Donnerstag, 19. Februar 2015


அன்பு என்னும்

ஓடுகின்ற றெயினிலே

ஏறி இறங்கும் மனிதரை போல்

நம் வாழ்க்கை ஓட்டத்திலே

வந்து போகும் உறவுகளும் ஆயிரம்

நெஞ்சில் அன்பு என்னும் தடம்

பதித்து சென்றவர் மட்டும்

 நம் நினைவில் நிலைத்துடுவர்

கவி மீனா

பகடை

 பகடை என்பது ஒரு விளையாட்டு முதல் முதல் இந்த விளையாட்டை உருவாக்கியவர் இந்து கடவுளான சிவபெருமான் என்பது பலருக்கு தெரியாத விடயம்.

முழுமுதல் கடவுளான சிவபெருமான் தன்னம் தனியே  கைலையில் இருக்கும் மானஸ நதிகரையோரம் ஒரு கல்லில்  கோடுகளை வரைந்து பகடை காய்களை உருட்டி விளையாடி கொண்டிருந்ததாகவும்,

சிவனை காணவில்லை என தேடிய அம்பிகைக்கு நந்தி மூலம் அவர் மானஸ நதிகரையோரம் பகடை விளையாடி கொண்டிருப்பதாக சேதியறிந்து அவர் அங்கு சென்று பார்த்த போது சிவபெருமான் தன்னை மறந்து பகடை விளையாட்டில் லயித்திருந்ததை  கண்டு  அம்பிகையும்  பகடை விளையாட ஆசை பட்டதாகவும் ,

 பின்னர் அம்பிகையும் சிவனும் சேர்ந்து விளையாடியதாகவும் சொல்ல படுகிறது சிவனுடைய புராண கதைகளிலே.

 

அன்று சிவன் ஆரம்பித்து வைத்து  விளையாடிய பகடை விளையாட்டு பூலோகத்துக்கு வந்ததும் அல்லாமல், தேசமெங்கும் வெவ்வேறு  பெயரால் அளைக்கப்படுவதுடன் ஒவ்வொரு நாட்டு மக்களாலும் விரும்பி விளையாட படுகிறது என்பது உண்மையாகும்.

நம்மில் பல பேருக்கு பகடை என்றால் என்னெவென்றே தெரியாது பகடை விளையாட்டைதான் நாம் தாயம் என்றும் சொல்கிறோம் அதை பந்தயம் வைத்து விளையாடும் போது சூது என்று அழைக்குபடுகிறது.

சிவன் மகிழ்சிக்காக உருவாக்கிய பகடை விளையாட்டை பாரதகதையிலே வருகிற சகுனி பாண்டவரை பழி வாங்கும் நோக்குடன் பந்தயம் வைத்து ஆடி சூதாட்டமாக மாத்தியதால் பாரத போரும் மூண்டது. பாரத கதையிலே சகுனி தனது இறந்து போன தந்தையின் எலும்பை எடுத்து அதில்தான் பகடை காய்களை செய்து வைத்திருந்ததாகவும் அதனால்தான் சகுனி விரும்பியபடியெல்லாம் காய்கள்  விழுவதாகவும் பாராத கதையில் சொல்லப் படுகிறது.

 

பொய் சொல்லாத அருச்சந்திர மகாராசாவும்  பகடை விளையாட்டிலே யாவும் இழந்தான், நாடு நகரம் மனைவி மக்கள் இழந்து காடு ஏகினான், மேலும் நளமாகாராசானும் இந்த பகடை விளையாட்டில்தான் நாடு இழந்து காடு சென்றதாக எமது இலக்கியங்கள் கூறுகின்றன.

இப்படி அன்று தொட்டு பல இலக்கியங்களில் கதைகளை உருவாக்கி வைத்த பகடையை நாம் பொழுது போக்குக்காக விளையாடினால் மிக்க மகிழ்ச்சி தரும் ஒரு விளையாட்டாக இருக்கும், நாமும் இதை பந்தயம் வைத்து ஆடினால் அது நம் வாழ்க்கையையே மாற்றிவிடும்.

 

இந்த பகடை விளையாட்டை நாம் ஊரிலே இளமை பருவத்திலிருந்த போது  நெடுக விளையாடுவோம், மழைகாலங்களில் வெளியே போக முடியாத நேரங்களில் எங்கள் வீட்டில் நானும் எனது பேரனும் ஒரு சகோதரனும் முன்வீட்டில் இருந்த ஒரு   நண்பியுமாக சேர்ந்து விளையாடுவோம்.

தாயம் என்று சொல்லி நாம் மட்டையில் கோடுகளை வரைந்து தாய கட்டைகளையும் மரத்தில் வெட்டி விளையாடுவோம்  அல்லது 4 சோகிகளை வைத்து விளையாடும் போதும் மிக சுவார்ஸ்யமாக இருக்கும்.

ஒரு சோனாலு ஒரு பானாலு என்று கேட்டு சோகிகளை உருட்டும் போது நாம் கேட்ட படி சோகிகள் நிமிர்ந்தால் மகிழ்சியின் சத்தத்தில் வீடே அதிரும், சில வேளைகளில் ஒரு தாயம் விழ ஒரு மணித்தியாலமும் எடுக்கும் சில சமயம் அடுத்து அடுத்து நல்ல எண்களாக விழுந்தவிட்டால் வெல்பவர் படு குஸியா சிரித்து சிரித்து விளையாடுவார்,

எனது பேரனுக்கு விளையாட்டு என்பது உயிர் போலே மிக கவனமாக விளையாடுவார் விளையாட்டில் கூட நேர்மையக விளையாட வேணும் என்பது அவரது கட்டளை.

ஆனால் தோக்க கூடாது என எண்ணத்துடன் விளையாடும் சகோதரன் பேரன் வெற்றிலை போடுகிற நேரம் பார்த்து காய்களை மெல்லமாக இடம் மாற்றி வைத்து விடுவார் அதை கண்டு பிடித்தால்  எனது பேரனுக்கு வருகிற கோபத்தில் தாயம் மட்டை எல்லாம் தூக்கி எறிந்து இந்த பிரம்மசத்திகளோடே விளையாட ஏலாது என்று கோபித்துக்கொண்டு போடுவார் பிறகு அவரை சமாதான படுத்துவதே கஸ்டமாகி போய்விடும்.

விளையாடும் போதும் நேர்மை தவற கூடாது என்பதை நான் எனது பேரனிடம்  இருந்து கற்றுக்கொண்டேன், எனது பேரன் வென்று விட்டால் அன்று எங்களுக்கு பகோடா, சுண்டல் என கடையிலிருந்து வாங்கி கொண்டு வந்து தருவார் தோற்று போனால் கவலையாக போய் ஒரு மூலை கதிரையில் இருந்துவிடுவார், இன்று நினைத்தாலும் சின்னகாலத்தில் வாழ்ந்த இந்த காட்ச்சிகள் யாவும் மனதில் உருண்டு ஓடுகின்றது.

 

இலக்கியங்களில் கூறப்பட்ட பகடையைதான் நாம் தாயம் என்று சொல்கிறோம் ஐரோப்பிய நாடுகளில் அதே விளையாட்டை யூடோ என்று சொல்கிறார்கள்,
இந்த பகடை விளையாட்டை பற்றி ஜேர்மனியில் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள் அது சிறுவர்களுக்கான படமான போதும் நான் அதை பல தடவை விரும்பி பார்த்திருக்கின்றேன்,

டொச் மொழியில் உள்ள அந்த படத்தின் பெயர் யுமாம்ஜி ( Jumanji ) இதில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் இந்த விளையாட்டை விளையாடும் போது அந்த பலகையில்  கட்டங்களில் உள்ள படங்களுக்கு எற்றாற் போல அவர்கள் இருக்கிற இடம் உண்மையாகவே மாறிவிடும், கட்டைகளை குலுக்கி போடும் போது கட்டைகளில் விழும் என்ணுக்கு பலகையில் காடு படம்  இருந்திச்சு என்றால், அந்த இடம் எல்லாம் காடாக மாறி மிருகங்கள் எல்லாம் உயிரோடே ஓட தொடங்கும்.

 அப்படி ஒரு திரில் நிறைந்த படம், அந்த படத்தை முற்றும் முழுதாக விபரித்து எழுத முடியவில்லை அதை பார்த்தால்தான் அந்த படத்தில் அந்த விளையாட்டின் சிறப்பை வித்தியாசமாக எடுத்து காட்டியிருப்பது விழங்கும்.

இந்த படத்தை பார்த்தபின்புதான் அன்று சிவனும் தனியாக இருந்து விளையாடும் போது பூலோகத்தில் உயிர்களை  எல்லாம் இப்படி இயங்க வைத்தாரோ தெரியவில்லை என யோசிக்க தோனறியது எனக்கு.

எது எப்படியோ இந்த பகடையை உருவாக்கியவர் சிவன் என்பதால்தான் இந்த விளையாட்டு யாவராலும் எங்கும் விரும்பி விளையாட படுவதுடன் இன்னும் அழியாமல் உலகத்தில் வழக்கத்தில் இருந்து கொண்டே இருக்கின்றது என்கிறதை நாம் உணர கூடியதாக உள்ளது

யாவரும் நேரம் உள்ள வேளைகளில் இந்த விளையாட்டை விளையாடி வந்தால் மனதில் உள்ள கவலைகள், மனச்சுமைகள் குறைந்து மனம் விட்டு சிரித்து உற்சாகம் பெறுவதுடன், மனதுக்கு ஒரு அரு மருந்தாக இந்த விளையாட்டு உதவும் என்பதில் ஐயம் இல்லை.

 பண்டைய காலங்களில் மக்கள் இப்படியான விளையாட்டுக்களை விளையாடியதால் மனதிலுள்ள அழுத்தங்கள் குறைந்து  நோய் நொடியின்றி நீண்ட காலம் உயிர் வாழ்ந்தார்கள்.

இன்று இப்படியான விளையாட்டுக்களை விளையாடாமல் எல்லொரும் கண்டி என்றும் கொம்பியூட்டர் என்றும் இருப்பதால் மன அழுத்தமும் நோய்களும் மக்களிடையே பெருகிவிட்டதுதான் உண்மை.

இதனால்தான் சொன்னார்களோ உனது வாழ்க்கை உன் கையில் என்று.

கவி மீனா

 

Sonntag, 8. Februar 2015


விதி மட்டும்

 
 
 
 
வானம் இருக்கு நிலவும் இருக்கு

நித்தம் இரவு வந்திருக்கு

நிலவை மட்டும் காணவில்லே

காசிருக்கு கார் இருக்கு

வீடுஇ ருக்கு   செல்வ வளம்  இருக்கு

விதி மட்டும் நல்லா இல்லே

வெளி நாடு வந்த தமிழருக்கு

விதி மட்டும் நல்லா இல்லே

பேர் இருக்கு புகழ் இருக்கு

பேர் சொல் பிள்ளைகளும் இருக்கு

ஆனாலும் நின்மதியில்லே

பட்டிருக்கு பொட்டிருக்கு

பொன்னிருக்கு பூவிருக்கு

ஆனாலும் புன்னகை இல்லே

நாடிருக்கு நாட்டிலே வீடு இருக்கு

நம்ம உறவுகளும் அங்கிருக்கு

நாம் மட்டும் நாட்டிலே இல்லே

நாடோடியாய் வந்த தமிழனுக்கு

நாதியும் இல்லே

கவி மீனா

 பக்தர்களே

பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமன் மகாவிஸ்னு தான் கடவுள் என்றார்கள், மும் மூர்த்திகளில் ஒருவர் என்றும் முத்தொழிலில் அழித்தல் தொழிலை பார்பவர் என்றும், அவருக்கு திருமால் கோயில்கள் கட்டி வழிபாடு செய்து வந்தார்கள். பின்னர் அவரின் அவதாரம் என்று சொல்லி கோகுலத்தில் லீலைகள் புரிந்த கண்ணனையும் வழிபட்டார்கள், அதன்பிறகு அவதார புருசன் என்று சிறீ ராமனையும் பக்த்தியோடு வழிபட்டார்கள்,  இத்தோடு விட்டார்களா நமது பக்த கோடிகள்?

ராமபிரானின் அன்புக்கு பாத்திரமானவரும்,  சீதாபிராட்டியை கண்டு பிடிக்க உதவியருமான அனுமானைக் கூட வழிபட்டார்கள்.அவரும் கடவுளின் அவதாரம் என்றார்கள், சரி போனால் போகட்டும் அனுமானின் வால் போல் பக்தர்களும் இந்தியாவில் தொட்டு இலங்கை வரை நீண்டே போனார்கள். சரி வால் நீண்டாலும் அனுமான் போல் வாயாவது மூடி நிற்க்கும் ப க்தர்களுக்கு என்று பேசாமலே நாமும் இருக்கின்றோம், கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று சொன் மக்கள் , எனி என்ன எலியை கும்பிட போகிறார்களா? என யோசிக்கையில்.

கடவுள் பேரை சொல்லி ஏமாற்றி பிழைக்கும் மனிதர்களை கூட சில சிந்திக்க தெரியா மனிதர்கள் கடவுள் என்றே நம்புவதுதான் ஆச்சரியம், கையில் வெண்ணெய் இருக்க நாம் நெய்க்கு அலைவது போலே கடவுள் எம்முடனே இருக்கும் போது அவனை தேடி நாம் போலி மனிதர்களை எல்லாம் நம்பி ஏமாறுவது சரியா? சிந்திக்க தெரிந்தவர்கள் சிந்திப்பார்கள் இல்லை நாம் சொந்த புத்தியின்றி மக்கிதான் போவோம் என அடம் பிடிப்பவர்களை நாம் சொல்லியும் திருத்த முடியாது.

சாயிபாபா தொட்டு பாபா நித்தியானந்தா வரையில் கள்ள சாமியார்கள் என்பதை நிருபணம் செய்த பின்பும் இன்னும் அவர்களை நம்புவோர் உலகில் இருக்கதான் செய்கிறார்கள்.

உண்மையாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இவர்களை நம்ப மாட்டார்கள்  அனுமான்,  பாம்பு போன்றவற்றையும் வணங்க மாட்டார்கள், முன்பு ஒரு காலத்தில் ஆஞ்சனேயர் பக்தர்கள் காதலிப்பதில்லை திருமணமும் செய்வதில்லை செய்தால் ஆஞ்சனேயர் கோவிப்பார் என்று சொல்லி வந்தார்கள், அப்படி தான் இதுவரை கதைத்து வந்த பக்த கோடிகள் இப்போ என்ன செய்கிறார்கள் தெரியுமா? அது தான் இன்றைய புதிய திருப்பம் ஆஞ்சனேயர் பக்தர்கள் இன்று ஐரோப்பாவில் ஒரு கோயிலும் வைத்து அதற்குள் ஒரு கல்யாண மண்டபமும் வைத்து  திருமணமும் செய்தல்லவா வைக்கிறார்கள்.

வருமானம் வருகுது என்பதற்க்காக எப்படி தங்கள் வசதிக்கு ஏற்றபடி கோயில்களும் மாறுது கோயில் முறைகளும் மாறுது பக்தர்களும் மாறுகிறார்கள் பூசாரிகளும் மாறுகிறார்கள் இது தான் எனது கவலை. தமது வசதிக்கு தக்கபடி விதி முறைகளை மாற்றி அமைக்க வல்லவன் தான் தமிழன் ஆனாலும்  மற்றவர்களை ஏமாற்றுகிற மாதிரி ஒரு நாளும் கோயில்களை ஒரு வருமானம் தரும் யுக்த்தியாக மாற்றக் கூடாது.

ஏன் கல்யாண மண்டபத்தை தனியாக வைத்து அவர்கள் தமது பிளைப்பை நடாத்தக் கூடாதா? சாமி என்ற பெயரில் பக்தி என்ற  பெயரில் மக்களை ஏமாற்றி பூசை புனஸ்காரம் என பணங்களை  வாங்கி  ஒரு நாளும் மற்றவர்கள் காதில் பூ வைக்காதீர்கள் இதை நான் சொல்லி என்ன பிரயோசனம்?

ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றி பிழைப்பவர்கள் கூடும் போது நமக்கென்ன வேலை என விலகி போவது தான் முறையா?தயவு செய்து ஆஞ்சனேயர் பக்தர்களே உங்கள் பதில்தான் என்ன?  ஆஞ்சனேயரும் தெய்வமா? அவர் பக்தர்கள் திருமணம் செய்வார்களா? உண்மை தெரியவில்லை கொஞ்சம் பதில் தான் சொல்வீர்களா?

கவி மீனா