Montag, 16. Januar 2023

 

வருஸம் பிறந்தாச்சு 

 புது வருஸம் பல மாற்றங்களை கொண்டு வரும் வாழ்வில் நன்மைகள் நடக்கும்  துன்பமான நிலமைகள் மாறும் என பல நம்பிக்கையோடு எல்லோரும் ஒவ்வொரு முறையும் புதுவருஸத்தை மகிழ்சியோடு வரவேற்கிறோம்

ஆனால் என்னமோ அவ்வளவு கெதியாக எந்த மாற்றமுமும் நிகழ்வதில்லை  3 வருடமாக நாட்டை விட்டு கொரோனாவையும் துரத்த முடியுதில்லை  ஏறுகின்ற விலைவாசிகளையும் நம்மாலே கட்டுபடுத்த முடியலை மேலும் பரவுகின்ற காச்சல் தடிமல் கிரிப்ப  போன்ற தொத்து நோய்களும் வேகமாக பரவிகொண்டு மனிதர்களுக்கு பெரும் தொல்லைகளை கொடுத்துக்கொண்டுதானே இருக்கின்றது இதுக்கு எல்லாம் ஒரு நாள் விடிவு வந்தால் ஒழிய வாழ்க்கையில் மனிதர்களுக்கு நின்மதியே இல்லை

 

கலண்டர்கள் நாள் காட்டிகள் காட்டாவிடில் எங்களுக்கு புது வருஸம் பிறப்பது கூட தெரியாமல் போய்விடும் காரணம் உலகில் எந்த மாற்றமும்  தெரிவதில்லை காடு கடல் மலை மேகம் இயற்கை என எல்லாமே அப்படியே இருக்க காலம் மட்டும் எப்படி மாறுது? அதுதான் புரியாத புதிராக என்றும் உள்ளது, நாம் வாழும் காலத்தில் கூட ஒரு யுகமும் மாறியது அதாவது கலியுகமும் மாறி கிருதா யுகமும் நடக்குது ஆனாலும் மாற்றங்கள் எதுவும் கண்ணுக்கு புலப்படவில்லை

விஞ்ஞான வளர்சியிலே மனிதன் கண்டு பிடித்த பிளேன் முதல் தரையில் கார் றெயின் மோட்டார் வண்டி எல்லாம் அறம்புறமாக ஓடுது ஒரே துசும் துகளும் அதனால் காற்றில் அழுக்குகளாக நிரம்புது சுற்றாடலை மாசு படுத்தும் இந்த வானங்களின் சத்தம் வேறே காதை பிளக்கும் அமைதியான சூழல் குறைந்து கொண்டே போகிறது இந்த வாகன போக்கு வரத்து இல்லாட்டி மனிதர்கள் நாடு விட்டு நாடோ இல்லை நகரங்கள் மாறவோ இல்லாது போனால் அன்றாட வேலைகளை செய்யவோ வாழவோ முடியாமல் எல்லாமே ஸ்தம்பித்து போய்விடும்

இப்படியான வசதிகள் இல்லாத ஆதிகாலத்தே மனிதன் எப்படிதான் எல்லாத்தையும் செய்தான் புதிய வழிகளை வாழ்க்கை முறைகளை கண்டு பிடித்தான்? என்பதை விஞ்ஞானரீதியாக ஆராய்சிகள் செய்துகொண்டே இருக்கிறார்கள் இன்றுவரை!

 

யோதிடர்கள் ஒவ்வொரு வருஸம் பிறக்கும் போது அந்த மாற்றம் வரும் இந்த மாற்றம் வரும் இன்னாருக்கு இன்னது நடக்கும் என்று சொல்வதை நம்பி புது வருஸ் பிறக்கட்டும் என்று காத்திருப்போரும் உண்டு

நடப்பது நடக்கட்டும் வருவது வரட்டும் என்று என்னை போலே சிலரும் வந்தோம் வாழும் வரை வாழ்வோம் போகும் போது போவோம் என துணிச்சலாக சிலரும்

இருக்கும் வரை அடுத்தவனை வதைத்து நசித்து அடித்து நொருக்கி சுயநலமாக வாழ நினைப்போரும்

ஏதோ ஏலககூடிய உதவிகளை அல்லது நல்ல வழிகாட்டலை மற்றவர்களுக்கும் காட்டி இருப்பதை வைத்து மனநிறைவோடு வாழ்வோருமாக இந்த உலகில் பல விதமாய் மனிதர்கள்

வாழ வருஸம் பிறந்தாச்சு பாப்போம் 2023 எமக்கு என்ன மாற்றங்களை தரபோகிறது  பொறுத்திருந்துதான் பார்போமே!

கவி மீனா

 

 

இருண்ட வானில்

பொங்கலை பொங்கி இருண்ட வானில்

ஆதவனை தேடுகிறோம்

மூடிய முகில் கூட்டத்திலே


சூரியனை தேடுகின்றோம்

நோயும் நொடியும் பொங்கி வழியும்

போதினிலும் நின்மதியை தேடுகின்றோம்

 

காமம் குரோதம் சுயநலம் என வாழும் உலகில்

உண்மை அன்பை தேடுகிறோம்

துரோகம் செய்யும் மனிதருக்குள்

நல்ல மனசுகளை தேடுகிறோம்

நாடுகள் போடும் சண்டைக்குள்

அமைதியை நாமும் தேடுகிறோம்

 

தேடி தேடி அலைவதிலே காலமும்

போகுது கடுகதியில்

மறைவில் நிக்கும் ஆதவனும்

மனதில் நிக்கும் ஆண்டவனும்

வந்தால் ஒழிய வழியில்லை

வாழ்க்கையில் எதுவும் சரியில்லை

கவி மீனா