Sonntag, 24. September 2023

 

மரம் இல்லாத உலகினிலே 

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே

நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய

மாட்டாதவன் நன் மரம்--

இதன் பொருள் காடுவழியே செழித்து நிக்கும் மரங்கள் அல்ல மரம்

ஒரு சபைதனிலே வாசிக்க தெரியாமல் நிக்குற படிப்பு அறிவு இல்லாதவனே மரம் என்று

மூதுரையில் ஒளவையயார் சொல்லியிருக்கிறார்

மரங்களின் சிறப்பு அறிந்து ஒவ்வொரு நாடுகளிலும் மரங்களை நட சொல்லி அரசாங்கம் ஒரு பக்கம் சொல்லிவர, இன்னொரு பக்கம் மரங்களை வெட்டி எறிந்து உயர் மாடிகளை கட்டி  காற்று இல்லாமல் மழை இல்லாமல் காய் பழங்கள் இல்லாமல் பறவைகளுக்கு வாழுமிடம் இல்லாமல் நிழல் இல்லாமல் செய்வோரே அதிகம் பேரு

நீங்கள் வெட்ட நினைத்தால் இந்த ஒளவையார் சொன்ன அறிவில்லாது நட்ட மரம் போலே நிக்கின்ற மனிதர்களை அழியுங்கள் அறியாமை ஆணவம் பொறாமை  போன்ற கொடிய குணம் கொண்ட மனிதர்களை அழியுங்கள் மரங்களை வளருங்கள் அன்பு பாசம் மனிதநேயம் உலகமெங்கும் நிலைக்க பாடு படுங்கள்

பழங்களை தருகிற மரங்கள் மட்டுமல்ல ஓங்கி வளர்ந்து நிற்கின்ற மரங்களால்தானே மழை பூமிக்கு வர காரணமாக இருக்கு அதை விட நிழல் கோடை காலங்களில் ஒரு பெரிய ஆறுதல் மனிதர்களுக்கு

மரங்கள் இல்லையேல் வெறும் பாலை வனமாகதானே உலகம் மாறி விடும் பசுமை இல்லாத உலகத்திலே உயிரினங்கள் எப்படி வாழ்வது? வெய்யில் காலங்களில் மர நிழல் கிடைத்தால் எம்மட்டு ஆனந்தம்  இதை உணர்ந்தவன் மரங்களை தறிக்க நினைக்க மாட்டான்

மரங்கள் இல்லா உலகத்தை நினைத்து பாருங்கள் பச்சை நிறமே கண்ணுக்கு தெரியாத ஒரு உலகத்திலை எப்படிதான் வாழ்வது? காயில்லை பூவில்லை இலை இல்லை என்றால்  உண்ண உணவுதான் இருக்குமா?

சிறிய தாவரங்கள் முதல் பெரிய மரங்கள் வரைதான் எமது  உணவுக்கு ஆதாரம்

ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு பயனையும் பழங்களையும் தருவது மட்டமல்லாமல் சுத்தமான காற்று கிடைக்கவும் உதவுகிறது  வளவுக்குள்ளை இருக்கிற புளியமரத்தை வெட்டி எறிந்து போட்டு கடையிலை தினமும் பழபுளியை காசு கொடுத்த வாங்குற சனங்கள்  ஊரிலை

இருக்குற காணிக்குள்ளை மரங்களை நட்டு காய் கறிகளை அறுவடை செய்யாமல் வெளிநாட்டிலை இருந்து காசு வருவதால் எல்லாம் கடையிலை வாங்குற சனமும் ஊரிலை இருக்கத்தானே செய்கிறார்கள் ஆனால் அவர்கள் சிந்தித்து பார்பதில்லை அவர்களை போலவே மற்றவர்களும் நினைத்தால் கடையில் காசை கொடுத்த வாங்க கூட காய்கள் பழங்கள் இருக்காது என்பதை!

மரங்கள் இல்லாமல் பசுமை இல்லாமல் வெறிச்சோடி போன நிலங்களை நினைத்து பாருங்கள்

காய்கள் பழங்கள் இல்லாமல் மனிதர்கள் பசியால் துடிக்க போவதை எண்ணி பாருங்கள் போற போக்கிலை எதிர்காலம் இப்படிதான் மாற போகிறது

சிந்தித்து பார்த்து செயல் படுங்கள் மரங்களை தறிபதா  மரங்களை வளர்பதா என்று?

கவி மீனா

 

அவன் எங்கே?

அவன் எங்கே அவன் எங்கே?

அந்த ஆதி சிவன் எங்கே?

அடியும் முடியும் காணாது

அண்டமெல்லாம் வளர்ந்து நின்ற

அந்த ஆதி யோகி எங்கே?


உமையவளை பாதி கொண்ட

பரமசிவன் எங்கே?

பரிதவித்து மானிடர் அழுகின்ற போது

அவன் எங்கே?

 

நச்சு பாம்புகளுக்கும் அடைகலம்

 கொடுத்த ஆண்டவன்

அவணியிலே அவதியுறும் மானிடர்கு

அடைகலம் கொடுக்க மறுப்பதேன்

பாதி உடலை பார்வதிக்கு கொடுத்த சிவன்

துன்பமுறும்  பெண் இனத்தை காக்க மறப்பதும் ஏன்

கங்கை கொண்டை சடையான்

உலகை காக்க கங்கயை தந்த  சிவன்

இன்று உலகம் அழிவதை தடுக்காமல்  நிப்பதும் ஏனோ?

அவன் எங்கே அவன் எங்கே?

அந்த ஆண்டவன்தான் எங்கே?

 கவி மீனா