Samstag, 5. Februar 2022

 

கண்ணீரும் கம்பலையுமா ய்

 கண்ணீரும் கம்பலையுமாய் சிலர் வாழ்வு விடியாத இரவு போலே முடியாத பிரச்சனைகள் வறுமை பசி நோய் பிணி இப்படி எத்தனையோ சனம் அல்லல் படுகுதுகள் உலகமெங்கும் ஆசியா ஆபிரிக்கா போன்ற நாடுகளில் வறுமை தலை விரித்தாடுது மனதின் கவலைகளையும் உடலின் வலிகளையும் எடுத்துக்காட்டுவது முகத்தில் வழிந்தோடும் கண்ணீர் , இந்த கண்ணீரை நிப்பாட்ட வழியுண்டா?

இருப்பவனும் அழுகிறான் இருப்பது போதாது என்று, இல்லாதவன் அழுகிறான் வறுமையின் பிணியில் அடியுண்டு, எவன் ஒருத்தனுக்கு மனது அமைதி படுகிறதோ அவனுக்கு கண்ணீர் வருவதில்லை

 

தண்ணீரிலே மீன் அழுதால்

கண்ணீரைத் தான் யார் அறிவார்

தனிமையிலே நீ அழுதால்

உன் மனதை யார் அறிவார். 

 

இது ஒரு பாடல் மீன் அழுவது தெரியாது காரணம் அது தண்ணிக்குள்ளேயே வாழுது

இது போலே நித்தம் நித்தம் துன்பத்தையே சந்திக்கும் போது மனம் அழுவது தெரியாமலே போய் விடும்

சிலசமயம் மனம் விரக்தியில் விறைத்து போய் விடும் அழுதால் வந்து ஆறுதல் சொல்ல யாரும் இல்லாத போது அழுதுதான் என்ன பயன்?

குழந்தை கேட்டது கிடைக்காது போனால் விழுந்து கிடந்து வீரிட்டு அழுகிறது தாயோ தந்தையோ அல்லது பேத்தியோ ஓடி வந்து அணைத்து ஆறுதல் சொல்லுவினம் என்ற நம்பிக்கையில்தானே?

கை குழந்தையும் பசிக்கும் போது கதறி அழுகிறது தாய் ஓடி வந்து அணைத்து முத்தமிட்டு அமுதம் தருவாள் என்பதால்தானே?

சும்மா அழுதால் யாரும் பார்காத போது அழுவதாலும் பயன் இல்லை

நோயின் கொடுமை வலி தாங்காமல் சிலர் அழுவதுண்டு அதுவும் வைத்தியர் ஊசி போட்டாச்சும் வலியை நிப்பாட்டுவார் என்ற நம்பிக்கையில்தான்

உண்மையான உறவுகள் பிரியும் போது பிரிவால் மனம் துடிக்கிறது கண்ணீரும் வழிகிறது அதை நாமேதான் துடைத்துக் கொள்ள வேணும், ஆசையாக தடவி தடவி வளர்த நாய் கூட நாம விட்டு பிரியும் போது கண்ணீர் வடிய நின்றதை நான் பார்த்துள்ளேன்

மற்றபடி மிருகங்கள் அழுது ஒப்பாரி வைக்காதுகள் காரணம் அதுகளுக்கு தெரியும் யாரும் ஓடி வந்து அணைத்து ஆறுதல் சொல்ல போவதில்லையென்று

யாராச்சும் இறந்து விட்டால் ஒரு சிலர்தான் உண்மையா அழுவது மிச்சம்பேரு ஒப்பாரி வைத்து ஊரை கூட்டுவது எல்லாம் நடிப்பு, சிலர் காசு வாங்கிட்டு ஒப்பாரி வைக்கிற ஆட்களும் ஊரிலை உண்டு

அதைவிட அடுத்தவர்கள் கஸ்டபடும்போது வந்து விடுப்பு விண்ணாரம் பேசிட்டு சிலர் அழுவதை  நீலிக்கண்ணீர் என்று சொல்லலாம், உள்ளுக்குள்ளே மனம் வேணும் இவைக்கு இது வேணும் என்று சொல்லும் ஆனால் சும்மா கண்ணை கசக்கி அழுது காட்டுவினம்

முதலைக்கு நெடுக கண்ணீர் வருமாம் ஆழுகிறமாதிரி அதைதான் முதலை கண்ணீர் என்று சொல்வது, அப்படியும் சிலருக்கு தொட்டதுக்கெல்லாம் கண்ணீர் வரும்

அழுவதால் பயன் ஏதுமில்லை வறுமையை போக்க உழையுங்கள், தோட்டம் துரவு ஓரு துண்டு காணியிருந்தாலும் அதில் பயன் பெற தோட்டம் வையுங்கள், வெளிநாட்டிலை இருந்து காசு வருகுது என்று வளவு இருந்தும் ஒரு மரமும்  நடாமல் இருந்த மரங்களையும் இலை கூட்டி அள்ளி வளவு துப்பரவாக்க  வேணும் என்பதற்காக மரங்களை வெட்டி எறிந்து போட்டு வெட்டியாக குந்தி வெட்டி பொழுது போக்கு வோரும் ஊரிலை உண்டு

ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாத வீட்டிலே பிள்ளைகள் மட்டும் எட்டு பத்து என்று இருக்கும்

அத்தனையும் மூக்கும் ஒழுக பசியோடு இருக்கும் இந்த வீட்டில் வறுமையும் பசியும் கோர தாண்டவம் ஆட யாரு காரணம்?

கடவுளா? இல்லவே இல்லை உனக்கு சாப்பிட வழியில்லை என்றால் ஏன் இத்தனை பிள்ளைகளை பெறுகிறாய்? உடல் பசியை முதல் அடக்கு வயிற்று பசிக்கு வழி உண்டாகும்

இருப்பதை கொண்டு வாழ பழகுங்கள், ஆசைகளை வளர்காமல் போதுமென்ற மனதோடு வாழ முடிந்தால் அழுகை ஏன் வரபோகுது?

போனவர்களை நினைத்து அழவேணாம் போனவர்கள் திரும்பி வரபோவதில்லை!

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மானிலத்தே! என்று ஓளவை சொல்லி சென்றது மறக்ககூடாது

கண்ணீருக்கு வேலி இல்லை உன்னை நீ உணராவிடில்

காதல் போனால் போகட்டும், கூட இருப்பவர்கள் போனாலும் போகட்டும் கலங்காது இரு மனமே! Take it easy

கடவுள் உன்னோடு இருக்கிறான் அவனை தேடு இந்த மானிட  வாழ்வில் ஊன் உடம்பால் ஆன மனிதர்களை தேடாதே, பணம் பொருள் பொன் பெண் மண் என அலையாதே!

இருபதை வைத்து நின்மதியை தேடு  எதற்கும் கலங்காத மதை நீ பெற இறைவனை மட்டுமே தேடு!

கவி மீனா