Samstag, 10. November 2012

 





குருவி குஞ்சு
குருவி குஞ்சு போலே நான் எட்டி எட்டி பார்கிறேன்
கூட்டை விட்டு என்னாலே பறக்க முடியலை
வானில் ஓடும் மேக கூட்டம் பார்து நான் ரசிகிறேன்
வெண்ணிலவின் அழகை நான் அள்ளி அள்ளி குடிப்பேன்
காணும் துரம் வரைக்கும் பசுமை கண்ணை பறிக்கும்
வண்ண வண்ண பூக்கள் என்னை மின்னி மின்னி இழுக்கும்
பறந்து செல்ல ஆசை கொண்டேன் பாதையின்றி தவிப்பேன்
ஓடும் நதியின் ஓசை என் காதில் சங்கீதம் பாடும்
உயர்ந்த மலையின் சிகரம் என் எண்ணங்களை உயர உயர வைக்கும்
கடவுளின் கை வண்ணங்களை உலகில் கண்டு வியப்பேன்
மனசு போகும் தூரம் வரை பறக்க நானும் துடிப்பேன்
இறக்கை இன்றி நானும் பாவியாகி தவிப்பேன்
பாவியாகி தவிப்பேன்
கவி மீனா


Keine Kommentare:

Kommentar veröffentlichen