள்.

என்னதான் முன்னேறி நீங்கள் மாடி வீட்டிலே வாழ்ந்தாலும், பென்ஸ் காரிலே ஓடினாலும்,  ரொச் கண்டியிலே பேசினாலும், பிளர் ரிவீயிலே பார்த்தாலும் கடைசியிலே எல்லாரும் மண்ணுக்குதான் போவீங்கள் எரித்து சாம்பலாகவோ அல்லது புதைத்தோ இதுதானே உண்மை? இது தத்துவம், யாரும் சாகா வரம் பெற்றவர்கள் இந்த உலகத்தில் இல்லை.

கருவறை தொட்டு கல்லறை வரைதான் வாழ்க்கை இதை நான் சொல்லவில்லை பாட்டாக பாடி விட்டார்கள் கவிஞர்களும் முன்னோர்களும்.

கம்பன் களி திண்டவனும் மண்ணுக்குள்ளே தங்க பஸ்பம் திண்டவனும் மண்ணுக்குள்ளே - என்று ரஐனி பாடியதையாவது கேளுங்க  முன்னோர்கள் சொன்னவற்றை அறியாத மனிதர்கள் சினிமாவில் வரும் தத்துவ  பாடல்கள் மூலமாவது கொஞ்சம் அறிவை பெறலாமே? வாழும் காலத்தே திமிர் கொண்டு அலையாமல்  மண், பொன், பெண் என்று பேராசை கொண்டு திரியாமல்,வாழும்வரை (போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து) என்னும் மனதோடு, பிறருக்கும் உதவிகள் செய்து வாழ முடியுமா என பாருங்கள். சுயநலமாக ஓடி ஓடி பணத்தை தேடி நீங்கள் மட்டும் முன்னேற வேணும் என்று நினைத்து  பூட்டி வைக்கும் பணம் யாவும் மண்ணோடு நீங்கள் போகும் போது யாரோதான் எடுக்க போகிறார்கள்.

(பாடு பட்டு தேடி பணத்தை புதைத்து வைக்கும் கேடு கெட்ட மானிடரே கேளுங்கள்

கூடு விட்டு ஆவிதான் போனபின் யாரோ அனுபவிப்பார் இம் மானிலத்தே) என்னும் வாக்கியத்தை மறவாதீர்கள்.

பணத்தை தேடி ஓடுபவர்கள் நின்மதியிழந்தே போகிறார்கள் இருப்பதை உண்ணவும், வேளைக்கு உறங்கவும் கூட நேரமின்றி உள்ளதை அனுபவிக்கவும் முடியாமல் இரவு பகல் அலைந்து பணத்தை தேடி அளவுக்கு மேலே பணத்தை சேர்தவனும் மரணிக்கும்  போது ஒரு சதம் கூட எடுத்துக்கொண்டு போக முடியாது என்பதை மறக்காமல் இருப்தற்க்காகவே திருநீறு தினம் நெற்றியிலே பூச சொல்லி இந்து மதம் விளக்கி சொல்கிறது.

யாவும் கடைசியில் ஒரு பிடி சாம்பலே, இளமையும் உடலில் பலமும் இருக்கும் வரை திமிரான பேச்சும் பேர்ரவாவும் கொண்டு அலைபவர்கள் கடைசி காலத்தே எது கூட வரும், யார் கூட வருவார்? என்பதை சிந்திக்க மறந்து போகிறார்கள்.

வீடு வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? கடைசி வரை யாரோ? என்று பட்டினத்தார் பாடி வைத்தார் அன்று.

பணம் சேர சேர மனிதர்களின் குணம் மாறி போகிறது என்னை விட்டால் யார் இருக்கினம்? என்னும் ஒரு தலை கனம் ஏறுகிறது பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று மாறி போனாலும் கடைசியில் மண்ணே மனிதனை தின்னும்.

மண்ணை பிடிக்க மனிதர்கள்  நாய் பேயாய் அலைந்தாலும், மனிதர்களுக்கு மண் மேல் ஆசை மண்ணுக்கோ மனிதர்மேல் ஆசை கடைசியில் வெல்வது இந்த மண்ணே.

ஐம் பூதங்களின் சேர்கையினால் ஆன உடம்பு

ஐம்பொறிகளினால்  அசையும் உடம்பு

ஐம் புலன்களினால் வாழும் உடம்பு

ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணுக்கே கடைசியில் அடைக்கலம் ஆகிறது.

மண்ணில் பிறந்தவன் மண்ணுக்குள்ளே தான் மறைய போகிறான், அதை உணராமல் திமிரான வாழ்க்கையும் மதியாத பேச்சும் நாம் செய்யாமல் இருபதே வாழும் வரை நமக்கு நன்மை பயக்கும்.

கவி மீனா

 

ஜோடி பறவை
 

ஜோடியாக திரியும் பறவைகள்

ஜோடி மாறி போவதில்லை

வீடு தேடி அலைவதில்லை

ஏதும் இன்றியே ஒற்றுமையை

அவை மறந்து போனதும் இல்லை

காடு நோக்கி பறந்தாலும்

காதல் குறைந்து போகவில்லை

குளக் கரையில் நீந்தினாலும்

குற்றங்கள் புரிவதில்லை

ஐந்தறிவும் இல்லாத பறவைகள்

வாழும் வாழ்க்கையை

ஆறறிவு படைத்த மனிதர்

வாழ நான் காணவில்லை

கவி மீனா