Samstag, 10. September 2016

நீரிழிவு நோயளிகளுக்கு ஒரு ரிப்ஸ்
 
நீரிழிவு நோயாளிகளுக்கு எமது உணவுகளே மருந்தாகவும் நோயை குறைக்கும் தன்மைகள் உள்ளதாகவும் உள்ளது என்பதை நமது நாட்டு மருத்துவர்கள் கூறுகிறார்கள்,  அதாவது எமது காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் மூலமே எமது நோய்களை மாற்ற முடியாது போனாலும் ஒரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மைதான்.
 
பொதுவாக எல்லாருக்கும் தெரியும் பாவற்காய் நீரிழிவு நோயை குறைக்க வல்ல மரக்கறியாகும், அதே போலே வெண்டிக்காயயும் இரத்தத்தில் உள்ள குளோக்கோஸின் அளவை குறைக்க வல்லது இன்சுலின் பெருக்கி ஆக உள்ளது என்கிறார்கள்.
 
வெண்டிக்காயை அடியிலும் நுனியிலும் வெட்டிப்போட்டு தண்ணிக்குள் ஊற வைத்து அந்த நீரை குடிக்க இரத்தத்திலுள்ள  குளோக்கோஸின் அளவு குறையும் என்பது மருத்துவம்,  அதை  நாட்டு மருத்துவர்கள் கூறி விட்டார்கள் ஆனால் நான் சொல்ல விரும்புவது என்னவெனில்
 
வெட்டி எறிகிற அந்த அடியும் நுணியும் துண்டுகளே போதும் ஒரு கப் தண்ணியில் ஊற வைக்க, அடுத்த நாள் காலை அந்த நீரில் நிறைய விழு விழுப்பு வந்திருக்கும் அதை குடித்து வரலாம் வீணாக முழு வெண்டிக்காயை ஊற வைத்து பின் தூக்கி எறியாமல் இப்படி செய்து பாருங்கள்.
 

மேலும் வல்லாரை, முருங்கை இலை, வெந்தயம், கருவா,  கருவேப்பிலை போன்ற எமது நாட்டில் கிடைக்கும் இயற்கை காய்கறி களும் மூலிகைகளுமே நீரிழிவு நோயாளிகளுக்கு அன்றாடம் உணவில் சேர்க வேண்டிய பொருட்களாகும்.
 
இந்த நடை முறையும், நடை பழக்கமுமே நீரிழிவு நோயாளிகளை நலமாக வாழ வைக்கும் என்பதில் ஐயம் இல்லை.
அதற்க்கு மேலாக மன அமைதியும் மகிழ்சியான வாழ்வும் தரும் ஆறுதல்தான் நோயாளிகளுக்கு அரு மருந்தாகும்.
கவி மீனா
வெள்ளை மனம்
 

 
 
வெள்ளை பூ பூத்திருக்கு
வெண் மேகம் கூடியிருக்கு
வெண்மதியும் ஓடி வந்திருக்கு
வெள்ளை மனங்கள்தான் எங்கே
 
 
இந்த மானிலத்தே வெள்ளை மனம்
 கொண்ட மானிடர்தான் எங்கே?
கவி மீனா

Sonntag, 5. Juni 2016

சை சை
 
 
டங் டங் என்று ஒரு ஓசை
அது மழை துளி பேசும் ஒரு பாசை
இது நம் காதில் கேட்கும்  இசை
இயற்கை சொல்லும் அதன் மனசை
அதை கொண்டு வருவது காற்றின் விசை
 
 
 
 
 
சிலர் பேச்சோ ஒட்டும் பிலாக்காய் பசை
நாள் பூராய் போடும் சிலரது வாய் அசை
அழிவை தேடி தருவதே நம் ஆசை
றொட்டிக்கு மாவை கையாலே பிசை
 
 ஒருவர் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடினால் எசை
குற்றம் புரிந்தால் அன்று கிடைக்கும் அடி கசை
பேயாக அலையாதே நாளும் எண்ணி காசை
அழித்து விடு உன் உள்ளத்திலுள்ள மாசை
கவி மீனா
 
அரளி பூ
 


இது ஒரு நஞ்சு நிறைந்த பூ மரம் வெள்ளை சிவப்பு என இரு நிறங்களில் நான் கண்டு இருக்கிறன்
அரளியிலும் செவ்வரளி பொன்னரளி என்றும் பல நிறங்களிலும் இருக்கு என்பதை நான் வாசித்து அறிந்துள்ளேன்
இந்த பூவை பெண்கள் தலையில்  சூடுவதில்லை கோயில்களுக்கு அர்சனைக்காகவே கோயில் நந்தவனங்களிலும் வளர்கபடுகின்றன
ஊரில் இது காடு கரம்பு குளக்கரை வாய்கால் ஓரம் என எங்கும் காணப்படும் இந்த பூ மிக அழகாக இருக்கும்
இருந்தும் வீடுகளில் இதை வளர்க்க பெரிதும் யாரும் விரும்புவதில்லை காரணம் பயம்தான்
இதில் பூ முதல் வேர் காய் வரை சஞ்சு தன்மை இருப்பதால் அதை தெரியமல் தன்னும் யாராச்சும் பிள்ளைகள் தொட்டு அளைந்து வாயில் வைத்தால் மரணிக்க நேரிடும் என்ற பயத்தில் இந்த மரம் வீடுகளில் வளர்பது குறைவு
ஆனால் கோயிலில் அர்சனைக்காக இந்த பூக்களை பறிக்கிறார்கள் அல்லது யாராச்சும் தற்கொலை செய்ய விரும்புபவர்கள் இந்த மரத்தின் காய்களை பறித்து அரைத்து சாப்பிட்டு இறப்பதாக பல  தமிழ் படங்களில் காட்டுகிறார்கள்
இதை ஜேர்மனியில் ஒலியாண்டர் ( Oliyander ) என சொல்வார்கள் இது இங்கு விலை உயர்ந்த பூக் கண்டு  இங்கு சமர்காலங்களில் வெளியில் வைக்கலாம் குளிர்காலங்களில் சட்டியில் வளர்கும் பூக்கன்றுகள் உள்ளுக்கு எடுத்து வைக்காவிடில் பட்டு விடும்
 
நஞ்சு மரம் என்று தெரிந்தும் நானும் இங்கு பல்கணியில் வைத்து வளர்கிறன்
நச்சு பாம்புக்கு பால் ஊத்தி வளர்பது போலே
தண்ணி ஊத்தி வளர்கிறன் மரம் தானாக வந்து என்னை கடிக்காது என்பதால்
 
கண்ணை பறிக்கும் அழகான  பூவுக்கு இப்படி ஒரு நஞ்சு தன்மையா? என சிந்திக்க தோன்றுகிறது
கண்ணுக்கு அழகாக இருக்குது என்று நாம் எதையும் ஆசை படகூடாது என்பதற்கு இது ஒரு இயற்கை யின் எடுத்து காட் டோ?
இறைவனின் படைப்பில் எத்தனை புதுமை ?
 
கவி மீனா

Samstag, 28. Mai 2016

விழாம்பழம்


பல காலத்தின் பின் அகப்பட்டது ஒரு விழாம்பழம்
சும்மா விடுவனா? அடித்து உடைத்து
பழத்தை கரண்டியால் தோண்டி எடுத்து சக்கரை போட்டு
குளைத்து சாப்பிட்டால் ருசியோ ருசி
புளிப்பும் இனிப்பும் கலந்த நல்லதொரு சுவை.

விழாம்பழம் ஒரு தெய்வீக பழமாக கருதுவதால்தான் கோயில் பூசைகள், சரஸ்வதி பூசை போன்ற நேரங்களில் கடவுளுக்காக நெய்வேத்திய பழமாக இதை உபயோக படுத்துகிறார்கள்.
விழாம்பழம் ஆனைக்கும், ஆனை முகத்தோனுக்கும் பிடித்த பழமாம் இதை நாள்தோறும் நாம் உண்டு வந்தால் எமக்கு மனக்கட்டுபாடும்,
மனோ வலிமையும் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள் சித்தர்கள்.

அத்துடன் பித்தத்தால் வரும் நோய்களையும் செமிபாட்டு  கோளாறுகளையும் இந்த பழம் போக்க வல்லதாம்
நித்தமும் கிடைத்தால் சாப்பிடலாம் ஆனால் எமக்கு ஆது அரு மருந்தாக அல்லவோ இருக்கின்றது.
ஊரிலை வாழும் காலத்திலும் இந்த மரம் பெரிய வளவுகள் உள்ள இடங்களில் காணப்படும், நகரங்களில் ஒரு சில மரமே காணக்கூடியதாக இருந்தது.

அன்று வூட் அப்பிள் இருக்க மேலை நாட்டு அப்பிளை தேடி அலைந்தார்கள் மேலை நாட்டில் வாழும் என் போன்றவர்களுக்கு ஊரை ஞாபக படுத்தும் இப்பழம் சுவையும் அதை சாப்பிடும்போது மனதுக்கு ஒரு நிறைவையும் தருகிறது என்பது உண்மைதான்.


கவி மீனா
மனிதன் மடிந்தால்


காய்ந்த மரமும் விறகாகுது
கருகிய சருகும் பசளையாகுது
அறுத்த புல்லும் வைக்கோல் ஆகுது
உதிர்ந்த பூக்களும் வாசனை திரவியமாகுது
வெடிச்ச பருத்தியும் பஞ்சாகுது
விழுந்த பழங்களும் விதையாகுது

செத்த மீனும் கருவாடாகுது
உடைந்த முட்டையும் ஒம்லெட் ஆகுது
வெட்டிய ஆடும் பிரியாணியாகுது
மனிதன் மடிந்தால் யாருக்கு லாபம்
இறந்த பின்பும் வெறும் தொல்லையாகிறான்
எழுதா காணிக்காக சொத்துக்காக
இருப்பவரை கூட அடிபட  வைத்தே சாகடிக்கிறான்
இதுதான் உண்மை
உணர வேண்டிய உண்மை

கவி மீனா

Sonntag, 24. April 2016

சுத்துது சுத்துது
 
சுத்துது சுத்துது சுழன்று சுத்துது
கன நேரம் கடந்தும் சுத்துது
கணணி திறக்க ஒரு வளையம் சில நேரம் சுத்துது
அதை பார்த்து பார்த்து கண்ணும் சுத்துது
 
கடிகார முள்ளில் கம்பி சுத்துது
சத்மிட்டு  சுழன்று சுத்துது
கால சக்கரம்  சுழன்று சுத்துது
அதில் மனித வாழ்வும் நின்று சுத்துது
 
 
சுத்துது சுத்துது பூமி சுத்துது
கண்ணுக்கு தெரியாமலே அதுவும் சுத்துது
சூரியர் சந்திரர் சேர்ந்து சுத்துது
அதில் கோள்களுமே ஈர்பில் சுத்துது
 
 
வண்டி சக்கரம் உருண்டு சுத்துது
சுமைகளும் அதில் ஓடி சுத்துது
என்னை சுற்றி எல்லாம் சுத்துது
அதை நினைத்து பார்த்தால் தலையும் சுத்துது
 
சுத்துவது எல்லாம் சுத்தாமல் நின்றாலும்
பூமி மட்டும் சுத்தி கொண்டே நிக்குது
முடிவு இல்லாமல் சுத்தி கொண்டே நிக்குது
கவி மீனா