Sonntag, 24. August 2014


தூங்கையிலே

தூங்கையிலே வாங்குகிற மூச்சு சுழி மாறி போனாலும் போகும், இன்று இருப்போர் நளை இருப்பது நிச்சயம் இல்லை

ஓடி ஓடி கோடி பணம் சேர்தாலும் மாடி வீடு கட்டினாலும் போகும்  போது நாம் கொண்டு போக எதுவும் இல்லை

என்பதை உணர்ந்து கொண்டால் மனிதர்கள் மனிதர்களாய் வாழ முடியும் இதை உணராத மனிதர்கள் எனது உனது

என்றும் எனது சொந்தம் உனது சொந்தம் என்றும்  உயிரோடு இருக்கும் காலம் வரை அடிபட்டு நின்மதியிழந்தே

வாழுகிறார்கள்.

வாழும் காலம் வரை மனிதன் கானல் நீரை தேடி ஓடும் மானை போலே இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்று

அலையும் மனசோடே அலைந்து அலைந்து அழிகின்றான்.

தன் நாவின் ஒரு சுவையை தாண்ட அறியாதார் மலையளவும் காடளவும் தாண்டி அலைகின்றார் என்னே இம் மனிதர் மதிஎன்ற கூற்றுக்கு இணங்க மனிதர்களது மன அடக்கம் இல்லா செயலலேதான் அழிவுகளும் அலைசல்களும் வாழ்வில் அதிகம் ஏற்படுகிறது அதனால்தானே பேராசை பெரும் தரித்திரம் என்று ஒரு பழமொழியும் உண்டு.

நாம் வாழும் காலத்தே நல்லதை உணர்ந்து நன்மைகள் செய்து நல்லபடி வாழ்வோமாகில் நாம் புவிமீதிலே வாழும் போதே சொர்கத்தை காணு முடியும். சொர்கம் நரகம் என்பது எல்லாம் இறப்பின் பின்தான் காண முடியும் என்பதல்ல வாழும்  போது நாம் அடுத்தவரோடே அன்பாக இருப்பதனாலே  இரண்டு பக்கத்திலும் சொர்கம் என்றால் என்ன என்பதை காண முடியும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது மனிதராய் பார்த்து உணராவிட்டால் உண்மைகள் கண்ணுக்கு தெரியாது பேய்களை பார்த்து ஆசை படுபவனுக்கு கடவுள் கண்ணுக்கு தெரியாது காம உணர்வு கொண்டு அலைபவனுக்கோ உண்மை காதல் புரியாது. பூவின் வாசம் தெரியாது காற்றின் உருவமும் கண்ணுக்கு தெரியாது ஆனால் நாம் அதை உணர்வது போலே இறைவன் நம்மோடு  இருப்பதையும்  நாமே அறிந்து கொள்ள வேண்டும்.

கவி மீனா

 

 

 

 

 

 

மறுநாள் யாரிடம்

இன்று என்னிடம்

நாளை உன்னிடம்

மறுநாள் யாரிடம் தெரியாது

இறகு இல்லா போதிலும்

அது தாவி பறக்குது கைகளிலே

அது எத்தனை கிடைத்தாலும்

மனம் போதாது என்றே எண்ணிவிடும்

சேர சேர அதன்மேல் ஆசை

பேராசையாக மாறிவிடும்

வாழ்விலுள்ள கஸ்டங்களை

 அது படிபடியாக மாற்றிவடும்

பாசமுள்ள உறவுகளைகூட

 அது தனி தனியாக பிரித்துவிடும்

அது பாதாளம் வரை பாயும் என்பர்

விண்ணைக்கூட எட்டுமென்பர்

கடவுள் செய்யா வேலையெல்லாம்

இந்த அச்சடித்த வெறும்

நோட்டு செய்துவிடும்

அந்த காசேதான் கடவுள் என்பர்

காசு இருந்தால்தான் கோவில்

 கூட கட்டிடுவர்

ஏழ்மையும் துன்பமும் காசை

கண்டு அழுவதுண்டு

ஆனால் காசோ ஏழையை

பார்த்து சிரிப்பதுண்டு

இந்த காசை கண்டு

பிடித்தவன்தான் யாருடா

அந்த காசு மனிதனின் வாழ்வை

 மாற்றியதும் ஏனடா?

கவி மீனா

 

 

Freitag, 15. August 2014


ஓர் மரத்து பறவைகள்

ஓர் மரத்து பறவைகளாய் ஓர் இடத்தில் வாழ்ந்திருந்து

ஒரு மொழியை பேசி வந்த ஈழத்து தமிழ் பறவைகள்

அமைதியை தேடி கூடு விட்டு பறந்ததையா

போகும்  இடம் தெரியாமல் புகலிடம் தேடியே

நாலு திசை எங்கும் பறந்து போனதையா

பல பல மரங்களில் தங்கி விட்ட காரணத்தால்

இவை பல மொழி பறவைகளாய் மாறி போனதையா

குஞ்சு பறவைகளோ சொந்த மொழி தெரியாமல்

தாய் தந்தையை புரிய முடியாமல்

தலை கீழாய் வாழுதையா இது தாங்காத சோகம் ஐயா

அன்னிய தேசத்திலே அகதிகளாய் வாழ்கையிலும்

அகம் பாவம் கொண்டதினால் ஒன்றுக் கொன்று உதவாமல்

தனி தனியே வாழுதையா தனி வழிதான் ஏகுதையா

பணம் தான் பெரிது என்று பாசத்தையே உதறி விட்டு

பாவிகளாய் வாழுதையா நேரம் இன்றி பறக்குதையா

வெளிநாட்டில் ஊறி விட்ட இந்த பறவைகட்க்கோ

சொந்த மொழி இல்லை சொந்த நாடும் இல்லை

சுற்றமும் இல்லை   சூ ழலும் இல்லை உள்ளத்திலும்

உடலிலும் சுகமுமோ இல்லை

எனி நினைத்தாலும் திரும்பாது ஊர் போக முடியாது

தொலைத்து விட்ட வாழ்வு தனை தினம் எண்ணி எண்ணி

துடிக்குதையா இரத்தக் கண்ணீர் வடிக்குதையா

மனம் இரத்தக் கண்ணீர் வடிக்குதையா

கவி மீனா

 

படி தாண்டி வருவாயா

கொடி போன்ற இடையினிலே

பூக்கூடை தாங்கி நிற்க்கும்

பொற் சிலையே பேரெழிலே

பிரம்மன் படைத்த அழகோவியமே

என் கருத்தினில் உறைந்தவளே

வானில் வட்ட நிலா வந்ததுபோல்

எதிர் வீட்டு வாசலில் நீ வந்து

எட்டி பார்க்கையிலே 

என் இதயம் அலைகடல் போல் பொங்குதடி

உன் பட்டு மேனி தொட்டு தழுவி நிற்க்கும்

பட்டு சேலைபோல் உன்னை தழுவிடவே

என் கரங்கள் துடிக்குதடி

 மொட்டவிழா மலர் போலே 

பிரியாத உன் இதழில்

என் உயிர் நின்று தவிக்குதடி

 என்னை பித்தனாய் அடிக்குதடி

உன் வட்ட கரு விழிகள் என்னை

வாவென்று அழைக்குதடி

வாசல் படி தாண்டாத பத்தினியாய் நீ இருந்தும்

என்னை உன் வசம் இழுத்தவளே

படி தாண்டி வருவாயா? என் வாசல் வந்து

எனக்கு வாழ்வொன்று தருவாயா?

கவி மீனா