Donnerstag, 20. Februar 2014


பயம்

(அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமல் வாழ்வது திறமையடா

ஆறிலும் சாவு நூறிலும் சாவு)

 

பயம் என்றால் என்ன என்று தெரியாமல் பிறக்கின்றது குழந்தை அந்த குழந்தையின் அலறல் கேட்டு பெற்றவள்தான் பயந்து ஓடுவாள் என்ன நடந்தது என தெரியாமல் ஒவ்வொரு குழந்தையும் வளரும் போதுதான் பயம் என்னும் உணர்வுக்கு தள்ள படுகின்றது

வளரும் போது பெற்றவருக்கு பயந்து,  சில சயமயங்களில் அவர்கள் சொல்லும் பேய் பூச்சாண்டி பிச்சைகாரன்  என்ற கதைகளை கேட்டு பயந்து, பள்ளி பருவத்தில் ஆசிரியருக்கு பயந்து,  பரீட்சை நேரம் பாஸ் வருமா பெயிலாகுவமா என பயந்து, பருவ வயதில் சமுதாயத்துக்கும் தன் உணர்வுகளுக்கும் பயந்து

வேலை கிடைகாவிடில் எதிர்காலத்தை நினைத்து, பயந்து வேலை கிடைத்தால் முதலாளிக்கு பயந்து,  காதலித்தால் பெற்றுவர்கள் எதிர்பார்களா என பயந்து

கல்யாணம் இல்லை என்றால்  ஊரார் வாய்க்கு பயந்து கல்யாணத்தின் பின் கணவனுக்கோ, மனைவிக்கோ பயந்து  பிள்ளை இல்லை என்றால் மலடி என்று சொல்வார்களே என பயந்து பிள்ளைகள் இருந்தால் அவர்களின் எதிர்காலத்தை எண்ணி பயந்து பிள்ளைகள் வளர்ந்த பின் அவர்கள் கோவிக்காமல் இருக்க வேணும் என பயந்து

நாற்பதுக்கு மேலே நோய்க்கு பயந்து,    பணம் இருந்தால் கள்ளனுக்கு பயந்து, பணம் இல்லாட்டி வறுமைக்கு பயந்து,  காலம் பூராய் இப்படியே பயந்து பயந்து வாழ்க்கையை ஓட்டுகிறான் மனிதன்

வசதியில்லாதவன் அடுத்த நேரம் உணவுக்கும், உடைக்கும் என்ன வளி என எண்ணி அஞ்சுகிறான் நடுத்தர வர்க்கத்தினருக்கும் வருகின்ற கடிதங்கள் யாவும் என்ன கட்டு காசு கட்ட சொல்லி  வருகிறதோ என அஞ்சி அஞ்சியே வாழ்கின்றனர்.

சிலர் இல்லற வாழ்விலே நித்தம் நித்தம் சண்டை சச்சரவுக்கு பயந்து எந்த நேரமும் என்ன பிரச்சனை சண்டை வருமோ என அன்பில்லா வாழ்க்கையை பிள்ளைகளுக்காவும், ஊருக்காகவும், உறவுக்காகவும் அடிமைகள் மூட்டையை சுமப்பது போலே அன்பில்லா இல்லறத்தை வேதனையுடன் சுமந்து கொண்டே வாழுகிறார்கள்.

இதைவிட அடிக்கடி காலங்களின் மாற்றமும் இயற்கையின் சீற்றமும் வேறே பயத்தை கொடுக்க  புயல் வருமா? சுனாமி வருமா? பூகம்பம் வருமா? என இயற்கை வேறே இம்சை கொடுக்க அரசியல்வாதிகளாலே நாட்டிலே போரும் மூண்டு குண்டு வெடிப்புக்கும், பொலிஸ்சக்கும், ஆமிக்கும் ,   தீவிரவாதிகளுக்கும் பயந்து நடுங்கி  சொந்த வீடடையுடம் நாட்டையும் உறவுகளையும் விட்டு ஓடி  நாடு விட்டு நாடு ஓடி அகதியாகி அன்னிய நாட்டிலே அன்னியனுக்கும் பயந்து, அன்னிய மொழி தெரியாமல் பயந்து அலைந்து  எப்ப பிடிச்சு திருப்பி அனுப்புவானோ என பயந்து பயந்தே காலம் ஓடி

சொந்த நாட்டிலே படிக்க விரும்பாத பிற பாசையை இங்கு வந்து இருப்பதற்காக விழுந்து விழுந்து படித்து அன்னிய நாட்டு பிரஜா உரிமை எடுக்க நாய், பேயாக பாடு பட்டு  அப்பாடா ஒரு மாதிரி வேற்று நாட்டிலை இடம் பிடிச்சாச்சு என்று பார்த்தால்,  வெளி நாட்டு சுகாதாரமும் சுழ் நிலையும் நேரத்தோடேயே நோய்களை கொண்டு வர  வைத்தியரிடம் மாறி மாறி போய் பயந்து சாவதே வாழ்வாக  சில பேருக்கு மரணத்தை நினைத்தே பயம்  சாவு வரும் முன்னமே அதை எண்ணி எண்ணியே தினம் பயந்து சாபவர்களும் உண்டு.

ஓவ்வொரு மனிதரின் வாழ்விலும் மகிழ்சியாக வாழ்ந்த காலங்களை விட பயந்து வாழும் காலம்தான் அதிகமாக இருபதே உண்மை பயம் இல்லாமல் ஒருவனால் வாழ முடிந்தால் அதுவே மானிட வாழ்வில் பேரின்பமாகும்.

கவி மீனா

கூர் விழிகள்

பிறை போன்ற நெற்றியிலே

சுரள் முடிகள் தொங்க

வளைந்தோடும் கரு இமையிரண்டில்

 கூர் விழிகள் எனை நோக்க

அரும்பு மீசை அழகு தர நீ

அறிவான கதைகள் பேச

அதில் ஆயிரம் அர்த்தங்களை கண்டு

உன் அறிவை நான் வியந்து நிற்க்க

உன் புன்னகையால் என்னை

கவர்ந்து நின்றாய்

உன் குறும்பு மொழியால் என்னை

சிரிக்க வைத்தாய்

காதல் கொஞ்சும் உன் விழிகள்

என்னோடு கலந்துவிட

இரவும் நிலவும் கதை பேச

எத்தனை இரவுகள் உறவாடினாய்

நான் மடியும் வரை உனை

நினைக்க வைத்தாய்

கவி மீனா

 
 

ஒரு குட்டி கதை (மானிடர் இன்பம்)

ஒரு நாள் ஒருவன் காட்டுக்குள் சென்றபோது ஒரு சிங்கம் அவனை துரத்த தொடங்கியது சிங்கத்துக்கு பயந்து ஓடியவன் ஒரு பாழடைந்து கிடந்த கிணற்றிலே தவறி விழுந்து விட்டான் விழும் போது அவன் கிணற்றுக்குள் சுவரில் முழைத்து ருந்த ஒரு மரகிழையை பிடித்து விட்டதால் தண்ணிக்குள் விழாமல் தொங்கி கொண்டு நின்றான்

அந்த கிணற்றை குனிந்து பார்த்தான் அதள பாதளம் போலே மிக ஆழமான கிணறு அவன் விழுந்தால் மீண்டும் மேலே வரமுடியாத ஆழம் அத்துடன் கிணற்றுக்குள்ளே ஒரு முதளை இவனை பிடிக்க வாயை பிளந்து கொண்டு கிடந்தது

ஐய்யோ கடவுளே என்னை காப்பாற்றும் என்று அலறியபடி மேலே பார்த்தான் மேலே அவன் தொங்குகிற மரகிளையிலிருந்து ஒரு நாகம் அவனை எட்டி பிடிக்க வந்து கொண்டிருந்தது கையை விட்டால் முதளை வாயில் அகபடுவான் கையைi விடாது போனால் பாம்பு வாயில் தீண்ட ப்படுவான் அவன் மனதிலே பயம் குடிகொள்ள இறைவா என்னைக் காப்பாற்றும் என்று அழுதபடியே அண்ணாந்த பார்த்து கத்தி கொண்டே இருந்தான்

அவன் ஆடியதால் அந்த மரதிலிருந்த தேன் கூடு உடைந்து தேன் துளி துளியாய் அவன் முகத்தில் ஒழுகியது அதை கண்ட அவன் அந்த தேன் துளியை நாவினால் எட்டி சுவைத்தான்  இந்த ஆபத்தான நிலையிலும் அவன் அந்த தேனை சுவைக்காமல் விடவில்லை இது போலேதான் இந்த புவியில் மனிடரது மாய இன்பம் என்கிறது இந்த சிறுகதை

மானிட  ஜென்மம் எடுத்தவனும்

இந்த மாய உலகில் வாழ்பவனும்

வாழ்வில் கோடி துன்பம் வரினும்

ஒரு துளி தேனை நாவினில் சுவைபது போலே

கிடைபதுதான் இந்த மானிடர் இன்பம்

கவி மீனா