Montag, 12. November 2012


பால் இருக்கும் பழம் இருக்கும்

பால் இருக்கும் பழம் இருக்கும் பசி இருக்காது

பஞ்சணையில் காத்து வருதூக்கம் வராது

இது காதல் படுத்தும் இளமை காலம் ஆனால் முதுமையிலும் இந்த பாடல் வரிகள் பொருந்தி வருகின்றன பாலும் பழமும் கொட்டிக் கிடந்தாலும் சாப்பிட முடியாமல் நோய் வந்து முதுமை காலங்களில் பிடித்துவிடும் பஞ்சணையில் படுத்தால் கூடநோவும் கவலையும் வந்து எம்மை தூங்க விடாது ஆட்டிவைக்கும்

நாம் என்றும் அளவோடு சாப்பிட பழகி வருவோமாகில் நமது உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் நல்லது நமது உணவில் கொழுப்பு மாப்பொருள் இரண்டையும் குறைத்து காய்கறி பழம் அதிகம் சேர்த்து உண்பது ஆரோக்கியமாகும் மாமிச உணவை குறைப்பது மிகவும் நல்லது கொழுப்பு நிறைந்த இறைச்சிகளை சமைத்து  சோற்றையும் வடித்து சேர்த்து பிரட்டி

மூக்கு முட்ட அடிக்காட்டி நம் தமிழருக்கு சாப்பிட்ட மாதிரியே இல்லை இல்லாது போனால் நண்டு இறால் எண்டு கொழுப்பு நிறைந்த கடல் உணவுகளை  சமைத்து நித்தம் ஒரு வெட்டு வெட்டுவார்கள் அதன்பின் ஒரு கேக்கு பலகாரம் எல்லாம் உண்ணாவிடில் சாப்பிட்ட மாதிரியே இல்லை என்பார்கள் பலர் ஆனால் நாம் சாப்பிட்ட அத்தனை உணவும் வயது போக போக சத்தாக மாறுவதற்க்கு பதிலாக விஸமாக மாறி எம்மை நோயாளிகளாக மாற்றி விடுகிறது என்பதே உண்மை.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுஎன்று சொல்லி வைத்தார்கள் அன்று கண்டது எல்லாம் சாப்பிட்டு போட்டு மூச்சு திணறும் போது சுக்கு காப்பி குடிப்பார்கள் சிலர் இரும்பை திண்டவன் சுக்கை குடிப்பான் ஏன்?

இளமை காலங்களில் ஓடி ஆடி திரியும் போது  நாம் சாப்பிடுவது எல்லாம் சமிபாடு அடைந்து உடலுக்கு ஊட்ட சத்தாக மாறுகிறது வயது போனகாலத்தில் எம்மால் அதிகம் உடலை அசைக்க முடியாது ஒரு இடத்தில் இருப்பதாலும் நீரழிவு இரத்த அழுத்தம் போனற் நோய்கள் எம்மை அணுகுவதாலும் நாம் சாப்பிடும் ஒரு பிடி  உணவு கூட விஸம் போல  எமக்கு தீங்கை தான் தருகிறது இனிக்கின்ற சக்கரை கூட கசப்பான நோய்யை தருகிறது.

நாம் ஓடி ஓடி உழைப்பதே இந்த ஒரு சாண் வயிற்றுக்குதானே? என்று வெளிநாட்டில் குளிர் தேசத்தில் வாழுகின்ற நாம் அள்ளி வயிறு முட்ட சாப்பட கூடாது  பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்பர்பசி கொடுமையில் தான் திருடர்களும் வேசிகளும் உருவாகுவதாக சொல்லுவார்கள் ஆனால் வயோதிபம் வந்துவிட்டால் இங்கு பசியோடே வாழவேணும் என்பதே நியதி ஆகி விட்டது ஐந்து வேளை அளந்து சத்துள்ள உணவாக சாப்பிட சொல்லி வைத்தியர் சொல்லி விட்டார் என்று ஒரு அறிவு இல்லா தமிழன் ஐந்து வேளையும் சோறும் கறியும் போட்டு பிரட்டி சாப்பிட்டு கடைசியில் எழும்ப முடியாது படுக்கையிலே போய்விட்டார்

சாவுக்கு பயம் இல்லை  ஆறிலும் சாவு நுறிலும் சாவுஎன்று சிலர் வீரமாக பேசுவார்கள் ஆனால் படுக்கையில் நோய் வாய் பட்டு கிடந்து உத்தரிக்காமல் வாழ்வை முடிக்கணும் என்பதே எல்லோரது ஆசையுமாகும் அதனால் நாம் அளவோடு உண்டு அறிவோடு வாழணும்

 
ஒரு வேளை உண்பவன் யோகி

இரண்டு வேளை உண்பவன் போகி

மூன்று வேளை உண்பவன் ரோகி

இது பழ மொழி  ஆனால் இன்று ஐந்து வேளை அளவாக சாப்பிட்டு நம் உடல் நிலையை பேணுவதே மேல் ஆகும்
உண்பதால் மட்டும் உயிர் வாழ முடியாது அதே வேளை உணவு இல்லை என்றாலும் உயிர் வாழ முடியாது  என்றும் அறிவோடும் அளவோடும்  வாழ்வதே நம் உடல் நலத்துக்கு அவசியமாகும்

 
கவி மீனா


Keine Kommentare:

Kommentar veröffentlichen