Dienstag, 22. September 2015


மனிதன் மட்டும்

எறும்பு ஓடி ஓடி பாடு பட்டு
ஒற்றுமையாய் வாழுது

குழவி கூட கூடு கட்ட
இடம் பார்க்குது

குருவி கூட குஞ்சுக்கு
இரை தேடி செல்லுது

கிளிகள் கூட கொஞ்சி குலவி
கதை பேசுது

சோறு போட்டால் நாய்கள் கூட
வால் ஆட்டுது

மனிதன் மட்டும் நன்றி கெட்டு திண்ட
 வீட்டுக்கே இரண்டகம் பண்ணுறான்

மனிதன் மட்டும் வீடு இருந்தும்
அடுத்த வீட்டை பார்க்கிறான்

தன் வீட்டு கஞ்சலை பொறுக்காமலே
அடுத்த வீட்டு குப்பை பற்றி
கதை பேசுறான்

இவன் வாலில்லா குரங்கு என்று 
தன்னை நிலை நாட்டுறான்

ஆசையிலே தாவி தாவி திரிவதனால்
இதை இவன் நிலை நாட்டுறான்

கவி மீனா

 

தன்மானமே

வானை முத்தமிட்டு செல்லுது கரு மேகமே

சத்தமிட்டு பெய்யுது தூவனமே

 
என்னை தொட்டு தொட்டு போகுது

உன் ஞாபகமே

திட்டமிட்டு விதியும் சதி செய்யுமே

கட்டமிட்டு வாழும் பலர் வாழ்விலே

 
விட்டு விட்டு போனது பொன்வானமே

பல தமிழனை கைவிட்டு போனது தன்மானமே

 
கவி மீனா

இது பக்தியா மூட நம்பிக்கையா? மத வெறியா?

என்ன நடக்குது உலகத்திலே என்று எனக்கும் ஒன்றும் புரியல்லே!

வினாயகர்தான் முழுமுதல் கடவுள் என்றும் அவரை வழிபட்டுதான் எந்த காரியமானாலும் தொடங்க வேண்டும் என்பதும் இந்துக்கள் வழக்கம்.

 அது மட்டும் இன்றி   வினாயகருக்கு கொழுக்கட்டை மோதகம்தான்பிடிக்கும் என்று அவித்து வைத்து பூசைகள் எல்லாம் செய்வதும் வழகத்தில் உள்ளது, வினாயகர் சதுர்த்தி அன்று வினாயகர் உருவ சிலைகளை பூசை எல்லாம் செய்து மேழ தாளத்துடன் கடலுக்கு ஊர்வலமாக தூக்கிசென்று கடலுக்கு போடுறாங்களே இது என்ன கொடுமை ? இப்படி செய்வதன் காரணம் என்ன ?

 

கடலுக்குள் எறிய பட்ட வினாயகர் பொம்மைகள், சிலைகள் கடலோடு அடிபட்டு வேறு ஒரு ஊரிலே கரை சேர்ந்து மண்ணுக்குள் தாண்டு கிடந்து, பிறகு ஒரு நாள் யாராவது  அதை கண்டு எடுத்தால்  அது சுயமாக தோன்றிய வினாயகர் உருவ சிலை  என்று கூவி சனங்களை அழைத்து அந்த இடத்தில் கோவில் கட்டி மீண்டும் அந்த வினாயகர் சிலைக்கு ஆராதனைகளும் பூசைகளும் நடைபெறலாம் நடை பெற்றிருக்கலாம்

இது வினாயகருக்கு வந்த சோதனையா? இல்லை மனிதர்களின் சாதனையா?

என்ன என்று ஒன்றுமே புரியவில்லையே!

 

கடவுள் இருப்பதும் உண்மை எல்லா மதத்தவருக்கும் கடவுள் ஒன்றாகதான் இருக்கும் என்பது என் நம்பிக்கை, அதே சமயம் கடவுள் பேரை சொல்லி நடக்கிற சில முட்டாள் தனமான செயல்பாடுகளுக்கும் யுத்தங்களுக்கும் கடவுள் பொறுப்பல்லவே!

மனிதர்களுடைய மடமைதான் இது எல்லாவற்றிற்க்கும் காரணமாகிறது.

 

ஒரு மதத்தை இழிவு படுத்தி இன்னும் ஒரு மதம் சபை வைக்குது  நாம் யாருடைய பிள்ளைகள், எந்த கடவுள் எம்மை படைத்தததார் என்று யார் சொல்லுவார்?

யேசு வந்து அடுத்த மத்தையோ அடுத்தவர்களையோ அவதூறு  பண்ணவில்லை  ஆனால் இன்று யேசுவின் பேரை சொல்லி மதம் மாறிய கூட்டம் இந்து மதத்தை கேவல படுத்தி பேசுகிறது.

 புத்தரோ அல்லாவோ கூட அடுத்த மதங்களையும் அவரவர் நம்பிக்கைளையும் கேவல படுத்தவில்லை ஆனால் இன்று மதங்களை வைத்து உலகில் யுத்தமும் கலவரமும் அவலமும் ஓலமும் கடவுளே என்ன என்று நான் சொல்ல ?

 

இன்னொரு பக்கம் நாட்டிலே பசியும் பஞ்சமும் தலைவரித்து ஆடும் போது கோயில்கள் என்ற பேரிலே தங்கமும் வெள்ளியும் காசும் பாலுமாக பொங்கி வழியுது,

கடவுள் இதை எல்லாம் கேட்டாரா? தனக்கு தர சொல்லி?

எல்லா பொருளும் அவனதாக இருக்கும் போது அவன் தந்த காசையும் பொன்னையும் அவனுக்கே காணிக்கை கொடுப்பதில் என்ன பயன்? அதில் ஒரு பகுதியாவது ஏழைகளுக்கு வாழ்வு கொடுக்க  அல்லது பசியை போக்க உதவுமாகில் கடவுள் நிச்சயம் மனம் மகிழ்வார் என்பதும் இந்த மூளை அற்ற மனிதர்களுக்கு ஏன் விழங்காத புதிராகஇன்று வரை இருக்கின்றதோ?

தெய்வமே இந்த உலகில் நடக்கின்ற அனியாயங்களை தட்டி கேட்க எப்ப வருவீரோ நான் அறியேன் பரா பரமே.

 
கவி மீனா

 

பேதை நான்

 

நீ பாதி நான் பாதி

காணும் இன்பம் ஏதடா

நீ மாறி நான் மாறி

போனதுதான் விதியடா

 

காதல் என்னும் ஓடையிலே

பாடி செல்ல விதியும் இல்லை

பாவி எந்தன் காதலுக்கு

காவியத்தில் இடமும்மில்லை

 

சாமி தந்த பாதையிலே

போதை மாறி போகும் பேதை நான்

காதல் என்னும் போதை மாறி போகும் பேதை நான்

மாயா உலகின் லீலைகளை மறந்து வாழும்

பேதை நான்

 

 
கவி மீனா