Samstag, 14. Juni 2014


சுரக்காய்

(வாதபித்தம் வாயருசி வன்பீரி கஞ்சீதம்
ஓதிருத்து நோயுமுண்டாம் உள்ளனல்போம்-ஓதத்
திருப்பாற் கடற்றிருவே தீக்குணத்தை மேவுஞ்
சுரக்காயைத் தின்பவர்க்குச் சொல்)
--
அகத்தியர் குணவாகடம்

சுரக்காய் பற்றி அகத்தியர் சொன்ன பாடல் இது, சுரக்காய் பல சூட்டு நோய்களையும் சிறுநீரக நோய்களையும் வயிற்று புண் போன்ற நோய்களையும் குணபடுத்தவல்லதாம்.

பெரிய சுரக்காய்  ஒரு குடுவை போலே இருக்கும் அதை மரத்திலேயே முத்தி காயவிட்டு பின்னர் அதனை வெட்டாமல் மேலே காம்புடன் சிறியதாக வெட்டி உள்ளுக்குள் உள்ள காய்ந்த கொட்டைகள் எல்லாம் வெளியே எடுத்தபின் கழுவி காய வைத்து அந்த நாளையில் அதனை ஒரு பானை போலே அல்லது குடுவை போலே நீர் நிரப்பி வைக்க பாவித்தார்கள்,

அல்லது அதனை பாதியக வெட்டி கோதை சுத்தம் பண்ணி காயவைத்து  எடுத்து ஆண்டிகள் உணவு உண்ணும் பாத்திரமாக கூட பயன் படுத்தியதாக அறிந்தேன் ஆனால் இன்று சுரக்காய் தேய்ந்து சுண்டங்காய் ஆனது போலே இங்கு சிறிய சுரக்காய்கள்தான் அருமையாக கிடைக்கின்றன.
 



சுரக்காயில் பால்கறி, கூட்டு என பல விதமாக சமைக்கலாம், நல்ல மசாலா போட்டு சமைத்தால் நல்ல சுவையாக இருக்கும் சிலர் பருப்புடன் சேர்த்தும் சமைப்பார்கள்.





எப்படி சமைத்தாலும் நல்ல மருத்துவ குணம் உள்ள மரக்கறிகளை தினமும் உணவில் சேர்த்து கொள்வது அவசியமாகும்

கவி மீனா

 

அகவை 60

அகவை அறுவதை எட்டிய

ஆறடி மனிதன் என் அன்பு சகோதரன்

பண்பிலும் உயர்ந்த ஒரு குலமகன்

பாசத்தில் சிறந்த நல்ல தமிழ் மகன்

எமக்குள் வயதில் வித்தியாசம் ஓர் ஆண்டே

ஆனால் பாசத்தில் இல்லை நமக்குள் வேற்றுமை

என் சகோதரன் நேர்மைக்காக வாழ்பவன்

நெஞசில் ஈரம் சுமந்தே மாய்பவன்

அறிவும் அழகும் கொண்ட மனைவியை

அடக்கி ஒடுக்கி வீட்டில் இருத்திவிட்டு

உல்லாசமாக ரை சுற்றும் ஆண்மகன் அல்ல

என் சகோதரன்

நோயில் சிறகொடிந்த பறவை போலே

துணை நின்றாலும்  ஆதரவு கரம் கொடுத்து

அணைத்து வாழ்வதுதான் நற் புருஸன்

என்று எடுத்த காட்டாய் வாழ்பவன்

என் அன்பு சகோதரன்

அவன் உயிரோ அவனிடத்தில் இல்லை

அன்புமகள் சன்டியே அவன் உயிராகும்

அறுபதை எட்டினாலும் அன்பில் குறையாத அண்ணன்

; அன்பு செல்வியின் சீரும் சிறப்பும் கண்டு

நூறு ஆண்டு வாழவேணும்

என மனதார வாழ்த்துகிறேன்

வாழ்க வழமுடன்

கவி மீனா

 

ஜோடி பறவை
 

ஜோடியாக திரியும் பறவைகள்

ஜோடி மாறி போவதில்லை

வீடு தேடி அலைவதில்லை

ஏதும் இன்றியே ஒற்றுமையை

அவை மறந்து போனதும் இல்லை

காடு நோக்கி பறந்தாலும்

காதல் குறைந்து போகவில்லை

குளக் கரையில் நீந்தினாலும்

குற்றங்கள் புரிவதில்லை

ஐந்தறிவும் இல்லாத பறவைகள்

வாழும் வாழ்க்கையை

ஆறறிவு படைத்த மனிதர்

வாழ நான் காணவில்லை

கவி மீனா

முள்ளின்

முள்ளின் நடுவே ரோசா பூ

முள்ளின் உள்ளே பிலா சுழை

இன்பமும் துன்பமும் கலந்தே

இருப்பது  இயற்கையா?

இறைவன் படைப்பில்

இன்பம் தனிதே இல்லையா?

 கவி மீனா