Donnerstag, 29. November 2012


மாடப்புறா இரண்டு

மாலையிலே வந்து மாடப்புறா இரண்டு  காதல் கதை பேசும்

தினம் அந்தி பொழுதில் இவை ஓடி வந்து இருந்து கொஞ்சி பேசி மகிழும்

ஓடும் நீரில் முழ்கி எழுந்து இவை  சிறகடித்து நீராடி மகிழும்

முகில் ஓடி மறையும் காட்ச்சி கண்டு கழித்து உள்ளம் திளைக்கும்

ஆதவன் ஓடி அடிவானை தொட்டு முத்தமிடும் காட்ச்சியையும் காணும்

மலர் சோலை தனில் பூத்து குலுங்கும் மலர்களையும்  மெல்ல ரசிக்கும்

மாலை நேரம் வந்து வீசும் தென்றலிலே உடல் களைப்பை நீக்கும்

ஓடி ஓடி உளைத்து பகல் முழுதும் ஓய்ந்து போய் இவை காணும்;

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று இவை பேசி கொள்ளும்

மாடி வீடும் இல்லை ஒரு கூடு தன்னும் இல்லை ஆனால் நின்மதியை காணும்

சாதி மதம் இல்லை பேதம் எதுவும் இல்லை காதல் அங்கே இருக்கும்

காசு பணம் இல்லை போட நகையும் இல்லை வெறும் கையோடு தான் இருக்கும்

ஆனால் கூடி மகிழ கோடி இன்பம் பெற அவை நாடி தினம் சேரும்

ஓடி களைத்த புறா வாடி நிக்காமல் மற்றதை நீவி தடவி கொடுக்கும்

அங்கே இணையில்லா காதல் வந்து  இருவருக்கும் இனிய  சுகம் பிறக்கும்

வானில் மதி வந்து தேன் நிலவை பொழிய இவை உறங்கி துயில் கொள்ளும்

நாளையும் உண்டு வாழ்வு என இவை மனம் துணிந்து அமைதி கொள்ளும்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen