Sonntag, 26. Juli 2015


இன்று இருப்பது

எதுவும் நமக்கு நிரந்தரம் இல்லை

காலங்கள் கடந்து செல்வது போலே

இன்பமும் துன்பமும் கடந்து செல்லும்

இன்று இருப்பது நாளை மாறலாம்

இன்று இருப்போர் நாளை மறையலாம்

வானத்தில் முகில்கள் கலைவது போலே

வாழ்க்கையின் கோலங்கள் மாறி போகலாம்

பாடு பட்டு சேர்த பணம் பாதையிலே  துலையலாம்

பாடு பட்டு வளர்த உறவு பாதியிலே போகலாம்

இதுதான் நிரந்தரமற்ற மனித வாழ்வு

கவி மீனா

சுத்துமாத்து



சூரியனை சுத்தி சுத்தி வந்து உலகம் சுத்துது

மனிதன் மட்டும் சுத்துமாத்து பண்ணியே சுத்தி வருகிறான்

வட்டமிட்டு பம்பரமும் சுத்தி வருது

வட்ட நிலா வானில் தினம் சுத்தி வருகுது

பூவை சுத்தி சுத்தி வண்டு பறக்குது

தேனை உண்டு கழித்த பின்னே மீண்டும் பறக்குது

மனிதன் காதல் என்று சொல்லி பெண்ணை சுத்துறான்

காமம் கண்ட பின்னே அவன் கதையை மாத்துறான்

கழுகு கூட சுத்தி சுத்தி இரையை தேடுது

சில மனிதன் கூட கழுகு போலே சுத்தி வருகிறான்

ஒண்டை ஒண்டு சுத்தியே உலகம் இயங்குது

மனிதன் மட்டும் சுத்து மாத்து பண்ணியே சுத்தி வருகிறான்

கவி மீனா

விரதம்

 

(நித்தம் நித்தம் நீராடில்

நெடுமால் அருளை பெறலாமேல்

தத்தும் தவளை மீன்களும் அத்

தனிபேறடைய வேண்டாவோ?)

 

சிலர் விரதம் என்கிறார்

தினமும் குளிக்கிறார்

ஒழுங்கா கோவில் போகிறார்

மனசு சுத்தமா இருக்குதா

தெரியவில்லை

 

விரதம் என்று சிலர் ஊரை ஏமாற்றலாம்

கடவுளை ஏமாற்ற முடியுமா?

முதல் நாள் உண்ட மச்சம் வயிற்றில் இருக்க

மிச்ச கறியும் பிரிஜ்ஜில் இருக்க

மச்ச சட்டியிலே மரக்கறியை சமைத்து

மூக்கு முட்ட பிடிப்பது விரதமாகுமா?

 

கோயிலுக்கு போனால் அடுத்தவரின்

நகையை கண்ணு பார்க்க

சேலையின் விலைகளை மனசு எடை போட

கடைகளில் மலிவு விற்பனையில்

வாங்கி  மூட்டை கட்ட மனம் துடிக்க 

கைகள் மட்டும் கூப்பி என்ன பயன்?

 

இடிச்சு பிடிச்சு   கோவிலுக்கு  போவது

கடவுளை காணும் மனசுடனா?

இளசுகள் ஓடுதுகள் ஜோடியை காண

பெரிசுகள் போவது பொருட்களை அள்ள

 

சுவாமி தரிசனம் கண்கள் காணுமா?

ஆசைகளைதான் மனசு துறக்குமா?

ஓம் என்னும் வார்தையை உள்ளம் சொல்லுமா?

உள்ளம் உருகி அம்பிகை பாதம் பணியுமா?

கவி மீனா

பழ புளி (உண்மை கதை)

 பழ புளி என்றதுமே நான் கேள்வி பட்ட ஒரு உண்மையான சம்பவம் என் ஞாபகத்துக்கு வருகிறது.

யாழ்பாணத்திலே வீட்டுக்குள்ளேயே வளர்ந்த, வெளி உலகம் தெரியாமல் இருந்த ஒரு பெண்மணி திருமணத்துக்கு பிறகு ஒரு ஒதுக்குப்புறமான  சிங்கள ஊரிலே  கணவருடன் குடியிருக்க சென்றார்.

 அவருக்கு ஆங்கிலமோ சிங்களமோ தெரியாது.

 

அவரது கணவர் அவவுக்கு ஒரு  மலை நாட்டு பொடியனை வீட்டு வேலைகள் செய்ய என உதவிக்கு பிடித்து கொடுத்தார் காரணம் அவர் வேலைக்கு போனால் மாலைதானே வீடு வந்து சேருவார்.

தினமும் அந்த வேலைகார பொடியன்தான் கடைக்கு போய் தேவையான பொருட்களை வாங்கி வருவான் அன்று ஒரு நாள் சமையலுக்கு என்ன தேவை என பார்த்த போது பழபுளி இல்லை என கண்ட அவன் ஓட்டமாக  ஓடி வந்து அம்மா புலி புலி என்று சொன்னான்.

 அந்த பெண்மணிக்கு இவனுக்கு தமிழ் சரியா கதைக்க தெரியாது என்பதை மறந்து காட்டு பக்கத்திலே இருப்பதாலே  புலி வந்துட்டோ என நினைச்சு ஓடி போய் அறைக்குள் புகுந்து  கதவை தாழ்பாழ் போட்டு கொண்டு இருந்து விட்டார், வேலை கார பொடியன் எத்தனை முறை கதவை தட்டியும் அவ கதவை திறக்கவே இல்லை  அவனும் களைத்து போய் பேசாமே  போய்விட்டான்.

 

அன்று மாலை கணவர் பசியோடு வீட்டை வந்தால் சமையல் மணமும் இல்லை சமையல் கட்டிலே உணவும் இல்லை வேலை காரனும் பசியிலே சோர்ந்து சுருண்டு போய் படுத்து விட்டான்.

 மனைவியையும் வெளியில் காணாததால் அவர் அவனை எழுப்பி என்னடா அம்மா எங்கே ஏன் சமைக்கவில்லை என கேட்டார்,

அதற்க்கு அவன் அம்மா ஓடி போய் கதைவை பூட்டி கொண்டு திறக்கவே இல்லை சமைக்கவும் இல்லை,

நான் சமையலுக்கு பழ புளி  இல்லை என்று சொன்ன கையோடே அம்மா போனவதான் இன்னும் கதவை திறக்கவில்லை என அவரிடம் சிங்களத்திலே விளக்கமாக சொல்லிட்டான்.

 

அவரும் உடனே பயந்து போய் கதவை தட்டி நான் வந்து இருக்கன் கதவை திற என கூப்பிட்ட பிறகுதான் அவ கதவை திறந்து புலி ஓடி போட்டுதா? என கேட்டார்,

புலியா? புலி எங்கே வந்தது?  என அவர் ஆச்சரிய பட்ட போது அவ சொன்னா இவன்தான் புலி புலி என்று ஓடி வந்தவன் நான் பயத்திலை கதவை பூட்டி போட்டு இருந்தனான் நீங்கள் வரும் வரை என சொல்ல பசியோடு வந்த கணவருக்கு எப்படி இருக்கும்?

அட கருமமே! அவன் சமையலுக்கு பழ புளி இல்லை என்று அல்லே சொன்னான் என சொன்னார்.

இல்லை அவன் புலி என்றுதானே சொன்னான் என்று அவ சொல்ல, அன்றைய பொழுது ஒரு தமிழ் சொல்லை பிழையாக சொன்னதாலே இப்படி பசியோடும் பயத்தோடும் கழிந்ததாம் இது உண்மையாக நடந்த கதை.

அந்த பெண்மணி வேறே யாரும் இல்லை எனது தாயார் என்பதை சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்.

வடிவான, படித்த கொழும்பு மாப்பிள்ளையை கட்டிக்கொண்டு முதல் முதலாக வெளியிடத்தில் வாழ போன பெண்ணுக்கு நடந்த கதை இது.

 

கண்ணே தங்கச்சி கண்ணே புருஸன் வீட்டில் வாழ போகும் பெண்ணே!`

 

(எனக்கே கொஞ்சம் டவுற்றாக தான் இருக்கு ல ள ழ விலே ஹஹ ஹஹ)

 
கவி மீனா