Dienstag, 20. November 2012


(காலை இஞ்சி கடும்பகல் சுக்கு

மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்

விருத்தனும் பாலனாமே )



கடுக்காய். ஒரு கற்ப மூலிகை

 

 

காலை வெறும் வயிற்றில் இஞ்சி நண்பகலில் சுக்கு  இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர  கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்

புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம் அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது  கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென நமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன அவை முறையே அபயன் விசயன் பிரிதிவி சிவந்தி  அமுர்தம்  ரோகினி திருவிருதுதம் என்பதாகும்

மானுட உடலைப் பீடிக்கும் நோய்கள் மொத்தம் 4448 ஆகும்  அதில் மிகவும் கடுமை யான நோய்கள் 448 என திருமூலர் குறிப்பிடுகிறார்
 

 

உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும் முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும் ஒருவனுடைய உடல் மனம் ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார்  கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு  தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும் பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது என்று சித்தர்கள் கூறுகிறார்கள்
 
பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால் கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள் ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது 

கடுக்காயின் உள் பகுதியில் நஞ்சு தன்மை உண்டாம் ஆனால் அதன் வெளி பகுதி பல நோய்களை தீர்கும் அரு மருந்தாக உள்ளது கடுக்காய் துளை தினமும் காலை மாலை ஒரு தேய் கரண்டி வீதம் தேன் கலந்து சாப்பிட்டு வர வாதம் பித்தம்  நோய்களும் வயிற்று பொரும்வாய் புண் குடல் புண் யாவும் குணமாகும் என சித்தர்கள் ஏட்டில் எழுதி சென்றார்கள் திருமூலர் அகஸ்தியர் போன்ற சித்தர்களால் காயகற்பம் என போற்ற பட்ட மூலிகை கடுக்காய் ஆகும்இதை ஜேர்மனியில் ( Muskat Nuss ) என்று சொல்வார்கள் அதை வாங்கி நீங்களும் பயன் அடையுங்கள்

 கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen