Samstag, 13. September 2014


காதலே ஒரு படுகுளி

காதல் வந்து மோதையில்

இதயம் சுனாமி போலே பொங்கும்

உந்தன் உள்ளம் அலையோடே

அள்ளி கொண்டே போகும்

கண்ணில் தெரியா காதலாலே

உந்தன் சிந்தை குழம்பி போகும்

காதல் வைரஸ் தாக்கி உடலும்

நாளும் நலிந்து போகும்

காதல் நோயே பெரும் நோயாய்

மனித வாழ்வை முடக்கி போடும்

மண்ணில் பிறந்த மனித குலமே

காதல் வலையில் மாட்டி துடிக்கும்

கடல் மீன்கள் போலே

மாய வழியில் மாள துடிக்கும்

கர்ம வினைதான் காதலாகி

 கண்ணீர் வடிக்க வழியும் காட்டும்

உறவும் பிரிவும் உனது விதியுமாகி

உள்ளம் நொந்து போகுமே

காதலே ஒரு படுகுளி

வாழ்க்கை பாதையில் பார்த்து

நடக்க வேணும் உன் இருவிழி

உன் இரு விழி

கவி மீனா

 

ஈயான் சொத்தை

காணி நிலம் வேண்டும் பராசக்த்தி காணி நிலம் வேண்டும் என்று பாரதியாரும் பாடினார் என்பதற்காக காணி வீடு என்று அதையே கட்டிபிடித்துக்கொண்டு கடமையை செய்ய தவறிய பெற்றவர்களும் ஊரிலே இருக்கிறார்கள் இருந்தார்கள்.

என்னதான் சொத்து காணி நிலம் இருந்தாலும் யாரும் போகும் போது கொண்டு போக முடியாது, அதனாலே ஆகும் காலத்தே சொத்து வைத்திருப்பவர்கள்  அதனை பிள்ளைகளுக்கு உரிய நேரத்தில் எழுதி கொடுப்பதுதான் முறை.

மனிதனின் நிலைகளான பிரம்மசாரியம், இல்லறம், வானபிரஸ்தம், சன்னியாசம் என கூறப்படும் இன்நிலைகளில் வானபிரஸ்த நிலையில் நாம் எமது கடமைகளை செய்து முடிக்க வேணும் என்பதே இந்து மதம் சொல்கிறது.

அந்த தருணத்தில் எமது கடமைகளை மட்டும் முடிக்காமல் எம்மிடம் உள்ள சொத்துக்களையும் எமது வாரிசுகளுக்கு பகிர்ந்து கொடுத்து நாம் ஆசைகளை விட்டொழித்து சன்யாசம் புக சொல்கிறது இந்து மதம் ஆனால் இதை யார்தான் சரி வர கடைப்பிடிக்கிறார்கள்?

உயிர் பிரிய போகும் கடைசி நேரத்திலும் எனது காணி வீடு என்று உறுதியை கட்டி பிடித்து அலைந்தவர்கள் எத்தனை பேர்?

 பிள்ளைகளின் திருமண்தின் போது தருவதாக சொன்ன வீடு வளவை கூட கடைசி வரை எழுதி கொடுக்க மனம் இல்லாது  அதனால் பிள்ளைகள் குடும்பத்திலே பெரும் பூசல்கள் வந்த போதும் தனது வாக்குகளை காப்பாறாமல் எனது வீடு எனக்கு வேணும் என்று பேராசையோடு அலைந்த பெற்றோர்கள் பலர் ஊரிலே கடைசியில் மாளும் தருவாயில் அனாதைகளாக மாண்டு மடிந்தார்கள்.

அப்படி பட்ட பேராசை,  சுயநலம் படைத்த  ஆத்துமாக்கள் மாண்ட பின்பும் சொர்கத்துக்கு போகாமல் அந்த வீடு வளவை சுற்றியே பேயாக அலைந்து திரிவதுதான் உண்மை.

இப்படி எழுதி கொடுக்காமல் போன காணிகளுக்கும் சொத்துக்கும் வாரிசுகள் தலை தெறிக்க சண்டை போட்டு ஒன்றுக்கொன்று பேசாமல் போவதும் ஆளுக்காள் பழி வாங்க துடிப்பதும் நம்மவரிடையே காண படுகிற உண்மையாகும்.

வெளி நாடுகளில் குடியேறி நல்ல நிலமைக்கு வந்த பிள்ளைகள் கூட ஊரிலே இருக்கிற காணி பூமிக்காக  ஆளுக்காள் அடிபட்டு நின்மதியிழந்து நிற்பதும், ஆயுள்வரைக்கும் சகோதரங்கள் பேசாது கோபமாகி போவதும் எங்கும் நடக்கின்றது இதற்க்கு காரணம் அந்த மாண்டு போன பெற்றவர்கள்தான்.

உயிரோடு இருக்கும் போதே இருப்பதை பங்கிட்டு கொடுக்குவேணும் இல்லாது போனால் இப்படிதான் பிள்ளைகள்  சொத்துக்கும் காணிக்கும் வீட்டுக்கும் அடிபட்டு நின்மதியற்ற உறவுகளாக  பிரிந்து வாழ நேரிடும்.

கடைசியில் ஈயான் சொத்தை தீயான் கொள்வான் என்று யாரோ அன்னியன் எடுத்து போகும் போது சொத்துக்கு உரிமையாளர்கள்  அணிலை மரம் ஏற விட்ட பூனை போலே ஆவென்று பார்திருப்பர்.

சில பாவ பட்ட மனிதர்களாலே சந்ததிகளே நின்மதியை இழந்து தவிக்க நேரிடுகிறது, இந்த விடயம் அனேக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் வாழ்வில் நடைபெறுகின்ற உண்மை சம்பவமாகும்.

உண்மையான அன்பு பிள்ளைகளிடத்தே இருக்குமாகில் உரிய நேரத்தில் அந்த சொத்துக்களை அவர்களுக்கு எழுதி கொடுப்பதும் பிள்ளைகள் மேலே நம்பிக்கை வைத்து வாழ்வதும் பெற்றவர்களுக்கு அவசியம்.

அன்பை கொடுத்தால்தான் அன்பை வாங்க முடியும்  சொத்தோ, காணி, பூமியோ கடைசி நேரத்தில் எம்மை  பார்க்க போவதில்லை பிள்ளைகளிடம் ஒப்படைத்து அவர்களது அன்பை பெற்று வாழ்ந்தால் பிள்ளைகளின் ஆதரவு கடைசியிலும் இருக்கும், பொருள் இருந்தும் சுயநலமாக வாழ்ந்தவர்கள் இறுதி காலத்தே  யாரும் பக்கமில்லாத அனாதையாக தான் மாண்டு மடிந்தார்கள் மடிவார்கள்.

சில பேர் நினைக்கலாம் சொத்தை கொடுத்தால்தான் அன்பா?என்று ஆனால் சொத்தை எழுதி கொடுத்தால் பின்னடிக்கு பிள்ளைகள் தங்களை பார்காமல் சொத்துடன் ஓடி போவார்கள் என்கிற அவநம்பிக்கை உள்ளவர்கள் தான் கடைசியிலே அனாதைகளாக அந்தரிக்கிறார்கள்.

பிள்ளைகளை நம்பினவர்கள் சொத்தை எழுதி கொடுக்கிறார்கள் அந்த நம்பிக்கைதான் பிள்ளைகளுக்கும் பெற்றவருக்கும் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்துகிறது, காசும் காணியும் முக்கியமில்லை அங்கு காட்டுகிற அன்பும் நம்பிக்கையும்தான் ஒரு மனிதனை காப்பாற்றுகிறது.

இதை உணராத பெற்றவர்கள் கடைசியில் அனாதையாக அவதியுற்று மாழுகிறார்கள் அவரது வாரிசுகளும் அடிபட்டு நின்மதியில்லாமல் அலைகிறார்கள்

இது நான் வாழ்க்கையில் கண்ட உண்மைகளாகும்.

கவி மீனா