Samstag, 27. April 2024

ஆண்டவன் இருப்பதை

பிறந்தாய் வளர்ந்தாய்

பெத்தாயின் மடியில் தவழ்ந்தாய்

நடை பயின்று ஓடி ஓடி திரிந்தாய்

யார் சொல்லும் கேட்காது

அடங்கா பிடாரியாய் ஆனாய்

ஆணவம் கொண்டே அலைந்தாய்

ஒரு பேதை பெண்ணை கண்டாய்

சித்தம் தடுமாறினாய்

அவளை சிக்க வைக்க

பல திட்டங்கள் தீட்டினாய்

நல்லவன் போலே நடித்தாய்

நயவஞ்சகமாய்  அவளை பிடித்தாய்

தாலி கட்டி முடிந்த பின்னே

அதிகாரம் காட்டினாய் அவளை

அடிமை போலே ஆக்கினாய்

இன்னும்  பல அடிமைகளை தேடினாய்

அவர்களுக்கும்  நீயே

கோமான் என நினைத்தாய்

 

ஆணவத்தில் ஆடினாய்

அகங்காரம் கொண்டே அவதியுற்றாய்

உன் குறை தெரியாமல் கூத்தடித்தாய்

 விட்டிலே  சட்டி முட்ட வாசமிகு கறியருந்தாலும்

அடுத்தவன் சட்டியை எட்டி பார்த்தாய்

கண்ணுக்கு அழகாக மனைவி இருந்தும்

அடுத்தவன் பெண்டாட்டிகளோடு

பொழுதை போக்கினாய்

குடித்தாயய் வெறித்தாய்

கொடுரமாக பேசினாய்

 வானத்தில் பறக்கும் காற்றாடி போலே

 குத்துக்கரணமும் அடித்தாய்

ஆண்டவன் இருப்பதை மறந்தாய்

அதனால் நுலறுந்த பட்டமாய் துலைந்தாய்

அடைகலம் புகுந்த பெண்ணை

அவணியிலே அவதியுற வைத்தாய்

இன்று வயோதிப மடமே

அடைகலமாய் கொண்டாய்

ஆண்டவன் தீர்பு இதுவே

கவி மீனா

 

 

Sonntag, 21. April 2024

 டை

வடை சுட்ட ஆச்சிக்கு வடை போச்சுது

கடை போட்ட மனிதனுக்கு கடனாய் போச்சுது

அடை சுட்ட அம்மாக்கு பல்லு போச்சுது

படையோடு மக்கள் அன்று போருக்கு போனது

இன்று பலர் வெட்டி பந்தா பேசி

வெட்டியாய் நடை போட்டு திரியுதுகள் பாரு


 

இரட்டை சடை போட்ட பெண்ணும்

இடை காட்டி சேலை கட்டுது

இல்லை தொடை காட்டி குட்டை சட்டை போடுது

கறி விருந்து படையலை கண்டு

மடை திறந்த வெள்ளம் போலே

மனசும் பொங்குது

 

இன்று டை இல்லா தலையும் இல்லை

முடை இல்லா வாழ்வும் இல்லை

விடை தெரியா பரீட்சை போலே

ஓடுது வாழ்க்iகை

அடை மழையில் அகபட்டு

குடை இன்றி அவதியுறும்  வேளை

பொடிநடை போட்டு போக முடியுமா சொல்லு

கவி மீனா

 

Mittwoch, 27. März 2024

வாழதான் முடியவில்லை

தட்டு நிறைய சோறு இல்லை

பெட்டி நிறைய மருந்திருக்கு

வட்ட நிலா வானில் இல்லை

வாழ்கையிலும் வெளிச்சம் இல்லை

எட்டு எட்டாய் பிரித்தாலும்

இன்பம் மட்டும் எட்டவில்லை

 

விட்டு விட்டு போகும் உறவுகள்

கை விட்டாலும் விடுகுதில்லை

பட்டு பட்டு தெளிந்தாலும்

பாதையிலே தெளிவு இல்லை

சொல்லி சொல்லி அழுதாலும்

துன்பத்துக்கும் முடிவு இல்லை

 

மனித வாழ்கை துன்பம் என்று

முன்னோர் சொல்லியும் புரியவில்லை

வாழ்ந்து பார்த்தால் என்ன என்று


வந்து விட்டேன் வாழதான் முடியவில்லை

இவ்வுலகில் வாழதான் முடியவில்லை

கவி மீனா

Sonntag, 18. Februar 2024

 நாவிலே தேனை பூசி

கை தூக்கி விடுபவன் நண்பன்

காலை வாரி விடுபவன் துரோகி

அணைத்து வாழ்பவன் உறவு

தூற்றி செல்பவன் எதிரி


இத்தனை பேரும் நம்மை சுற்றி

பழகி பார்த்தால்தான் புரிந்து விடும்

நிலையற்ற மானிட வாழ்வினிலே

நிலைத்து நிற்பவர் எவரும் இல்லை

காசும் காமமும் தேவை என்று

உலக வாழ்கை ஓடுதடா

ஆளை ஆளு ஏமாற்றி வாழ்வது சுலபமடா

ஏமாந்து நிற்பது பாவமடா

பாசம் அன்பு என்பதெல்லாம்

நாவிலே தேனை பூசி

பின் நயவஞ்சகமாய் முதுகிலை

குத்தும் வேலையடா

 

வந்தோம்  போனோம் என்றிருந்தால்

வலிகள் இல்லாமல் வாழ்ந்திருப்போம்

வலிய வலிய தேடி பழகி

மனசில் சுமைகளை கூட்டாமல்

குப்பை என்றால் கூட்டி தள்ளி

வீட்டையும் மனசையும்

 சுத்தமாக வைத்திடுவோம்

லேசான மனசுக்கு வலியும் இல்லை

இல்லாத உறவுக்காய் கவலை இல்லை

இப்படி வாழ பழகி விட்டால்

துன்பங்கள் தரும் நட்புகள் உறவுகள் கூட

தூசியை தட்டி விடுவது போலே

ஒட்டாமல் பறந்து போய் விடும்

மனசுக்கும் அமைதி கிட்டிவிடும்

கவி மீனா

 

சட்டி பிரட்டி

இது என்ன தலைப்பு என சிரிக்காதீர்கள் வாசித்து பார்த்து உண்மையை புரிந்து கொள்வதே சறப்பு


இவங்க ஊரிலை சட்டி பிரட்டி திண்டவங்கள் இங்கை வந்து பெரிய ஆள் மாதிரி கதை விடுகினம் எனடு சொல்பவர்கள் உண்டு என் காது படவே ஒருத்தர்  இப்படி சொன்னதை கேட்டும்  இருக்கன்

ஆனால் சட்டி பிரட்டி சாப்பிட்டவன்தான் ஊரிலை சுகமாக நீண்ட காலம் வாழ்ந்து இருக்கிறான் காரணம் என்ன தெரியுமா?

 நாம சமைக்கும் போது வெந்தய குழம்பு, பொரித்த வத்தல் குளம்புகளை வைக்கும் போது  வதக்க போடுகிற வெந்தயம் பெரும் சீருகம் கடுகு எல்லாம் குழம்பு சட்டியிலை அடியிலைதான் இருக்கும் மேலால குழம்பை எடுத்து சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டு போறது பெரிய விடயமே இல்லை

கடைசியலை அந்த சட்டிக்குள்ள இருக்கிற குழபுக்குள்ளே சோற்றை போட்டு பிரட்டி எடுக்கும் போதுததான் அந்த வெந்தயம் சீகம் கடுகு எல்லாம் சோற்றுடன் சேர்ந்து வருகிறது பாருங்க , அந்த சோற்றை வெந்தயத்தோடும் சீரகம் கடுகும் சோத்து சாப்பிட்டவனுக்குதான் ஆரோக்கியம் அதிகமாகிறது, பிரட்டின சட்டி சோற்றை சாப்பிட்ட நாய் கூட நோயின்றி வாழ்ந்ததுதாள் உண்மை!

 அவனுக்கு சுகர் வருத்தம் இருந்தாலும் குறைகிறது  சீரகம் பெரும் சீரகம் கடுகை சேர்த் சாப்பிட்டால் சீரண சக்தி அதிகரிக்கிறது வாய்வு தொல்லை இல்லாடமல் நின்மதியாக உறங்க முடிகிறது, இது தெரியாமல் மேலே உள்ள குழம்பை ஊற்றி முதல் சாப்பாடு சாப்பிட்தை பெருமையாக பேசுபவர்கள்

அறியாமையில்தான் பெருமிதம் கொள்கிறார்கள் உண்மையில் அடியில் உள்ள கறியும் அதை பிரட்டி எடுத்து சாப்பிடவனும்தான் அந்த வெந்தயம் சீரகம் கடுகு கறிக்கு போட்டதன் பலனையே அடைகிறார்கள் இதுதாங்க உண்மை

எமது உடல் நலனுக்காகவும் சுவைக்காகவும் சமைக்கும் போது கறிக்கு போடுகிற  வெந்தயம் பெரும் சீரகம் கடுகு கருவேப்பிலைகளை எறியாமல் சேர்த்து சாப்பிட்டு உடல் நலத்தை பேணுவதே மேல்

சில பேரு இவைகளை கறிக்குள் போடுவதே இல்லை, காரணம் காசு மிச்சம் பிடிக்க இல்லை இந்த பொருட்களை வாங்காமல் விட்டதாக இருக்கலாம்

ஆனால் நாம் சமைக்கும் போது பாவிக்கும் ஒவ்வொரு மூலிகைகளுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு இதை உணர்ந்து சமைத்தவர்கள் அந்த நாளையிலே நோய்கள் இன்றி நீண்ட காலம் வாழ்ந்திருந்ததும் உண்மை!

கவி மீனா

Sonntag, 21. Januar 2024

 

படிப்பினையாகும்

கரும்பு கூட அடிவரை இனிக்காது

வாழ்க்கையும் இறுதி வரை சுவைக்காது

பசியிருக்கும் வரைதான் உணவும் ருசிக்கும்

பருக பருக பாலும் கசக்கும்

பழக பழக நட்பும் வெறுக்கும்

கை கோர்த்து நடந்த உறவும் கைகலப்பில் பிரியும்

ஒரு தட்டில் உண்ட உறவும் ஒட்டாமல் போகும்

 

நீ பாதி நான் பாதி என்று சொன்ன  காதலும்

நீ யாரோ நான் யாரோ என்று மாறி போகும்

உடல் உரசி கண்ட காமமும் முதுமை வர காணாமல் போகும்

தென்றலாய் வீசிய காற்றே புயலாக அடிக்கும்

தூரிய சாரல் பெரு வெள்ள பெருக்காய் ஓடும்

காலங்கள் ஓட காதலும் ஓடும்

மனங்களும் குணங்களும் மாற

மனிதர் வாழ்க்கையும் ஒரு படிப்பினையாகும்

கவி மீனா

 

பசி வந்தால்

Mexico இலே புழு,  பெரிய கறுத்த றும்பு எல்லாம் பொரித்து சாப்பிடுறாங்கள்  என்று ஒரு TV (Galileo )  புரோகிராமில் பார்தனான்,

சீனாகாரன் பாம்பு,  பங்கொக் தாய்வான் காரங்கள் தவளை, எலி ஆபிரிக்காக காட்டுவாசிகள் வொவ்வால், புழு இப்படி எல்லாம் சாப்பிடுறாங்கள்,  எங்களுக்கு அருவருப்பானவை அவங்களுக்கு சுவை மிகுந்து ( delicates food ) உணவு.

அடுத்வன் என்ன செய்யுறான் என்ன சாப்பிடுறான் என்று பார்கிற நம்ம சனம் கூட ஆதிகாலத்தில் சகல காட்டு மிருகஙங்ளையும் வேட்டையாடி சுட்டு சாப்பிட்டுதானே வாழ்ந்தார்கள், கால போக்கிலை கையாலே அள்ளி நக்கி சாப்பிட்ட தமிழர்கள் இன்று மேசையும் கத்தி கரண்டியும் பாவித்து சாப்பிடுற அளவுக்கு காலத்தின் வளர்ச்சியும்

நாகரீகமும் மேலை நாட்டு கலாச்சாரமும் நமக்குள்ளே கலந்து விட்டதுதான் உண்மை!

பசி வந்தால் பத்தும்  பறந்திடும் என்பது பழnkhழி, இப்ப கையிலை காசு வாயிலை தோசை என்றாகி விட்டது நிலமை, அடிக்கடி ஏதாச்சும் நொருக்கு தீனிகளை சாப்பிடுவதால் பசியே எடுப்பதில்லை சில பேருக்கு, எக்கசக்க மாத்திரைகளை போடும் நோயாளிகளுக்கு பசி எடுப்பதில்லை காரணம் மருந்துகளின் பக்க விளைவு நாவின் சுவையை கூட இல்லாமல் பண்ணி வீடுகிறது பாருங்க!


அந்த நாளிலை கூழ் என்று காச்சி சிரட்டையிலை வைத்து குடித்தவனும், பழைய சோற்றை அடுத்தநாள் போட்டு பிரட்டி அள்ளி சாப்பிட்டவனும், ஆடு மாடு வெட்டி எறியுற களிவு நிறைந்த குடலை கூட எறியாமல் சமைத்து சாப்பிட்டவனும்  கூட இன்று வெளிநாடு வந்த பின் அதையே மேசையிலை வைத்து சாப்பிடுறான் இது தெரியாமே நாம அடுத்த நாட்டு காரன் என்ன சாப்பிடுறாங்கள் என்று ஆராய்ச்சி செய்கிறோமே இதை நினைத்தால் சிரிப்புதானஇ வருகிறது

உலகம் ஒன்றுதான்,  உயிர்களுக்கு இரத்தமும் ஒரே நிறம்தான் ஆனால் அதில் வாழும் மனிதர்கள்தான் நிறம் மாறி, குணம் மாறி, மனம் மாறி, பழக்க வழக்கங்களும் மாறி வாழுறாங்கள்.

எல்லா உயிர்களையும் கடவுள் மண்ணில்தான் செய்து  உயிர் கொடுத்ததாக சொல்ல படுகிறது  ஆனால் அந்த உயிருக்குள்ளே உள்ள மனசை எப்படி உருவாக்கினார்?

 

கவி மீனா