Donnerstag, 27. Juni 2013


நின்மதி

பசும் புல்தரையிலே அழகாக மேயும் இந்த வெள்ளை நிற செம்மறி ஆடுகளை பாருங்க நல்லா மேய விட்டு தன்னை வெட்டி மனிதர்கள் சாப்பிட போவதது தெரியாமே இருக்கும் வரை அவை சந்தோசமாக மேய்ந்து துள்ளி திரிவதை காணும் போது சில மனிதர்கள் இங்கு எந்த நோயும் இல்லாமலே தினம் வைத்தியர் வீடுகளுக்கு மாறி மாறி அலைந்து திரிகிறார்கள் தமக்கு ஏதாவது வருதம் வந்து இறந்து போகாமல் நீண்ட காலம் உயிர் வாழ வேணும் என்ற பயம் ஒன்று பிடித்து அந்த பயத்தாலே நின்மதியிழந்து அலையும் மனிதர்கள் சிலரை நான் என் கண் கூடாக காண்கிறேன்

இந்த ஆடுகள் போலே ஏன் மனிதர்களாலே நின்மதியாக இருக்க முடியவில்லை என்று ஓரு சிந்தன ஏற்பட்டது எனக்கு  நாளை வெட்டு பட  போவது தெரியாமல் நின்மதியாக வாழும் ஆடுகள் எங்கே? நாளை நாம் இறந்திடுவேமா என்று எண்ணி பயதிலே நின்மதியை தொலைத்து விட்டு தினம் தினம் ஏங்கி ஏங்கி சாகும் மனிதர்கள் எங்கே?

கவி மீனா

 

ஜேர்மனியில்  தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் நடாத்தப்பட்ட சிறுகதை கவிதை கட்டுரை போட்டியில் பங்கு பற்றியவ்களின் விபரம்
 

Sonntag, 23. Juni 2013


மோக மென்னும்

காந்தம்மென உன் இரு விழிகள் கவர்ந்திழுக்க

புன்னகை பூத்த முகம் கவி படைக்க

கமழ் முல்லை சுற்றி வரும் வண்டினைபோல்

காளை எந்தன் நெஞ்சம் பர பரக்க

மோக மென்னும் தீ என்னை சுட்டெரிக்க

தொட்டிடவே துடித்து நின்றேன் உன் இதழை

பொட்டு வைத்த உன் வதனம் சுருங்கிடுமோ என அஞ்சி

கட்டழகி உன்னழகை என் இதய கூட்டினிலே 

காவியமாய் படைத்தனடி

உன் வட்ட கரு விழிகள் என்னை நித்தம் வாட்டுதடி

கொந்தளிக்கும் உன் மூச்சு கொங்கைகளை தூக் கையிலே

காமதீ கொல்லுதடி காதல் தாகம் வந்து தாக்குதடி

பாவை உந்தன் பேரன்பில் மூழ்கி முத்தெடுக்க

ஏழு   ஜென்மம் போதாதே

உன் கையணைபில் மாண்டிடவே ஏங்கி தவிக்குதடி

என் நேஞ்சம் ஏங்கி தவிக்குதடி
வேல்

Sonntag, 16. Juni 2013


இசை விழா  (Music concert)
 
 

இன்று நான் வசிக்கும் இடத்தில்  ( City) ஒரு விசேட   இசை விழா நடந்தது  இது ஒவ்வொரு வருடமும்  இந்த நாட்களில் நடக்கும் (Music Concert) விழாவாகும் வெள்ளிகிழமை சனிகிழமை ஞாயிற்றுகிழமை இந்த மூன்ற நாளும் கொண்டாடுவார்கள் சிற்றியில் உள்ள மாக்பிளட்ஸ் ( City Centre ) என்று சொல்லபடும் சென்ரரில் இல் பெரிய குடை போலே கூடாரம் போட்டு அதன் முன்னே மேடை போட்டு அந்த மேடையிலே முழுநாளும் ஒரே கலை நிகழ்சிகள் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும்  இங்கு வாழும் வெளிநாட்டவர்கள் கூட இந்த நிகழ்சியில் முன்கூட்டியே பதிவு செய்து மேடையில் தங்கள் திறமைகளை ஆடி அல்லது பாடி காட்டலாம்

கூடுதலாக  ஜேர்மன் நாட்டு இசை நிகழ்சிகளும் நடன நிகழ்சிகளும் நடைபெறும் முன்பு சில வருடங்கள் ஒவ்வொரு வருடமும் இலங்கை தமிழரின் நடன நிகழ்சியும் பாடல் நிகழ்சியும் கூட நடை பெற்று வந்தது தற்சமயம் அந்த நிகழ்சிகளை ஒழுங்கு படுத்திய தமிழர் வேலையில் ஓய்வு பெற்றதால் தமிழர்களின் கலை நிகழ்சிகள் இப்போ அந்த மேடையில் அரங்கேறுவதில்லை 

இன்று நான் அந்த விழாவை பார்க்க போன மாலை நேரம் நல்ல  ஜேர்மன் இசை நிகழ்ச்சி காதை கி ளிக்கும் அளவுக்கு சத்தமாக அதிர்ந்து ஒலித்துக்  கொண்டு இருந்தது   ஜேர்மனியர் மற்ற நாட்களில் சத்தம் போட கூடாது என்று சொல்வார்கள் ஆனால் இப்படியான நிகழ்சிகளில் மட்டும்தான்     ஜேர்மனியே அதிரும்

அந்த இடம் மக்கள் கூடியதால் அழகு பெற்றதா? இல்லை அந்த இசையால் உயிர் பெற்றதா? என்று சொல்ல முடியாத ஒரு பரவச நிலை அங்கு நிலவியது பெண்களும் ஆண்களும் சுற்றி போட பட்டிருந்த உணவு விடுதிகளில் உணவு உண்டு மகிழ்ந்ததுடன் யார் கையை பார்த்தாலும் பீர் கிளாஸ் ஆனால் அவர்கள் கால்கள் மட்டும் பாட்டுக்கு ஏற்றாற் போல் தாளம் போட்டபடியே இருந்தன

அனேகம் பேர் பாட்டுக்கு ஏற்றாற் போல் சுளன்று சுளன்று ஆடினார்கள் இதை பார்த்து என் கால்களும் நீயும் ஆடு ஆடு என்று சொல்லியது மனம்தான்  திறந்த வெளி அரங்கில் ஆடுவது கூடாது என்று நமது கலாசாரத்தை சுட்டி காட்டி கொண்டே இருந்தது எத்தனை வருடம் வெளி நாட்டில் வாழ்ந்தாலும் ஆடை அலங்காரங்கள் மாறினாலும் உள் மனசு மாறவே  மாறாது என்று அடம் பிடிக்கும்

நானும் எனது கமராவை சுளட்டி சில போட்டோகளை பிடிச்சது கண்டு கிற்றாரோடு நடுவுக்குள்ளே திரிந்த இரண்டு பேர் எனக்கு முன்னே வந்து சிரித்து கொண்டு போஸ் கொடுத்தார்கள் அதைவிட ஒரு வித்தியாசமான கலரில் ஒரு பெரிய நாய் அவரது எஐமானோடு வந்தது அது கூட எனக்கு போஸ் கொடுத்தது அதை போட்டோ பிடிச்சால் அதன் எஐமான் பேசினாலும் பேசலாம் என்று கொஞ்சம் களவாகவே நாயை போட்டோ பிடிச்சன் என்னுடன் வந்த  ஜேர்மன் நண்பி என்னை பார்த்து தலை ஆட்டினாள் உது சரியில்லை என்பது போலே

அவ கிடந்தா என்று நான் கவனிகாதது போலே இருந்து  விட்டேன் ஆனால் இப்டியான நிகழ்சிகளுக்கு போவதால் ஒரு உண்மை மட்டும் நல்லாக புரிகிறது   ஜேர்மன் நாட்டவர்கள் எப்படி  கவலையின்றி ஆடி பாடி மகிழ்சியாக வாழுகிறார்கள் என்று

அவர்கள் ஒவ்வொருத்தரும் பாட்டை ரசிபதிலும் நடனம் ஆடுவதிலும் பீரை ரசித்து குடிபதிலும் தங்களை மறந்து லயித்து இருந்நதார்கள் இதே நேரம் தமிழர் எந்த கொண்டாட்டதுக்கு போனாலும் காதிலே கேட்கிற பாடல் என்ன பாடல் என்று கூட ரசிக்காது மேடையிலே இசை நிகழ்ச்சி போனால் கூட அதை பார்க்காது  அடுதவங்க என்ன நகை போட்டு என்ன சாரி கட்டி வந்து இருக்கிறாங்கள் என்கிற கதைதான் குசு குசு என்று கதைச்சு கொண்டே இருபார்கள்

ஆடல் பாடல் என்பது ஏதோ தமக்காக இல்லை என்பது போலே சாப்பாட்டை கண்டால் மட்டும் விழுந்து அடிச்சு அள்ளி கொண்டு வந்து அவசரம் அவசரமாக அள்ளி அடைஞ்சு கொள்வதில்தான் இன்பம் காணுவார்கள்  இல்லை மாடி வீடு கட்டியிருந்தாலும் பென்ஸ் காரிலே வந்து இறங்கினாலும் கூட இங்குள்ள தமிழர்கள் மனதிலோ முகத்திலே கண்களிலே  சிரிப்பும் இல்லை மகழ்ச்சியும் இல்லை

காரணம் மனநிறைவு கிடைப்பது அரிது தமிழருக்கு  திருப்த்தி என்பதற்க்கு பொருள் விழங்காது ஆனால் ஒரு சொந்த வீடு இல்லாவிட்டல் கூட  ஜேர்மனியர் அந்த நிமிடம் அந்த நிகழ்வுகளை மனநிறைவோடு ரசிபதில் மிக்க ஆர்வம் காட்டுவார்கள் இன்று நானும் என்னை மறந்து சில மணித்தியாலங்கள் அந்த இசை நிகழ்சியில் ஆழ்ந்து போய் இருந்தேன் அது எனக்கு மிக்க மன நிறைவை தந்தது

இன்று இங்கு நல்ல காலநிலையும் இருந்ததாலும் மெல்லிய   ஜில் என்ற காற்று வீசியதாலும் நடனமாடும் மக்களை கண்டதாலும் இசை என்ற இன்ப வெள்ளதிலே மூழ்கி திளைத்தாலும் கண்களுக்கும் செவிக்கும் இன்றி மனதிற்க்கும் மகிழ்வை தரும் நிகழ்வாக இன்றை மாலை பொழுது அமைந்தது எந்த மொழி என்பதல்ல  இசைக்கு எம்மை ஆட்டி வைக்கும் தன்மை உண்டு இசை கேட்டால் நாகம் கூட ஆடுவதுண்டு  இசையே ஒரு பொது மொழியாகும்

கவி மீனா