Sonntag, 11. Dezember 2022

 ஒரு கூத்து 

அங்கும் இங்கும் ஓடுது காற்று

நீ ஓடி ஐன்னல் கதவை சாத்து

பாத்து பாத்து நடை போட்டு போகுது வாத்து

இங்கு கொண்டாட்டம் வந்தாலே

நெருப்பிலை வாட்டி பொரிந்தது நேத்து



பொய்யான வாழ்க்கையை மாத்து

இல்லை  நீ போடுற வேஸமே ஒரு கூத்து

நட்டு விளைந்தால் அது நெல்லு நாத்து

அதை வெட்டி அறுவடை செய்யுறான் பாரு காத்து

தினம் தேடி தேடி சேர்பது சொத்து

அதை விட்டு பிரிய மனமில்லாது போகிறான் செத்து

கவி மீனா

 

நாட்டு நடப்பு

என்னத்தை சொல்ல?  வர வர நாட்டிலை கொடுமைகளும் கொடியவர்களும் கொடும் நோயும்தான் கூடி போச்சுது முகங்களை மூடி திந்தாலும் மனுசர்களின் மனசிலை உள்ள ஆசைகளை மூடிவிட வழி இல்லை


எப்படா அடுத்தவனை அடிச்சு பறிக்கலாம் எவன் வாழ்வை கெடுக்கலாம் என்பதிலையே அலைகிறது சிலர் மனசு பாருங்க!

ஊரிலை தனியா சொந்த வீடு வளவிலை இருந்த ஒரு மனுசன் இறந்து விட்டாலே பக்கத்து வீட்டுகாரன் உடனே அந்த காணியை தனதாக்க படாத பாடு பட்டிருக்கிறான் செத்தவீடு நடந்து ஒரு கிழமை இல்லை அடுத்த வீட்டு காணிக்கு  கம்பிவேலி போட்டு திறப்பு போட ஆயத்தம் பண்ணிட்டான்,  அது யாருக்கு சொந்தம்? காணிக்கு உரியவர்கள் யார்? என்ற ஒரு  பயமே இல்லை அடிதடி பொலிஸ் விதானை என்று போய்தான் கடைசியா வீட்டு திறப்பையே அவனிட்டை இருந்து பறித்தது என்றால் பாருங்களேன்  யாழ்பாணத்திலை அடுத்தவர்களுடைய காணிய கள்ள கோழியை  அமுக்கினா போல அமுக்கி எடுக்க எம்மட்டு திட்டம் போட்டு அவன் வேலைசெய்திருக்கிறான் என்று, அது போக உயிரோடு மனிதர்களும் வாழும் போது எட்டி பார்காத இரத்த சொந்தம் என்று சொல்லி  யாரோ எல்லாம் அந்த காணிக்கா அடி பட்டிருக்குதுகள் அது மட்டுமா?

அந்த காணிக்கும் வீட்டுக்கும் ஆசை பட்டு வீடு பூந்து நல்லவன் போல் நடித்து நாடகமாடி ஏமாற்று வேலைகள் பல செய்து பெண்ணை எடுத்து அடிபாட்டுன் பிரிந்து போன ஒரு 80 வயது கிழவனும் அந்த காணியை தான் எடுக்கணும் என்று  ஆடாத ஆட்டம் எல்லாம் இந்த வயதிலும் போட்டாருங்க, தனக்கு  என்று ஒரு தனி சுடலை வேணும் என்று நினைத்தாரோ தெரியலை பாருங்க, ஆசைக்கு வயது கூட இல்லை அதுக்குதான் சொல்லுறன்  தனது ஊரு விலாசத்தை கூட மாத்தியே சொல்லி திரிந்தாரு அது தன்டை காணி என்று,  அவரு வாயிலும் இப்ப மண்ணுங்க!  மண்ணுக்கு ஆசைபடுங்க அது உங்க சொத்தா இருந்தா ஆசை படுங்க, அடுத்தவன் சொத்துக்கு ஆசைபட்டவன்  அடாவடிதனம் பண்ணினவன் எல்லாம் நல்லாக வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை பாருங்க! முடி ஆண்ட மன்னரும் மண்ணுக்குதான் சொந்தம் இதிலை அடுத்தவன் காணிக்கு ஏன் அலையணும்? இதைதாங்க நான் கேட்குறன், இது கிட்டடியிலை நடந்த உண்மை சம்பவமுங்க அதையும் நாட்டு நடப்பிலை சொல்லிவிடுவம் எப்படி சனங்கள் பாடாய் படுதுகள் என்று பாருங்களேன்

 

இந்த கதை மட்டுமல்ல இன்னும் பல தரமான உண்மை சம்பவங்களை சொல்லதானே நான் இருக்கன்

இங்கை லண்டனிலை ஒரு கிழடு 84 வயதிலை செத்ததுக்கு,  அவ மவ சொல்லியிருக்கா செத்த வீட்டுக்கு போட்டு வந்து அவருக்கு சோக்கு வந்து செத்தது என்று அந்த கதை அப்படியே பரவி அது என்ன சோக்கு வருத்தம் என்று சனம் திக்குமுக்காடி நிக்குதுகள் பாருங்க!

பகிடி என்ன என்றால் ஊரிலை பள்ளிகூடமே போகாமே இங்கை வெள்ளத்திலை அள்ளு பட்டு வந்த குப்பைகளை போலே தாங்க சில பேரு அவைக்கு வாய்குள்ளை ஆங்கிலை வார்தைகள் பூராதுங்க! அந்த ஆங்கில சொற்களை அவர்கள் உருமாற்றி சொல்லி அது ஒரு புது உருவம் எடுத்து உலாவுது கொரானா போல

அந்த ஆளுக்கு வந்தது  Stroke (Schlaganfall ) என்று வைத்தியர் சொல்லியிருக்கிறார் இதுகள் இப்படி மாத்திட்டுதுகள், இவ தாங்க முந்தியொருக்கா எனக்கு சொன்னவ ஊரிலை இருக்கிற காணியை விக்கிறதுக்கு ஊருக்கு போக தேவயில்லையாம் பட்டாணி எடுத்து எழுதலாம் என்று அப்ப நான் கேட்டனான் அது என்ன பட்டாணி கடலையா நீ வறுக்கிறாய் என்று?

அவ சொல்ல வந்த ஆங்கில வார்தை  இதுதாங்க (Power of Attorney )  இவ என்னமாதிரி ஆங்கிலத்தை மாத்தி சொல்லி திரியுறா அதை நம்ப கூட ஆட்கள் இருக்கினம் பாருங்க காரணம் அவைகளும் ஒரே குப்பையிலே ஊறின மட்டைகளுங்க!

ஆங்கிலம் மட்டுமா? டொச் மொழியும் இப்படிதாங்க நம்ம சனத்துண்டை வாயிலை  அறம் புறமா உரு மாறி சவுண்ட் மாறி போகுது பாருங்க! ஆனாலும் இவர்களுக்கு படிப்பு இல்லை பாஸை தெரியாது என்பதாலே ஏதோ வாழ்க்கை முடங்கி போகலை பாருங்க, யாருடைய கையை காலை பிடித்தாவது அதுகள் தங்கடை காரியம் பார்க்க கூடிய வல்லமை படைத்தவர்கள்தானுங்க!

காரியம் முடிய பின்னாலை உதையுற சனங்களும் இவர்கள்தானுங்க! காரணம் ஊரிலை நல்லா வாழ்ந்தவனும் படித்தவனும் நல்ல இடத்திலை பிறந்தவனுக்கும் கூனி குறுகி நிண்டு அடுத்தவன்கிட்டை கை ஏந்தவோ உதவி கேட்கவோ தன்மானம் விடாது, அதனாலே அவனுக்கு  உதவி கிடைப்பது எல்லாம் கொஞ்சம் கஸ்டம்தான், இதுதாங்க யானைக்கும் எலிக்கும் உள்ள வித்தியாசம் எலி உள்ள பொந்து சந்து எல்லாம் பூந்து போகுது

யானையாலை முடியுமா?

இதை விட புலம்பெயர்ந்து வாழும் இளைய தமிழ் சமுதாயத்தினுடைய வாயிலை நம்ம தமிழ் மொழி படுற பாடு பரிதாபமுங்க,   ஒரு சொல்லும் உருபடியான உச்சரிப்போடு வராதுங்க  அப்படி பேசி தமிழை கொலை செய்யுறதை விட அன்னிய மொழியை பேசி வாழலாம் பாருங்க, தமிழுக்கு வந்த சாபகேடு இதுங்க!

இந்த கொரோனா முன்னுக்கு நிக்குதா பின்னுக்கு நிக்குதா இல்லை பக்கத்திலை நிக்குதா என தெரியாமல் இருக்குது இதிலை 2 பேரு ஒன்று கூட 500, 1000 பேரை கூப்பிட்டு கல்யாணம் வைக்குதுகள் தமிழ் பெற்றோர்கள்

முன்னைமாதிரி என்னமோ கன்னி கழியாத ஆணுக்கும் பெண்ணுக்குமா இப்ப திருமணம் நடக்குது? அதுகள் தாங்களாக வாழ தொடங்கி விடுங்கள் பெற்றவர்கள் தாங்கள் கொடுத்த காசுகளை வாங்கவும், தங்கடை பவிசை காட்டவும் கொண்டாட்டம் வைக்கினம் கடைசியிலே வந்து போனவைக்கு எல்லாம் கொரோனா பிடிச்சு போகினமாம்  இதுக்கென்ன சொல்ல போறீங்கள்? அரசாங்கம் எம்மட்டுதான் எடுத்து சொன்னாலும் யாரும் தள்ளி நிக்கினம் இல்லை ஒன்று கூடி கும்மாளம் போடவே நிக்கினம் பிறகு கொரோனா எப்படி போகும்?

குடுத்த காசை வாங்கணும் என விரும்பினால் வீட்டுக்கு முன்னாலை ஒரு பெரிய உண்டியலை வைத்து போட்டு எல்லாருக்கும் சொல்ல வேணும் நாங்க தந்த காசை கொண்டு வந்து உண்டியலுக்குள்ளை போடுங்கோ காரணம் நாம் எத்தனை நாள் இருப்பம் என தெரியாது என்று இது ஒரு யோசனை தாங்க !

செத்த வீடு வந்தா கூட ஒரு ஆளு மேலே போனதுக்கு எல்லாரும் கூடி ஒப்பாரி வைத்து அங்கும் கொரோனாவாம் அப்ப எல்லாரும் உடன் கட்டை ஏற போனமாதிரி அல்லோ இருக்குது சேர்ந்து அழுதாதான் துக்கமா?

தண்ணிக்குள்ளை சேர்ந்து கத்துற தவளைகளே இரவு முழுதம் தாளம் போட்டு கத்திட்டு விடிய செத்து போகுதாம்

சுத்தமும் சுகாதாரமும்தான் கொரோனாவை தள்ளி வைக்கும்  இது ஏன் புரிய மாட்டேங்குது நம்ம சனத்துக்கு?

நானும் அங்கிட்டு இங்கிட்டு கேட்டதும் நடந்ததுமாக கதை சொல்லிட்டன் பாருங்க  சுகம் பலமாக இருந்து எனி காலம் கை கூடினால் புதினங்களும் சேர்ந்தால் மீண்டும் சந்திப்பம் நாட்டு நடப்பில்

கவி மீனா