Mittwoch, 15. April 2020


உயிர்கள் தப்பிச்சு 


கோழி கொக்கரக்கோ கொக்கரக்கோ
என்று பாடி கும்மாளம் போடுது
சேவல் கூட கூவி கூவி
கொண்டையை ஆட்டுது
காடு எல்லாம் முயல்கள்
துள்ளி குதித்து ஓடுது

ஆட்டுக்குட்டி மே மே என
மெல்லனவே மேயுது
கொலை தண்டனையிலிருந்து
தப்பி ய சீவன்களாய்
இவை இன்று சுதந்திரமாய் உலாவுது
ஈஸ்ரருக்கு வெட்டுவாங்கள்
என்ற பயமும் போனது

கொரோனா வந்ததாலே
இந்த உயிர்கள் தப்பிச்சு
வெட்டி வெட்டி திண்ட மனிதன்
இன்று அடை பட்டு கிடக்குறான்
அடை பட்டு கிடக்கும் மனிதரை  இவை
பார்த்து ஏளனமாய் சிரிக்குது!



ஆதி சக்தி 


உலகத்தில் உள்ள அத்தனை மதங்களை பற்றி வாசித்தும் கேட்டும் அறிந்த போதிலே எல்லா மதமும் கடவுள் இருக்கிறார் என்று சொல்லுதே ஒழிய கடவுள் யார் என்று யாராலும் சரியாக சொல்ல முடியவில்லை!

யேசு சொல்லியது பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவை பற்றி தான் சொல்ல வந்ததாகதான் சொல்லியிருக்கிறார்.

புத்தரும் கடவுள் இருப்பதாகவும் அந்த கடவுளுக்கு நாம் எவ்வழி நடந்தால் பிடிக்கும் என்று போதனைகளை சொன்னார்.

இஸ்லாம் மதமும் மேலே உள்ள ஒரு கடவுளை பற்றிதான் சொல்கிறது யாரும் கடவுளை காணவில்லை!

ஆனால் இந்து மதம் ஒன்றுதான் கடவுள் முழுமுதல் கடவுளாக சிவனை சொல்கிறது, அதிலும் சாத்வீக மதம் இன்னும் தெளிவாக  எல்லா கடவுளையும் அதாவது சிவன் பிரம்மா விஸ்ணு என சொல்ல படுகிற மும் மூர்திகளை படைத்தததும், அவர்களுக்கு துணையாக சரஸ்வதி, பார்வதி, இலக்குமி என மூன்று சக்திகளை உருவாக்கியதும் ஆதிபராசக்தியே என சொல்கிறது.

 அதாவது எல்லா கடவுளுக்கும் இயக்கமாய் இருக்கும் ஒரு மேலான சக்தி ஒரு பெண் சக்தி எனவும் அந்த பெண்சக்தியே அண்டத்தையும் மும்மூர்திகளையும் படைத்ததாக சொல்கிறது.

மும் மூர்திகளும் அவர்களது தொழிலை அதாவது படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை செய்வதற்கும் சக்தியை கொடுப்பவளே அந்த ஆதி சக்தி அந்த ஆதிபராசக்தியென ஆதிசங்கரும் கூறியுள்ளார்.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறை கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தர்க்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

ஒரு பெண்ணால்தான் ஒரு உயிரை உலகுக்கு கொண்டு வர முடியும் என்னும் போது மும் மூர்திகளையும் மூவுலகையும் அனைத்து உயிரையும் உருவாக்கியது ஒரு பெண் சக்தி என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்பதுதான் உண்மை!

முழு முதல் கடவுள் என்று சொல்ல படுகிற சிவனே அதிகமான நேரம் தியானத்திலருபதும்  தனக்கும் மேலான ஒரு சக்தியைதான்  தியானிபதாகவும் சொல்ல படுகிறது, அவருக்கும் மேலான ஒரு சக்தி உண்டு என்பது இதன் மூலம் தெளிவாகிறது அல்லவா?

அம்பிகை துதிக்கின்ற மதமே சாக்தம் என படுகிறது
சக்தியின் உடல் பாகங்கள் வீழுந்த இடங்கள் 51 சக்தி பீடமாக  அந்த இடமெல்லாம் இந்தியாவில் கோவில்கள் அமைத்து சிறப்பான முறையில் பிராத்தனை செய்து வருகிறார்கள் அம்பிகைக்கு!

சிவனோடு சக்தி இணைந்து நின்றாலும் சிவனுக்கு சக்தியை கொடுபது  அம்பிகை அவளே என்கிறது இந்துமதம் அதிலும் சாக்தம் என்ன சொல்கிறது என்றால்
சும்மா இருந்தால் சிவம் என்றும் இயக்கத்துக்கு வந்தால் சக்தி என்றும் சொலகிறது.

விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்.
விளங்கிடு மெய்ந்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே--

என்று திரு மூலர் திருமந்திரத்தில் சொல்கிறார், அதாவது  ஒளிமயமாக விழங்குகின்ற மெல்லிய சக்தியாக பரமசக்தியாக ஞானபொருளாக திகழ்கின்றார் என்று பாடியுள்ளார்.

அப்படி பட்ட சக்தியை அம்பிகையை அந்த ஆதிசக்தியை  தொழுவோருக்கு துன்பம் ஏதும் உண்டோ?