Samstag, 29. November 2014


எபோலா

எபோலா துரத்துது

மலேரியா குத்துது

டெங்கு காச்சல் விரட்டுது

சிக்கின் குனியா குனிய வைத்து

முதுகிலே  குத்துது

கண்ணுக்கு தெரியா

ஒரு செல் வைரஸ் எல்லாம்

மனிதனை ஓட ஓட தாக்குது

இந்த நோய் எல்லாம் தொட்டாலே பரவுது

நுளம்பு குத்தினாலும் வருகுது

ஆனால் தொடாமலே பரவுது

 கொம்பூயூட்டர்களை வைரஸ் தாக்குது

விண்ணிலே பறந்து செவ்வாயை தொட்டு

 மண்ணை தோண்டும் மானிடனால்

 அவனை தொடும் இந்த வைரஸ்களை

அழிக்க வழி தெரியாவில்லையே

கவி மீனா

இல்லை

நாடு இல்லை ஒரு நதியும் இல்லை

வீடு இல்லை அதற்க்கு விதியும் இல்லை

கூடு இல்லை அதில் காத்திருந்த குஞ்சுகளும் இல்லை

காடும் இல்லை மலையும் இல்லை

காடு வரை கூட வர யாரும் இல்லை

பாடு பட்ட மனிதருக்கு பாதி சுகம் தானும் இல்லை

மாடு மனை  மக்கள் என்று கூடி வாழ வழியும் இல்லை

வாழ்வும் இல்லை வளமும் இல்லை

வந்த வினை தீரவில்லை

போவதற்க்கு வழியும் இல்லை

போக இடம் தெரியவில்லை

உலக வாழ்க்கை நிரந்தமில்லை

அதை நினைத்து பார்தால் நின்மதியில்லை

காதல் அன்பு ன்று ஏதும் இல்லை

காம சகம் தேடி அலையும் மாந்தருக்கு மதியும் இல்லை

இளமையிலே இது புரிவதில்லை

முதுமையிலே இவை யாவும் நிலைபதில்லை

இந்த காயம் நிலைப்பதில்லை

அது உலகில் இருக்கும் வரை நின்மதியில்லை

நின்மதியில்லை

கவி மீனா

 

நடு கடலுக்கு போனாலும்

ஊரிலை போய் தோட்ட வேலையாச்சும் செய்தால் கவலைகள் பறக்கும்,  மரங்கள் பூப்பதும் காய்பதும் கண்டே  மனம் குளிரலாம் வயிறும் நிறையலாம், அதிகாலையில் ஆதவன் வரவும் ,குயிலின் கூவலும், குருவிகளின் கீச் கீச் ஒலியும் கேட்டு மகிழலாம், மலர்களின் வாசமும் அரும்பு மலரும் அழகும் கண்டு ரசிக்கலாம்.

மாலை நேரத் தென்றுலும், மயக்கம் தரும் அந்தி பொழுதும் ,  ஆதவன் மறையும் செந்நிற காட்சியும் கண்டு அகம் குளிரலாம், இருள் கவ்வும் நேரம் வானில் நிலா  பால் ஒளி வீசையில் எண்ணங்கள் சிறகடிக்க பல மணி நேரம் விழி மூடாது பார்த்து ரசிக்கலாம்.

அதையும் இளமை இருக்கும் போதுதான் செய்யலாம், முதுமை வந்த பின் செய்ய நினைத்தாலும் எதுவும் செய்ய முடியாது, எதையெல்லாம் நாம் தொலைத்து விட்டு இன்று நாய் பேய் ஆக அலைகிறோம் மன அமைதியின்றியே.

அன்னிய நாட்டிலை அமைதியை தேட முடியாது, காசை தேடி ஓடினவங்கள் காசை வைத்து சந்தோசத்தை வாங்க முடியாது அழுவுறாங்கள்,கடவுளை நினைக்காதவனுக்கு கடைசி வரை நின்மதியில்லை,மனதை அலை பாய விட்டவனுக்கும்  வாழ்க்கை இலவு காத்த கிளி போலே   கனவாகி போகிறது, என்னால் எதுவும் முடியும், என் பணத்தாலே எதையும் சாதிப்பன் என்று எண்ணியவங்கள் கூட மண்ணில் நிலைப்பதில்லை.

சொந்த நாட்டில் வாழும் போது வறுமையிருந்த வீட்டில் கூட வாழ்க்கை கசப்பதில்லை, அதை துறந்து வெளி நாடு ஓடி வந்த மக்களுக்கு மாடி வீட்டில் வாழும் போதும் வாழ்க்கை கசக்கிறது.

அன்று அமைதியை தேடி கோயில்கள் போவதும்,  விரதங்கள் பிடிப்பதும், தியானம், தவம் என மனதை ஒரு நிலை படுத்துவதும், மனிதர்களுக்கு எவ்வளவு ஆறுதலை கொடுத்தது என்பதை அறிந்தவர்கள் மிக குறைவு.

வெளி நாடு வந்த தமிழர்கள் மன அமைதியை நாடி போகும் பாதை வேறு ,மதுவுக்கும் ,போதை மருந்துக்கும், மாதுவுக்கும் அடிமைகளாகி சீர் கெட்டு அலையுது  அழியுது மிருகங்களாக மாறி  நமது சமுதாயம் இங்கே.

யாருக்கும் எது சொன்னாலும் புரிவதில்லை யார் சொல்லும் கேட்க்க பிடிப்பதில்லை, பெரியவர்கள் காசேதான் கடவுள் என்கிறார்கள், சிறுசுகளோ கண் கண்டதே கோலம் எனது வாழ்க்கை என்கிறார்கள்.

ஊரிலை வாழும் போது கஞ்சியோ, கூழோ குடித்தாலும் இலை, குளைகளை, மரக்கறிகளை சமைத்து உண்டாலும் மூலிகை வளம் நிறைந்த நாட்டிலே ஆரோக்கியமாக வாழ்ந்த மக்கள்,  கடலோரம்  வாழ்ந்ததாலே கடல் உணவையும் உண்டதாலே  இதய நோயோ, பக்க வாதமோ அதிகம் வராது நீண்ட ஆயுள் காலம் நின்மதியாய் வாழ்ந்த சனம்,

வெளிநாட்டு வாழ்க்கையிலே  பறப்பவை ,நடப்பவை  என ஆடு, மாடு, பண்றி என்று எதையும் விட்டு வைக்காமல் கண்டதெல்லாம் உண்டு சொர்கம் என நினைத்து வாழும் வாழ்க்கையிலே,

 உண்டி பெருத்து, தொந்தி வைத்து பணம் வங்கியிலே சேர்வது போல் நோய்கள் உடலிலே சேர இள வயதில் பலம் இளந்து, நாடி தளர்ந்து, மனம் நொந்து அகால மரணங்கள் காண்பதும் நிறைவாச்சு.

மனதினிலே நிறைவும் இல்லை, முகத்தினிலே சிரிப்பும் இல்லை மன நின்மதியை தேடி உறக்கமின்றி தவிப்போரே உலகில் தற்போது நிறைய காணக்கூடியதாக உள்ளது, காரணம் என்ன என்று சிந்தித்துப்பார்தால்  எல்லாவற்றுக்கும் அவனவன்  மனசே தான்காரணம் ஆகிறது.

மனசின் பேராசையும், பொறாமையும், பண வெறி, பதவி மோகம் என்கின்ற தீராத வெறி கொண்டு அதை தேடி அலைவதால்தான் இத்தனை துன்பங்களும் நிகழ்கிறது.

 இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது போலே, எங்கே போனாலும் அவனுக்கு என்று எழுத பட்ட விதியை மாற்றுவே முடியலை, ஒரு சாண் வயிற்றுக்கு ஒரு வேளை உணவுக்கு அலைகின்ற விதியாகி போனதுதான் மிச்சம்.
 

நாய்க்கு நடு கடலுக்கு போனாலும் நக்கு தண்ணிதான் உயிர் தப்பி ஓடி வந்தவர் எல்லாம் இங்கு நூறு ஆண்டுகள் வாழ்ந்ததும் இல்லை, மன அமைதியை தேடி   ஆகாயத்தில் பறக்க நினைத்து நடக்க மறந்த கதையாகி போனதுதான் உண்மை.

தம் வீட்டில் உள்ள ஊற்று நீரை குடிக்க விரும்பாமல் ஏழு கடல் தாண்டி போனதாலே கடல் நீர்தான் குடிக்க முடிந்தது, கண்ட கனவுகள் யாவும் காற்றில் பறந்தது,  இளமையும் இனிமையும் மறைந்தே போனது.

திரும்பி போய் சொந்த ஊரில் வாழவும் முடியாமல், வந்த ஊரிலும் மன நின்மதியோடு சுகமாக வாழ முடியாமல் திரிசங்கு சுவர்கம் போனது போலே அந்தர பட்ட சீவியம் ஆச்சு.

அழிந்து போகும் மெய்யை கொண்டு, அலைந்து திரியும் மானிடரே எல்லாம் பொய் என்று எண்ணி   மனதை  அலைய விடாது காப்பதே மேல்.

அன்பே சிவம்
கவி மீனா