Freitag, 8. Januar 2021

 

ஆண்டவன் தீர்ப்பு 

சுற்றி வர மாடி கட்டி

மாடி மேலே மாடி கட்டி

மரங்களையும் வெட்டி முறித்து

சூரிய சந்திரனையும் மூடி  மறைத்து


நாகரீக நாடாக மேலை நாடு இங்கே

அதில் கூண்டுக்குள்ளே கோழி போலே

நம்ம வாழ்க்கை ஓடுது

 

காணி வளவு தோட்டம்

துரவென்று வாழ்ந்த சனம்

இங்கு ஓடி வந்து அடைபட்டு

மனம் நொந்து வெந்து சாகுது

குருவி கூட கும்மாளமாய்

அங்கும் இங்கும் பறக்குது

நம்ம சனம் தேடி வந்த வாழ்க்கை

இங்கே தடம் புரண்டு ஆடுது

 

காடு கரம்பு சுற்றி திரிந்த

மனிதர் கூட

காடுமின்றி மலையுமின்றி

இயந்திரமாய் வாழுது

கொட்டும் அருவியில் குழித்து

வாழ்ந்த சனங்கள் கூட

இங்கே வீட்டுக்குள்ளே

மல சலம் கழிக்குது

 

பேராசை பெரும் தரித்திரமாய்

போனதுதான் மீதியா?

போதாக் குறைக்கு கொரோனா வந்து

வாயை மூக்கை பொத்த சொன்னதா?

 

பாவம் செய்த மனிதரெல்லாம்

சாகாமல் நிக்கையில்

சும்ம போரவன் வந்தவனை எல்லாம்

கொரோனா பிடித்து கொல்லுதா?

ஆண்டவன் தீர்ப்பு இதுதான் என்றால்

ஆடும் மனிதன் என்ன செய்வான்

இந்த பூமி என்னும் மேடையிலே

ஆடும் மனிதன் என்ன செய்வான் ?

 

கைலாயம் 

கைலாயம் என்கின்ற மலை இமையமலை தொடரில் ஒரு பகுதியாகும், இது சீனாவுக்கு கிட்டதான் இருக்கு மற்ற மலைகளை விட இது கொஞ்சம் நிறம் மாறி காணபடுவதாக சொல்கிறார்கள், இந்த கைலாயம்தான் தான் நமது சைவ கடவுளான சிவபெருமான் தனது பூத கணங்களுடனும் நந்தியுடனும் பார்வதியுடனும் இருபதாக இந்து சமய வரலாறுகள் சொல்கிறதா?  அல்லது வேறு ஒரு கைலாயம் இருக்கா?


அப்படி இந்த மலைதான் சிவன் வாழும் கைலாயம் எனில் அவரே தமிழர்கள் இல்லாத ஒரு தேசத்தில்தான் போய்  அதுவும் சீனாவுக்கு அண்மையில்  குடி இருபதால் தமிழனை விட்டு தள்ளியிருபதே மேல் என்று அவரே நினைத்ததுதான் உண்மை!

இந்த மலை பகுதி சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் திபத் நாட்டில்தான் இருக்கிறது என்று உலக வரை படம் கூறுகிறது அப்போ சிவன் தமிழரா? இல்லை சீனக்காரனை சேர்ந்தவரா? இதுதாங்க எனது கேள்வி

எல்லாம் சிந்திக்க வேண்டிய விடயம் அல்லவா?

தமிழர்களின் அல்லது இந்துக்களின் கடவுள் ஏன் சீனாவுக்கு கிட்ட போய் இருக்கிறார்?

அவர் கழுத்திலை பாம்பை தாங்கி   பாம்புக்கு அடைகலம் கொடுத்திருந்தும், எப்படி சீனர்கள் பாம்புகளை பிடித்து பொரித்து குழம்பு வைத்து சாப்பிடுறாங்கள் ? இது எனக்கு பெரிய யோசனையாக இருக்கு!

சிவன்தான் முழுமுதல் கடவுள் என்று இந்துமதம் சொல்லும் போது அவர் ஏன் இந்துக்கள் உள்ள நாட்டில் இல்லாமல் அல்லது  எல்லா உயிர்களையும் காக்கும் தெய்வமாய் இருப்பாராகில் ஏன் சீனா பக்கத்திலை தன் இருப்பிடத்தை வைத்தார் இது ஒரு ஒரு புறம் இருக்க,

சிவனை பற்றி ஆன்மீக போதனை செய்பவர்களளும் சிவனடியார்களும் ஆண்டிகளாகதான் அலைய வேணும் என்று இந்து மதம் சொல்லுதா? சிவனையே தியானிக்கும் ஆண்டிகள் காசியிலே வெறும் கோமணதோடு சிவயோகம் என்று சொல்லி சொல்லி  அகோரிகளாய் ஆடுதுகளாம், ஆன்மீக வாதிகள் என்று சொல்லி பல கள்ள சாமியார்கள் வேறே ஊரையே எமாற்று கிறார்கள் இதில் சிவனை பற்றி சொல்வோரும் கும்பிடுவோரும் பிரம்மசாரியம் காக்க வேணும் என்று ஒரே கெடு பிடியாம் உலகிலே இந்துகளிடையே!

ஆனால் சிவபெருமானுடைய சரித்திரத்தை படித்து பார்த்தால் அவர் மூன்று முறை திருமண் செய்திருக்கிறார் அதுவும் வயது எல்லை இன்றி!

முதலில் தட்சனின் மகளை திருமணம் செய்து, அம்பிகை  சிவனுக்காக தட்சனுடன் சண்டையிட்டு தனது கணவரான சிவபெருமானை தந்தை தட்சன் மதிக்காது போனதால் கோபமுற்று,  தட்சனின் யாக குண்டத்தில் நெருப்பில் விழுந்து இறந்ததாகவும், அந்த எரிந்த உடலை சிவன் பார்த்துக் கொண்டு கவலையில் இருந்ததால் உலக இயக்கங்கள் யாவும் தடை பட்டு போக விஸ்ணுதான் தனது சக்கரத்தால் அந்த அம்மனின் உடலை சிதறடித்து அம்மனின் இறந்த உடல் துண்டுகள் யாவும் பூமியில் விழுந்ததாகவும், விழுந்த இடமெல்லாம் சக்தி பீடங்கள் உருவாகினதாகவும் ஒரு கதை உண்டு!

அதன் பின்னர் அம்மன் பர்வதராஐனின் மகளாக பிறந்து வந்து சிவனை மீண்டும் மணமுடிக்க, அங்கு சில புரிந்துணர்வு இல்லாமல் போகவே சிவன் சாபம் கொடுத்து அம்பிகை மீண்டும் பூலோகத்தில் பாண்டிய மன்னனின் மகளாக பிறந்து வளர்ந்து சிவனை மாலையிட்டதாக சிவன் பார்வதி கல்யாணம் இந்து சரித்திரத்தில் இடம் பெற்றது!

அப்படி சிவபெருமான் மூன்று தடவை திருமணம் செய்திருக்கும் போது,  அதை விட கங்கையை தலையில் சூடியதால் சிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் மனகசப்பு வந்ததாக கூட கதையுண்டு, இப்படி சிவனின் கதை களை கட்டி இருக்கும் போது, விஸ்ணு மோகினியாக வடிவம் எடுத்து போது அவர் மீது ஆசை கொண்ட சிவனும் மோகினியும் ஒன்று கூடியதால் உருவான குழந்தைதான் ஐயப்பன் என்று வேறு ஒரு புரளி  இருக்கு!

இது இப்படி இருக்க பூலோகத்தில் சிவனடியார்கள் ஆண்டியாக அலையவும் ஆன்மீக போதனை செய்வோர் பெண்களை பார்க்கவே கூடாது என்றும் சட்டம் போட்டதா இந்த இந்து மதம்?

ஆன்மீக போதனை செய்யும் அந்த நித்தியானந்தா தான் சாமியும் இல்லை சாமியாரும் இல்லை என்று அப்பட்டமாக சொல்லும் போது அவன் பெண்களை தொட்டுடான் தொட்டுடான் என்று ஒரே கோஸம் இந்தியாவிலே எனக்கு இதுதான் புரியவில்லை

மூன்று முறை மணமுடித்த சிவன் இதை சொன்னாரா?  தலையிலே கங்கையை சூடிகொண்ட அந்த சிவனா இதை சொன்னார்? உண்மையில் சிவ பக்தர்கள் என்றால் சிந்தித்து பார்தால் உண்மை விழங்கும்

ஆன்மீக வாதிகள் காதலிக்க படாது என்று ஏதும் சட்டம் உண்டா? யாராக இருந்தாலும் ஒழுக்கமாக வாழுவதுதான் முறை, அதை விட்டு ஆன்மீகம் பேசுவோருக்கு காதல் கல்யாணம் குடும்ப வாழ்க்கை ஒன்றும் ஆகாது என வாதாடுவோர் சிவபெருமான் மூன்று தடவை மணமுடித்த கதையை சரித்திரமாக  போற்றவும் பாடவும் மட்டும் மனசு எப்படி ஒத்துக்கொள்ளுது?

இந்த சனங்களின் தொல்லை தாங்காமல்தானே சிவனே ஓடி ஒழிந்து இந்துகளையும் கைவிட்டு சீனாவில் போய் கைலாயத்தில் குடியிருக்கிறார்

இப்படி ஒரு கட்டுரையை நான் எழுதுவதால் நான் நாஸ்தீகவாதி இல்லை எதையும் சிந்திக்க வேணும் சிந்தித்து பார்த்தால் பல உண்மைகள் புரியும் என்பது எனது  கருத்து!