Freitag, 28. Dezember 2012


அலையும் விதி

மனதின் மூலையில் ஒரு வலி

ஏன் என்று புரியாமல் தினம்

ஒரு கண்ணீர் துளி

இதயம் தேடுது ஒரு தேடல்

அது என்ன என்று தெரியாமல்

அலையும் விதி

தொலைந் போன மனசும்

குளத்தில் விழுந்த கல்லும்

குட்டையை குளப்பி விடுகுதே

சிதறி ஓடும் மேகம் போல்

சிந்தனைகள் ஓடுதே

மழை விட்டும் தூவானம்

மறையாமல் சொட்டுதே

கூடு விட்டு கூடு பாயும்

வித்தை கூட தெரியாமல்

உடைந்து போன கூட்டிலே

ஆவி நின்று துடிக்குதே

ஆவி நின்று துடிக்குதே

கவி மீனா

இறைவனது பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை

என்பது பழமொழி எந்த அனியாயமும் ஒரு நாளும் தண்டிக்கபடாமல் போவதில்லை

சில தண்டனைகள் உடனடியாக நிறைவேற்றுப் படுகின்றன சில தண்டனைகள் காலம் கடந்தாலும் வட்டியும் முதலுமாக தீர்கபடுகின்றன அரசன்  அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

பாவங்களை செய்தவர்கள் யாருமே நின்மதியாக வாழ்ந்திட முடியாது நாம் செய்த பாவங்களை நாமே சுமந்தாகணும் எமக்காக எவரும் சுமக்க முடியாது செய்த பாவத்துக்கான தண்டனைகளை நாம் இப்பிறப்பிலேயே அனுபவிக்க நேரிடும்

அது தவறி போனாலும் மறுபிறப்பிலே அதற்கான பிறவி எடுத்து அந்த தண்டனைகளை அனுபவிக்காமல் போக முடியாது என்பதே நமது இந்து தர்ம கோட்பாடாகும் இதைதான் கர்மா அல்லது கர்ம வினை என்று சொல்கிறோம்

சில பேர் சொல்லி அழுவார்கள் நாம் யாருக்கும் எந்த பாவமும் செய்யலையே ஏன் எமக்கு மட்டும் இப்படி எல்லாம் துன்பங்கள் வருகிறது என்று அவர்களுக்கு தெரியாது முற்பிறப்பில் அவர்கள் செய்த பாவங்கள்தான் இப்பிறப்பிலும் தொடர்கிறது என்று எப் பிறப்பிலும் நாம் பாவ செயல்களை செய்யாது  வாழ்வோமாகில் தண்டனைகள் நமக்கு இல்லவே இல்லை

தவறான வழியிலே அடுத்தவர் மனசை நோகடித்து தேடுகின்ற பணமும் பதவியும் வாழ்கையும் கூட நீண்ட நாள் நிலைகாது கள்ள வழிகளிலே பணத்தை சம்பாதிப்பவர்கள் நினைக்கலாம் எமக்கு பணம் சேருகிறது என்று ஆனால் பணத்தோடு அவர்கள் செய்கின்ற பாவ மூட்டைகளும் அவர்களுக்கு கூடிகொண்டே போகிறது அத்தோடு மன நின்மதியும் அழிந்து கொண்டேதான் போகிறது

எப்போ நமது குட்டு வெளி படுமோ? எப்போது நாம் அவமான பட நேரிடுமோ? இல்லை எப்போது நாம் பிடிபட்டு ஜெ யிலில் தண்டனை அனுபவிக்க போறோமோ என்று ஒவ்வொரு நிமிடமும் தப்பு செய்பவர் மனசு அவர்களை கேட்டு கேட்டு நின்மதியின்றி அலையதான் வைக்கும்

நாம் தேடிய பணம் ஒரு நாள் களவு போகும் ஆனால் நாம் தேடிய பாவ மூட்டைகள் ஒரு நாளும் களவு போகாது அந்த பாவங்களின் பலனை நாம் அனுபவிக்கும் போதுதான் வாய் சொல்லாது போனாலும் மனசு உண்மையை உணர வைக்கும்

அன்பு காட்ட தெரிந்த மனிதர்களும் ஆசையை துறந்த ஞானிகளும் அடுத்தவருக்கு துன்பம் செய்யாது இயன்ற உதவி செய்து வாழ்பரும் பாவங்களை சேர்பதில்லை கவலைகளை அறிவதில்லை

சில மனிதர்கள் பிறக்கும் போதே கர்ம வினையின் பலனாக தீய குணங்களோடேயே பிறக்கிறார்கள் அல்லது அப்படி வழர்கப் படுகிறார்கள் போராசை பொறாமை கோபம் பழிவாங்கும் குணம் காமம் என படும் பல வித தீய குணங்களால் ஆட்டிவைக்கபட்டு அடுத்தவர்களை நோகடிச்சு வாழ்பவர்கள் சிறிது காலம்தான் தாம் வென்று விட்டதாக பெருமை கொள்ளலாம்

நாம் சுவரை நோக்கி எறிந்த பந்து நம்மை நோக்கி திரும்பி வரும் என்பதை நாம் மறக்க கூடாது நமது பாவங்களுக்கு எல்லாம் இறைவனிடம் இருந்து அடி விழதான் செய்யும் ஆனால் இறைனது பிரம்படியில் சத்தம் மட்டும் கேட்பதில்லை

அடுதவருக்கு தெரியாமல் ஒவ்வொருதரது பாவ புண்ணியத்துக்கு ஏற்றா போலே அவர்கள் வாழ்கை அமைகிறது

 கவி மீனா

 

 

Freitag, 21. Dezember 2012


மானிட வாழ்வு

உலகில் தெய்வ பக்தி மறைந்தது

புவியில் உண்மை அன்பு ஒழிந்தது

எங்கும் மன அமைதி குலைந்தது

நம் தமிழ் கலாச்சாரம் அழிந்தது

நித்தம் தமிழும் அழிந்து போகுதே

நம் ஈழ கனவும்  சிதைந்தது

மனித சுதந்திரம் பறி போனது

இத்தனை அழிந்தும் கலங்கா மனிதன்

உலகம் அழியும் என்னும் கூற்றில்

கலங்குகிறான் ஏனோ?

உயிர் மேல் கொண்ட ஆசை தானோ?

எத்தனை பாடு பட்டாலும் போகும் இந்த

உயிரை தடுத்து நிறுத்த முடியாதே

விண்ணை தொட்ட வீரனும்

மண்ணை தொட்டு விட்டானே

மண்ணில் தோன்றிய வாழ்கை

மண்ணில் மடியும் வரைதானே?

அவணியும் அண்ட இருளில் மறையுமா?

இல்லை மானிட வாழ்கை நிலைக்குமா?

மானிட வாழ்கை நிலைக்குமா?

கவி மீனா

Mittwoch, 12. Dezember 2012

மாலை பொழுதின்

செக்க சிவந்த பொன் வானம்
அதில் சிதறி ஓடும் பொன் மேகம்
அங்கு ஓடி ஒழியும் செஞ் சூரியன்


மரம் தேடி பறக்கும் பறவைகளும்


சிலு சிலு எனவீசும் தென்றலும்

அந்தி பொழுதில் மொட்டு விரியும் மல்லிகையும்

அதை சுற்றி பாடும் வண்டினமும்

அந்த மாலை பொழுதின் அழகினிலே

நாடி மயங்குது என் மனசு

கவி மீனா


ஆன்மாவும் குண்டலினியும்

நம் உடலுக்கு தேவையான  உணவு உடை தூய்மை என்பவற்றை  செய்து வரும் நாம் எம் உயிருக்கு தேவையான ஓய்வை ஆறுதலை செய்ய  மறக்கின்றோம் அழுக்கு உடலிலே சேரும் போது ஸ்னானம் செய்கிறோம் துப்பரவான ஆடைகளை அணிகின்றோம் பசி எடுக்கும் போது உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தி கிடைப்பதற்கான சத்துணவுகளை தேடி உண்கின்றோம் ஐம் பொறிகளும் ஐம்புலன்களும் வேலை செய்வதால் நரம்பு மண்டலங்கள் களைத்து போகும் போது நாம் தூங்கி ஓய்வு எடுக்கின்றோம்

அதே போல நம் நுண் உடல் ஆகிய உயிருக்கும்  ஓய்வும் காப்பு தூய்மை என்பவை தேவை படுகின்றது அவற்றை தியானம் தவம்  என்னும் சீரான வழி முறை மூலம் பெற முடியும் என  முன்பு வாழ்ந்த சித்தர்கள் சொல்லியும் வாழ்ந்தும் காட்டியதாக சான்றுகள் காணப்படுகின்றன

ஓவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள உயிராற்றலான குண்டலினி என்கின்ற  சக்தி முள்ளந்தண்டின் மூலாதாரம் என்னும் அடித்தளத்தில் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது அந்த சக்தியை  நமது தவம்  மூச்சு பயிற்சி மனோவலிமை என்பவற்றால் மூலாதாரம் என்னும் சக்கரத்திலிருந்து  ஆக்ஞை சக்கரம் என்று சொல்லபடுகிற நெற்றி பொட்டுக்கு கொண்டு வர வேண்டும் இதனை செய்ய எமக்கு தவமும் யோக நிலையும் அவசியமாகும் என ஆன்மீக வழி நடந்த முன்னோhகள்; சொல்லி சென்றுள்ளார்கள்

நமது முதுகு தண்டு வடத்தில் (மூலாதாரத்தில்) சுருண்டு பாம்பாக கிடப்பதுதான் குண்டலினி சக்தி சுருண்டு கிடக்கும் குண்டலினியை எழுப்பி எமது உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களின் மூலம் தியானிப்பதுதான் குண்டலினி யோகா என்பது தேக்கி வைக்கபட்ட சக்தியை வெளி கொண்டு வரும் நிலைதான் தியான நிலையாகும் 

குண்டலினியை தியானித்து வந்தால் அறிவு உயிர் பேரியக்க மண்டலம் ஆகிய இம் மூன்றுக்கும் பிறபிடம் உணர்ந்து அறிவை நிறை நிலையில் ஒன்றி பழகி வந்தால் நமக்குள்ளாகவே இவ்வுலகம் இயங்கி காணும் நிலை எற்படும் இந் நிலைதான் தன்னை அறிவது (தத்துவமஸி ) என டுகிறது

சொன்ன நன் முதலாஞ் சுழுமுனையின் மேரு பற்றி

வன்னியை எழுப்பி காலால் மனம் வைத்து ஓராண்டு நோக்கில்

பொன்னின் வடிவதாகும் புகழ்திடும் அணுவும் ஆகும்

அன்னத்தின் தெய்யாநாகம் அஸ்டமா சித்தியாகும் - இது சித்தர் பாடல் ஆகும்

குண்டலினி சக்தியை உச்சம் தலையில் வைத்து தியானம் செய்து வந்தால் மூளை கபாலங்கள் நன்ங்கு செயல்பட ஆரம்பித்து மிக நுண்ணிய நிலையில் அறிவு சிரசில் நிற்க பழகுவதால் விஞ்ஞான மய கோஸ நிலையை எமது மூளை பெறுகிறது ஆக்ஞையில் குண்டலினி சக்தியை வைத்து தியானித்து வந்தால்  உயிர் ஆற்றல் சேமிக்கப்பட்டு  உடலை எந்த நோயும் அணுகா வண்ணம் காக்கிறது என திருமூலர் சொல்லியுள்ளார்

ஐம்புலன்களின் வசப்பட்டு நமது மனம் மாயை எனப்படும் ஆசா பாசங்களில் கட்டுண்டு பிறருக்கும் துன்பம் விளைவித்து தானும் துன்பத்தில் உளருகிறது இதிலிருந்து விடுபடுவதுதான் விழிப்புணர்ச்சி யாகும் இந்த விழிப்புணர்சி ஏற்படும் போது நமது ஆன்மாவுக்கு ஐம்புலன்களை கடந்து நிக்கிற நிலை  கிடைப்பதாக  சொல்லப்படுகிறது

ஐம்புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போதுதான் இன்ப துன்ப வயபடுகிறது இப்படியான உணர்வுகளை கடந்து தவம் தியானம் யோகா போன்ற வற்றில் எம்மை ஈடுபடுத்தி குண்டலினி என்னும் சக்தியை மூலதானதிலிருந்து ஆக்கினை என்னும் சக்கரத்துக்கு கொண்டு வர முடிந்தால் உடலும் மனமும் நலம் பெற்று ஆரோக்கிய வாழ்வு கிட்டும் என்பதே  உண்மை பொருளாகும்

அன்று நம் சித்தர்கள் சொன்ன வாக்கியங்கள் இன்றும் நமக்கு வழிகாட்ட உதவுகின்றது என்பதில் ஐயம் இல்லை.

கவி மீனா