Samstag, 24. November 2012


மானிட வாழ்வு

நாப்பிழக்க பேசி நவ நிதியம் தேடி

நலம் ஒன்றும் இல்லாத நாரியரை கூடி

பூப்பிழக்க வருகின்ற புற்று ஈசல் போலே

போல பொல வென கல கல வென

புதல்வரை பெறுவீர்

காப்பதற்க்கும் வகையறியீர்

கைவிடவும் மாட்டடீர்

கவர் இழந்த மரத்துளையில்

கால் நுளைத்துக் கொண்டு

ஆப்பதனை அசைக்கின்ற குரங்கை போலே

அகப் பட்டீர் அகப் பட்டீர்

கிடந்து உளர அகப் பட்டீர் – ( பட்டினத்தார்)

இந்த மானிட வாழ்விலே ஆணும் பெண்ணும் ஒன்று கூடி வாழவேணும் என்று வரும் போது காதல் கல்யாணம் என்பது தானே அவசியமாகிறது மானிட காதல் மனசோடு உள்ளதா? இல்லை உடலோடே மட்டும்  போகுதா? என்பதை அறிய துடித்தே உண்மை காதலை தேடி தேடி நானும் அலைந்தேன் எங்கு தேடியும் மனசோடே மட்டும் காதல் இல்லை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டாகும் காதல் அல்லது கல்யாணம் உடல் உறவு இல்லை என்கிற போது அடிபாடுடன் பிரிந்து போகிறது என்பதுதான் ஒரு கசப்பான உண்மை

உடல் உறவும் பணமும் மனித வாழ்கையை இன்று ஆட்டி படைக்கிறது  பணம் இல்லாவிடில் பிணம்என்பது பழ மொழி பணம் என்று ஒன்றை கண்டு பிடித்த பின் மனித மனங்களில் இருந்த நின்மதி தொலைந்தே போய்விட்டது  பணம் பந்தியிலே குணம் குப்பையிலேஇதுதானே இன்று நடை முறையில் உள்ளது அன்பு பாசம் நேர்மை நியாயம் என்பது ஒரு துளி கூட மனித மனங்களில் இல்லை இன்றைய மனித மனங்களில் இல்லை  ஆனேக குடும்பங்கள் இன்று திருமண பந்ததில் மகிழ்ச்சிக்கு பதிலாக பட்டினத்தார் சொன்னது போல் ஆப்பிழுக்கும் குரங்குகள் போலே அவதி படுகிறார்கள்  நித்தம் நித்தம் ஏச்சும் பேச்சும்  இடக்கு முடக்கு வாக்கு வாதமும் வந்து வந்து போகையிலே கண்ணீரும் கம்பலையுமாக  சிலர் வெளியே சொல்ல முடியா துயருடன் வெம்பி பழுக்கும் மாங்காய் போலே  வேதனை நிறைந்த மனசோடே இருப்பது கண் கூடாக தெரிகிறது

கணவன் மனைவி இடையே உண்மையான பாசம் அழிந்து ஏனோ தானோ என்ற பல பேர் வாழ்கை ஓடுகிறது சில கணவன் மார்களுக்கு வேலை முடிந்தால் வீட்டை போகவே மனம் விரும்புவது இல்லை மனைவி மாருக்கு கணவன் வந்து கதவை திறக்கும் போது நெஞ்சில் காதல் உணர்ச்சி எழுவதற்க்கு பதிலாக பயம்தான் வருகிறது எனி என்ன வாக்கு வாதம் வர போகிறதோ? என்று  அன்று சொன்ன காதல் வாழ்க்கை இன்று நமது குடும்பங்களில் இல்லாமல் போனதற்க்கு காரணம்தான் என்ன? அவர்கள் பிள்ளைகளுக்கோ பெற்றோர் மீது பாசம் வருவதற்க்கு பதிலாக வெறுப்பைதான் அள்ளி கொட்டுதுகள் இது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களது குடும்பங்களில் அனேகமாக நடக்கிறது

இப்படி பட்ட குடும்ப வாழ்க்கையிலே நின்மதி சந்தோசம் இருபதற்க்கு பதிலாக  மன அழுத்தமும் கோபம் பயம் போன்ற உணர்வுகள் நிரம்பி ஒரு வெறுப்பான போக்குடன் மனிதர்கள் வாழ்கிறார்கள் பிள்ளைகளையும் பெற்ற பின்னே தனித்து ஓடவும் முடியாமே  சேர்ந்து மனம் ஒன்றி வாழவும் முடியாமே போவதற்க்கு இந்த பழாய் போன பணமும் உடல் உறவும  தான் காரணம் என நான் நினைக்கிறேன்  ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே எனது உனது என்னும் வாக்கு வாதம் அழிந்து போய் யாவும் நமது என்னும் மன போக்கு வருமாகில் வாழ்கையில் அமைதி நிலவ கூடும்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

 கவி மீனா 

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen