Sonntag, 29. September 2013


சொந்த கதை
 

விமானத்தில் பயணம் செய்தேன்  றெயினிலும் ஏறியூள்ளேன் பஸ்சிலும் ஏறியுள்ளேன் காரிலே நித்தம் ஓடுகிறேன் சைக்கிள்   கூட ஓடி இருக்குறேன் ஆனால் நாம் படுத்து இருக்க எம்மை வைத்து ஓடுறாங்களே Ambulance என்று அதிலும்  இப்போதான் ஒரு அனுபவம் கண்டேன்

சும்மா என்ன ஓட்டம் பா?? கட புட என்று ஓடிச்சு கண்ணு மண்ணு  தெரியாமே ஓடிச்சு வெறே வருத்தம் (heart)என்றால் அதுக்குள்ளேயே மண்டையை போட்டு இருபாங்கள் அப்படி ஒரு குலுக்கல் மாட்டு வண்டி சவாரிதான் ஒரு நாள் செய்து பார்க்கணும் என்று ஆசை இருந்தது ஐல்ஐல் ஓசை ஓடு குலுக்கல் ஓட வண்டி ஓடினால் நல்லா  பாடி கொண்டே போகலாம் என்று ஒரு நப்பாசையில் மண் வழுந்தா போலே நான் இந்த வண்டியில் ஏற வேண்டியதாயிற்று

ஒரு வளியாக  ( Hospital) போய் சேர்ந்ததும் இங்குள்ள வைத்தியரும் (Vampire)  வம்பியரும் ஒன்று போலே அப்படி ஒரு இரத்த வெறி கட கட என்று இரத்ததை போத்தல்களில் நிரப்பி எடுபதிலேயே கண்ணாக இருந்தாங்க

கடைசியாக யேசுவை சிலுவையில் அறைஞ்சா போலே என்னை கொண்டு போய் (Intensive ward) இலை போட்டு இரண்டு கையிலும் வயறுகளை ஏத்தி மூக்கிலை சுவாசம் போக ஒரு வயறை பூட்டி அப்படி அங்காலை இங்காலை அசைய முடியாமே கட்டி போட்டாபோலே மல்லாக்க படுக்க விட்டுடாங்கள் சரி நான் எனி தப்ப மாட்டன் என்று மனசு சொல்லிச்சு

அதைவிட என்னை  (Bed) ஓடே தள்ளி கொண்டு ஒவ்வொரு இடமாக ( Checkup) க்காக கொண்டு ஓடுவாங்களே அதுவே ஒரு நல்ல அனுபவம்தான் தள்ளி கொண்டு நீண்ட தூரம் ஓடி ( Lift ) வளியாக மற்ற மாடிக்கு கொண்டு போய் திருப்பி கொண்டு வந்து என்னுடைய இடத்தை விடும் வரை அந்த (Driving)  இது அல்லோ சிறந்த  என்று நான் எனக்குள் மெச்சி கொண்டேன்

இப்படி நோயாளிகளை (Bed ) ஓடே பத்திரமாக கொண்டு ஓடுபவர்களுக்கும் ஒரு திறமையான  (Driving license ) கொடுக்க வேணும் என மனசுக்குள்ளே நினைத்தேன்

10 நாள் எப்படியோ போச்சுது என்டை கையாலே சமைத்து ருசியாக சாப்பிடாமே போக போறேனோ என்று மனசிலை ஒரு கவலை சாப்பாட்டை நினைத்தால்  பசியாக வரும்

என்ன அதிசயமோ நான் கும்பிடும் அம்பாள் எனக்கு சில நண்பிகள் வடிவில் வந்து தக்க தருணத்தில் தேவையான உதவிகளை செய்து  மருத்துவர்கள் வடிவிலும் எனக்கு நல்ல மருத்துவத்தை செய்து கண்ணை போலே என் 2 ( Sons ) கண்மணிகளும் அவங்களோடே ( Gf ) ஆசை கண்மணிகளும் மாக என்னை கவனம் எடுத்து பார்த்தால் நான் மீண்டும் உயிரோடே வந்துள்ளேன் உங்களுக்கு எழுதி தொல்லை கொடுக்க ஹஹஹஹ

கவி மீனா

 

 

 

கோடிகள்
 

கோடி பணத்தில் புரண்ட போதும்

நின்மதியின்றி அலையும் மனிதர்கள்தான்

எத்தனை பேரு?

பல கோடியை தேடி போய்

தெரு கோடியில் நின்றவர்கள் எத்தனை பேரு?

கோடி கோடியாய் கொட்டி கொடுத்தும்

திருமண வாழ்வில் கோடி இன்பம் காணாதவர்கள்தான்

எத்தனை பேரு?

உலகிலுள்ள கோடி சனத்தில் நல்ல மனசை தேடி

ஒரு மனிதனையும் காணாதவர்கள்தான் எத்தனை பேரு?

நாடு இருந்தும் வீடு இருந்தும் நமக்கு என்று

ஒரு வீட்டு கோடி கூட இல்லாமல் அலையும் தமிழர்கள்

தான் எத்தனை பேரு?

வருசம் பொங்கல் தீபாவழி என்று பல பல விழாக்கள்

வந்த போதும் ஒரு கோடி துணி உடுக்க

வழியின்றி வாடும் மனிதர்கள் எத்தனை பேரு?

இன்பம் கோடி துன்பம் கோடி எல்லாம் நாடி

மானிட வாழ்வில் யாவும் ஓடி

மறைவதுதானே நீர்குமிழி வாழ்க்கை

நீர் குமிழி வாழ்கை

கவி மீனா

 

மழைக் காலம் (உண்மை கதை)
 

மேகம் கறுத்து  எங்கும் இருண்டு கிடக்கு அந்த கருப்பு நிற முகில் கூட்டங்களை கிழித்து கொண்டு ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் மின்னி மின்னி விமானம் பறந்து கொண்டே இருக்கிறது தற்சமயம் இங்கு ஒரே அடை மழை பெய்து கொண்டு இருக்கிறது   ஐன்னல் மீது வழிந்து ஓடும் நீர் திவலைகள் டங் டங் என ஒரு நாதத்தை எழுப்புகிறது இயற்கையில் கேட்கும் ஒவ்வொரு சதத்ததிலும் இசை கலந்து இருக்கிறது என்று சும்மாவா சொன்னார்கள் ? நான் எனது வீட்டு பல்கணியில் இருந்து  இந்த காட்சிகளை பார்க்கும் போது என் சிந்தனைகள்  உருண்டோட தொடங்கியது மழை தொடர்ந்து பெய்யும் போது எல்லாம் எனக்கு ஊரில் நடந்த சம்பவங்கள் ஞாபகத்துக்கு வருகிறது நான் சின்னஞ் சிறு சிறுமியாக இருந்த காலத்தே ஊரில் மழைகாலம்  வந்து  அடைமழை பெய்தால் எங்கும் இருட்டி கொண்டு இருந்தால் எனக்கு ஒரே பயமாக இருக்கும்  இடிமுழக்கம் கேட்டாலே எனக்கு பயம் அப்போது எல்லாம் எனது பேரன் சொல்லுவார் ஒரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று அந்த மந்திரம் எனக்கு இப்போ மறந்து போய் விட்டது ஆனாலும் கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது (அருச்சுணன் பற் நர நாராயணா) இப்படி சொன்னால் இடி முழகத்தாலே எந்த தீங்கும் எமக்கு நடக்காது என்பது அன்று உள்ளவர்களின் நம்பிக்கை

கடும் மழை பெய்தால் எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி ஓடுகின்ற வாய்கால் முட்டி விடுவதால் சில நாட்களில் எங்கள் வீட்டு படி வரைக்கும் வெள்ளம் வந்து நிற்க்கும்  வெள்ளத்துக்குள்ளே மீன்களும் துள்ளி பாயும் சில வேளை பாம்பு கூட ஓடும் அந்த நாட்களில் பகல் வேளைகளில் நானும் எனது சகோதரனும் கடதாசி கப்பல்கள் செய்து வெள்ளதில் ஓட விடுவம் சில சமயம் கடதாசி முடிந்து போய் விடும் நாங்கள் கப்பல் விடாமே எப்படி இருபது? ஸ்கூல் கொப்பிகள் கூட சில சமயம் கிளித்து கப்பல் செய்து விடுவார் எனது ஒரு சகோதரன் நான் அப்படி செய்ய கூடாது என்று தடுதால் அவர் புதுசா நாளைக்கு கொப்பி வாங்கலாம் என்று சொல்லி போட்டு அவரது நோட்ஸ் கொப்பிகள் எல்லாம் கப்பலாக மாறி வடும் சில வேளையில் இரவில் கூட கப்பலின் நடுவே குட்டி மெழுகு திரி கொழுத்தி வைத்தும் ஓட விடுவார்  அவருக்கு ஒரே கொண்டாட்டம் வெள்ளம் வந்தால் வெள்ளம் நல்லாக வரவேணும் தான் கப்பல் விட வேணும் என்பதற்காக என்னை ஒரு பாhட்டு பாட சொல்லுவார் நானும் என் சகோதானின் விருபத்துக்கு இணங்க
 

 ( மழையே மழையே மெத்த பெய் வண்ணான் கல்லை தெறிக்க பெய் ) என்று சத்தம் போட்டு பாடுவன்   அம்மா வந்து உந்த பாட்டை பாடதே வெள்ளம் வந்துடும்  என்று பேசி என்னை பாட விடமே நிப்பாட்டுவா  அப்போவே என் அம்மாவுக்கு எனது சக்திமேலே அம்மட்டு நம்பிக்கை என்றால் பாருங்களேன் நான் பாடினால் உண்மையா கடும்மழை வந்திடும் என்று அவவுக்கு பயம் இப்ப நினைச்சால் எனக்கு சிரிப்பு வரும் ஹஹஹஹ

இரவு வந்தால் அந்த வாய்கால் பக்கம் தவளைகள் கத்துகிற சத்தம் இரண்டு வீடு தள்ளி வந்து காதில் கேட்கும் அது படுத்து இருந்து கேட்கும் போது பெரிய பயங்கரமாக இருக்கும் ஆனாலும் தவளை சத்தம் கூட ஒரு ராகத்தோடேதான் வந்து கொண்டு இருக்கும் குட்டி தவளைகளுக்கு இப்படி ஒரு சத்தம் எங்கே இருந்து வந்தது என்று எனக்கு இன்றுவரை விளங்கவில்லை

எனது மூத்த சகோதர் நெடுகவும் என்னை பயமுறுத்த ஏதாவது ஒரு கதை சொல்லி வைப்பார் அவருக்கு அதிலேதான் சந்தோசம் தவளை சத்தம் கேட்டு நான் பயந்து கொண்டு இருக்கிறேன் என்று தெரிந்து அவர் சொல்லுவார் அது வாய்காலுக்குள்ளே இருக்கிற  பேய் கத்துற சத்தம் என்று வெள்ளம் வந்ததால் கத்துது எனி வெளியே வர போகுது என்று  எனக்கு முழி பிதுங்கிற போலே பயமாக இருக்கும் அம்மாவுக்கு கிட்டே போய் இருக்கலாம் என்று பார்த்தால் அவ படு ரென்ஸ்சனிலே நிப்பா வெள்ளம் இன்னும் கூடிட்டால் கிணத்துக்குள்ளே வெள்ளம் போய் விடும் என்று  கனக்க வாளிகள் குடங்களில் எல்லாம் தண்ணி நரப்பி கொண்டு வந்து கிச்சனக்குள்ளே வைப்பா காரணம் கிணத்துக்குள்ளே வெள்ளம் போனால் அந்த தண்ணி பிறகு குடிக்வோ சமைக்கவோ பாவிக்க ஏலாது  வெள்ளம் வற்றி போன பிறகு கிணறு பிறகு இறைபித்து துப்பரவாக்கி புது ஊற்று தண்ணி வரும் வரை குடிக்க தண்ணி வேணும் என்பது அவவின் கவலை

பேரனாருக்கும் மழை பெய்தால் ஒரே ரென்ஸன்தான் அவர் மழை காலங்களில் வெளியே உலாவ போக மாட்டார் எங்களுடன் வீட்டில் நிப்பார் இல்லாட்டி அவர் பின்னேரத்தில் வெளியே போய்விடுவார் தனது நண்பர் ஒருவரின் கடையில் இருந்து நண்பர்களுடன் அரட்டை அடித்து ரீ குடித்து அந்த கடைக்கு எதிர்கடையில் உள்ள அவரது மருமகனின் ரீ கடையிலிருந்து சுட சுட வடையும் சுண்டலும் வாங்கி நண்பர்களோடு சாப்பிட்டு நல்லாக பொழுது சாயும் நேரம் இரவு ஏழு மணி போலேதான் வீட்டை வருவார் இரவு சாப்பாட்டுக்கு ஆனால் மழை கடுமையாக பெய்தால் அவர் வீட்டோடே நிற்பதால் எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும் அவர்தான் எனக்கு எல்லாம் எனது நண்பர் போலவும் ஒரு தையிரியம் சொல்லும் கடவுள் போலவும் எனக்கு எல்லாமே அவர்தான்  எனது பேரன்தான் எனது வழிகாட்டி துணை எல்லாமே

மழைகாலங்களில் அவர் எங்களுக்கு நல்ல நல்ல கதைகள் எல்லாம் சொல்லுவார் பாரதகதை - இராமயாணம் - விக்கிரமாதித்தன் கதைகள் - நளன்தமயந்தி  கதை சைவ புராண கதைகள் - கந்த புராணம்  அருச்சந்திரன் கதை - ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி கதைகிரிஸ்ணன் லீலைகள் -காத்தவராயன் கதை - என பலவிதமான கதைகளை நான் அவர் வாயிலாக தான் கேட்டு அறிந்துள்ளேன்  அவருக்கு கதை சொல்வதில் அபார திறமை

மழை காலங்களில் மத்திய உணவு முடிந்த பின்னாலே நாங்கள் அவரை போய் பிடித்து விடுவேம் அப்பா கதை சொல்லுங்கோ என்று பேரனைதான் நாங்கள் அம்மாவோடு சேர்ந்து அப்பா என்று சொல்வது வழக்கம்  எனது தந்தை கொழும்பில் வேலை செய்ததால்  அவர் மாதம் ஒரு முறை தான் யாழ்பாணம் வந்து போவார் அவரை நாங்கள் டடா என்று கூப்பிடுவதால் பேரனை அப்பா என்று அன்புடன் அழைப்போம்   எனது பேரன் அழகான கம்பீரமான தோற்றம் கொண்டவரும் அந்த அயலுக்குள்ளே  பஞ்சாயத்து பண்ணி பிரச்சனைகளை தீர்த்து வைபதால் நல்ல மதிப்பை பெற்றவரும் என்பதால்  எனக்கு அவர் மீது கொள்ளை பாசம்

அவர் கதை சொல்ல தொடங்கும் போது நிலத்திலே ஒரு கம்பளத்தை விரித்து அதன் மேல்  சப்பணம் கட்டி இருந்து கொண்டு வாயிலே வெற்றிலையும் போட்டு கொண்டுதான் கதை சொல்ல தொடங்குவார்  அவர் கம்பளம் எடுத்து உதறி விரிபதை எதிர் வீட்டில் இருந்த வாசுகி பார்த்து  போட்டு அவவும் கதை கேட்க்க ஓடி வந்திடுவா  வாசுகி என்னை விட இரண்டு வயது இளையவ என்னுடைய ஸ்கூலில்தான் அவவும் படித்தா பெறோர்களுக்கு அவ ஓரே ஒரு பிள்ளை அவவுக்கு வீட்டிலே விளையாட ஆட்கள் இல்லாத படியாலே நெடுக அவங்கடை வீட்டு ஐன்னலுகாலே எங்கடை வீட்டைதான் பார்த்து கொண்டு நிற்பா  நாங்கள் கம்பளம் எடுத்து விரிதாலே ஒன்றில் கதை கேட்பம் இல்லாவிடில் பேரனோடு தாயம் விளையாடுவம் என்பது அவவுக்கு தெரியும்

அன்று எங்கள் வீட்டுக்கு விறான்டா என்று சொல்லுவினம் திறந்த கோல் இருந்தது  அதிலேதான் நாங்கள் பொழுதை போக்குவம் மழை காலங்களில் அப்பா கதை சொல்ல தொடங்கினால் எப்படியும் ஒரு மூன்று மணிதியாலம் ஆவது நேரம் எடுக்கும் என்று கதை நேரம் முடிய  எங்களுக்காக அன்று அவர்கள் பொறுமையாகவும் பாசத்துடனும் செலவு செய்த நேரங்களை நான் இன்றும் எண்ணி பார்கிறேன் அவர்கள் அன்று காட்டிய அன்பும் ஆதரவும்தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளை வளர்க்க நல்வழி காட்டியது

பேரன் கதை சொல்ல தொடங்கினால் அம்மா கிச்சினுக்கு போய் ஏதாவது சுட சுட பலகாரம் செய்வா வடை - பகோடாசுண்டல் அல்லது உப்புமா - ராசவள்ளி கிழங்குஉழுதம்களி இப்படி ஏதாச்சும் பின்னேரம் ரீ ஓடை சாப்பிட தாயார் பண்ணுவா ராசவள்ளி கிழங்கு அம்மா அவிக்கிறா என்று தெரிந்தால் எனக்கு மனம் எல்லாம் அங்கேதான் நிக்கும் அடிகடி கிச்சன் பக்கம் போய் எட்டி பார்பன்  ஆனால் கதை கேட்க தொடங்கினால் அது முடியும் வரை நாங்கள் அப்பாவை விட மாட்டம் மிகுதி நாளை சொல்லுறன் என்று சொல்லி கதையை பாதியில் விட்டாரோ எனக்கு இரவு முழுதும் தூக்கமே வராது அவ்வளவு இன்ரஸ்ராக அவர் கதை சொல்லுவார் அது அவரது திறமை அவர் சொன்ன கதைகளை எல்லாம் கேட்டு கேட்டு நாளடைவில் எனக்கு நானே எல்லா கதைகளும் வாசித்து அறிய வேணும் என்ற ஆர்வமும் தமிழின் மேலே ஒரு பற்றும் உண்டாகியது

வெள்ளம் ஓடும் போது நீர் குமிழி துள்ளி துள்ளி ஓடும் போன வேகத்திலே அது உடையும் அதற்க்கு கூட அவர் கதை சொல்லியிருக்கிறார் ஒரு உண்மையாக நடந்த வழக்கு சம்பந்த பட்ட கதை  கதைகள் தத்துவங்கள் என்று நான் சின்னிலேயே கேட்டு கேட்டு வளர்ந்தாலேயோ என்னமோ எனக்கு  உலகத்திலே உள்ள தமிழ் கதைகள் அத்தனையும் படிச்சு முடிக வேணும் என்ற ஒரு ஆவல் அது இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

மழையிலே நனைய மனசுக்குள்ளே ஒரே ஆசை எனக்கு ஆனால் எனது தாயார் சரியா பயபடுத்தவா மழைக்குள்ளே நனைந்தால் காய்சல் வரும் என்று  ஒரு காலை தன்னும் வெள்ளதிலே வைத்து பார்க விட மாட்டா அப்படி ஒருக்கா வைச்சனோ உடனே போய் கால் கழுவி போட்டு செருப்பு காலிலே போட்டு கொண்டுதான் வீட்டுக்குள்ளேயே நிக்க சொல்லி மிரட்டவா  அன்று அம்மாவின் மிரட்டலுக்கு பயந்து மழையிலே நனையவில்லை ஆனால் ஒரே ஒரு நாள் ஆசை தீர ஸ்கூலிலே நல்ல மழைக்குள்ளே பிரண்ட்ஸ் ஓடே நனைந்து விளையாடி வீட்டை வந்ததும் உண்மையா எனக்கு காய்சல் வந்தே விட்டது  அத்தோடே மழைக்குள்ளே நனைகிற ஆசையை நான் கை விட்டு விட்டேன்

ஒவ்வொரு வருடமும் மழை காலம் வந்தாலே ஊரிலே வெள்ளம் புயல் வந்திடுமோ என்று பயந்து சாவினம்  மாரிகாலம் வர முன்பே உணவு பண்டங்கள்  அரிசி- பருப்பு- மா போன்ற பொருட்களை எல்லாம் அதிகமாவே வாங்கி ஸ்ரொக் பண்ணி வைப்பினம் ஸ்ரோ ரூமிலே

ஒரு முறை அப்போ எனக்கு ஒரு பன்னிரண்டு வயது இருக்கும் நல்ல வெள்ளம் எங்கள் வீட்டு ஐந்து படியும் தாண்டி மேலே வருமா போலே வெள்ளம் வந்து  சளக் சளக் என்று தளம்பிக் கொண்டு நின்றது அம்மா எதிர்பார்த்தா போலே கிணற்றுக்குள்ளே வேறே வெள்ளம் போய் விட்டது அன்றுதான் எனக்கு தெரிந்தது வெள்ளம் மழை புயாலாலே எவ்வளவு பாதிப்பு வரும் என்று எங்களை கூட்டி கொண்டு போய்  மெயின் ரோட்டில் இருந்த எங்கள் மாமா வீட்டிலே விட்டு போட்டு வந்தவர் எனது பேரனார் அந்த மழை புயல் வந்த போது அன்று அயலுக்குள்ளே எல்லா வீடுகளிலும்  பெரிய பாதிப்பு கொஞ்சம் தள்ளி ஒரு குடிசையில் வாழ்ந்த ஒரு தம்பதிகள் தென்னை மரம் வழுந்து அன்று உயிர் நீத்த செய்தி கூட என்னாலே இன்னும் மறக்க முடியவில்லை அந்த சம்பவத்தின் பின் தென்னை மரங்கள் புயலுக்கு சாய்ந்து விழும் என்று மழை காலம் வர முன்னமே சில மரங்களை வெட்டி விழுத்துவார்கள்

அங்கு மழைகாலம் ஒரு திகில்காலம் தமிழ் சினிமா படங்களில் எல்லாம் மழையில் நனைவதும் மழையிலே நனைந்த படி பாடல் காட்சிகள் வருவதும் பார்க்க அழகாக இருக்கும் மழை பெய்யாவிடில் பூமி வறண்டு பயிர் வாடி பசுமை மறைந்து  விவசாயம் அழிந்து வறுமைதான் கோர தாண்டவம் ஆடும் ஆனால் அதே மழை பெருக்கு எடுத்து வெள்ளமாக ஓடினால் உலகம் அழியும் பயமும் திகிலும் ஆட்டி படைக்கும்

கவி மீனா