Donnerstag, 6. Januar 2022

 

என் காணி என் காணி

பாழ்பட்ட காணியும்

 இந்த பரதேசிகள் வாழ்க்கையும்

மணி அக்கா வீடு இன்று கை மாறி போச்சுது

அக்கம் பக்கம் சுற்றம் எல்லாம் ஏமாந்து நிக்குது


என் காணி என் காணி என்று கக்கத்திலே

உறுதியை கட்டி கொண்டு திரிந்த

மணி அக்கா ஆவியும் அந்தரத்தில் தொங்க

கூட இருந்து கூட பிறந்தவளுக்கே குழி பறித்து

அந்த வீட்டை பாழடைய விட்ட  சோம்பேறி ஆவியும்

அலறி புடைத்து ஓட

பரம்பரை காணி என்று பெருமை பேசி திரிந்த

பரதேசிகள் வாழ்க்கையும்

காலத்தோடு அழிந்து போக

போனதையா பூமி கை மாறி போனதையா பூமி

 

மாங்காய் என்றும் தேங்காய் என்றும்

முருங்கைகாய் என்றும் ஓடி ஓடி மேய்ந்த

முன் வீட்டுகாரரும் வயிற்றிலடித்து அழ

கம்பி வேலி போட்டு காணியை தனதாக்க

திட்டம் போட்ட துரோகி பக்கத்து வீட்டுகாரனும்

தலையில் கை வைத்து ஒப்பாரி வைக்க

வீட்டுக்காக வீடு பூந்து வட்டமடித்து  

ஏமாற்றி பெண்ணை பிடித்து

வீட்டுக்காக சுற்றி சுழன்று

நித்தமொரு சண்டையை உருவாக்கிய

புத்திசாலி மாப்பிளை இன்று

தன் புத்தி கெட்ட தனத்தாலே

ஏமாளியாகி போக்கத்து நிக்க

போனதையா பூமி கை மாறி போனதையா பூமி

 

காணி நிலம் வேண்டும் பராசக்தி

காணி நிலம் வேண்டும்

என்று பாரதி கூட ஆசைபட்டான்

ஆசை பட வைக்கும் காணி நிலம்

ஒன்றும் யாரோடும் கூட போவதில்லை

மண்ணுக்கு ஆசைபட்டவன்

மண்ணுக்குள்ளே போகிறான்

மண்ணுக்கும் பெண்ணுக்கும்

பொன்னுக்கும் ஆசை பட்டு

பரதேசிகள் வாழ்வு மண்ணாகி போகுது

 

ஆசைகளை வளர்துவிட்டால்

அவல பட்டு சாகுதுகள்

வேணாம் என்று விட்டு விட்டால்

நெஞ்சுக்கு நின்மதிதான் கிடைக்கும்

கிடைபது கிடைக்கும் என நினைத்தவிட்டால்

வருவது வரும் போவது போகும்

எதுவும் நமக்கு சொந்தமில்லை

இதுதாங்க உண்மை! இதுதாங்க உண்மை!

கவி மீனா