Montag, 9. März 2015


முற்றுப் புள்ளி

வானம் இருண்டது போல்

மனமும் இருண்டிருக்கு

சோ என்று கொட்டும் மழையிலும்

சர் என்று கிழித்தக்கொண்டு

 வாகனங்கள் ஓடுது

வாழ்கை மட்டும் துயரங்களை

கிழித்துக்கொண்டு

ஓட முடியாமல் தவிக்கிறது

கரையை மோதும்  ஓயாத

கடல் அலை போலே

நினைவலைகள் நெஞ்சில்

மோதி செல்கிறது

பிறந்ததும் வளர்ந்ததும் 

வீணே மடிவதற்க்கா

உலகில் சாதித்தவர்கள் கூட 

சாகாமல் வாளவில்லை

பணத்தை குவித்தவன் கூட

ஆயுளை நீடிக்க வளி காணவில்லை

மண்தின்னும் உடலுக்குள்

எத்தனை ஆசைகள்

வாழ்க்கையில் எத்தனை போராட்டம்

இலைகள் கூட இலையுதிர்

காலத்தில்தான் உதிரும்

ஆனால் மனித உடல் எப்ப விழும்

என்பது யாருக்கும் தெரியாது

யாருக்கு யார் துணை

அது கூட நிலைப்பதில்லை

மழை துளி மண்ணை

தொடுவது போலே

மனித வாழ்வுக்கும்

ஒரு முற்றுப் புள்ளி உண்டு

இன்றோ நாளையோ

அதை யார் அறிவாரோ

கவி மீளா

 

காட்டு ரோசா
 

ஆயிரம் பூக்கள் என் மீது விழுந்த போதிலும்

நீ எறிந்த அன்பு என்னும் ஒரு பூவே

என் உள்ளத்தில் மறையாமல் நிற்கின்றது

மண்ணை விட்டு நீ மறைந்த போதும்

என் கருத்தை விட்டு நீ மறையாதிருப்பதென்ன

காதலுக்கு அர்தம் சொன்ன பாச மலர் நீதானே

பாதையிலே பூத்திருந்த காட்டு ரோசா நீதானே

காவியமாய் நிலைத்தது உன் கதைதான் நெஞ்சத்திலே

ஒரு கண்ணீர் காவியமாய் நிலைத்தது

உன் கதைதான் நெஞ்சத்திலே

கவி மீனா

பாவற்காய்

இன்று நான் சமைத்த பாவற்காய் கறி கசப்பு தன்மைக்கு பதிலாக இனிப்பாக இருந்தது ஒரு அதிசயமாக எனக்கு இருந்திச்சு, நான் சீனியோ இளநீரோ எதுவுமே சேர்கவில்லை வழமை போலவே சமைத்த போதும் ஏன் இனிப்பு சுவை வந்தது என்பது எனக்கு புரியவில்லை, ஒரு வேளை தோட்டக்காரன்  இந்த பாவற் செடியை உரத்துக்கு பதிலாக சீனி போட்டு வளர்தானோ தெரியவில்லை, இப்படி நினைத்த போது உண்மையாக நடந்த ஒரு சம்பவம்தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.

 

ஒருத்தருக்கு சரியான சுகர் வருத்தம் (Diabetic) அந்த நோய்க்கு பாவற்காய் நல்ல கை வைத்தியம் என்பதால், அவரது படிப்பறிவு இல்லாத மனைவி அவருக்கு தினமும் பாவற்காயிலை யூஸ் அடிச்சு காலை மாலை கொடுப்பதுடன், தினமும் பாவற்காயில் கறி வேறு சமைத்து கொடுத்து வந்தா, அவவுக்கு தனது கணவர் பாவற்காய் சாப்பிட்டு வந்தால் வருத்தம் குறைந்து சுகமாகி விடுவார் என்பதுதான் தெரிந்ததே ஒளிய அந்த நோய்கான காரணங்கள் எதுவுமே தெரியாது அந்த சுகர் வருத்தம் ஏன் வருகுது என்பது பற்றி விழங்கக்கூடிய அறிவும் அவருக்கு இல்லை.

அதனால் அவர் காலை மாலை பாவற்காய் யுஸ் சரிகட்டும் போது பாவம் கணவர் குடிக்க கசப்பு இல்லாமல் இருக்க வேணும் என்று நினைத்து  சீனியை  பாவற்காயுடன் கலந்து மெசினில் அடித்து யுஸ் செய்து கொடுத்ததார், அத்துடன் மதியம் பாவற்காய் கறி வைக்கும் போதும் ஒரு பிடி சீனியை போட்டுதான் சமைத்து வந்தா, அவருக்கு தெரிந்தது பாவற்காய் சுகர் வருத்ததுக்கு நல்லது என்பதும், கணவர் அதை சாப்பிட வேணும் என்பதும்தான்.

 

எனக்கு கூட அவர் ஒருநாள் சொன்னா பிள்ளை சுகர் வருத்தம் இருந்தால் பாவற்காய் யூஸ் செய்து குடிக்க கெதியிலை சுகம் வரும் என்று, இப்படியே அவர் தான் தன் கணவருக்கு தினமும் பாவற்காயும் சேர்த்து கொடுப்பதாக சொல்லி பெருமை பட்டு கொண்டே வந்தார் ஆனால் யாருக்கும் தெரியாது அவர் சீனியும் நல்லா கலந்தே அவருக்கு கொடுத்து வந்த கதை,  கடைசியிலே அவரது கணவருக்கு சுகர் வருத்தம் கூடி கூடி ஒரு நாள் கை கால் எல்லாம் இழுத்து நாலு வருடம் படுக்கையிலை கிடந்து அவர் மாண்டும் விட்டார்.

 

இதைதான் அறியாமை என்று சொல்வது வயதில் மூத்தவர் ஆன படியால் யாரும் அவர் தப்பு  பண்ணியிருப்பார் என்று பிள்ளைகள் கூட அவரை எப்படி சமைக்குறார் எப்படி யூஸ் செய்கிறார் என்று கேட்கவும் இல்லை, இதைதான் சொல்வது கேள்வி செவியன் ஊரை கெடுப்பான் என்று  பாவற்காய் நோய்க்கு மருந்து என்று மட்டுமே கேட்டு விட்டு அந்த நோயை பற்றி அறியாமல் போனது முட்டாள்கள் செயல்.

 

ஆனால் பாவற்காய் உண்மையாகவே சுகர் வருத்தக்காரர் சாப்பிட வேண்டியது அவசியமே அது இரத்தில் உள்ள இன்சுலின் அளவை கூட்டி சுகரை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது

காய்ந்த  பாவற்காய் சீவல்களாக பக்கற்றில் விக்குறார்கள் அதை வாங்கி சுடு நீரில் ஊறவைத்து அந்த சாற்றையும் குடிக்கலாம் அல்லது பாவற்காய் கறி சமைத்து குத்தரிசி சோற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

பாவற்காய் கசக்கும் என்பதற்க்காக சீனியை சேர்க்க கூடாது  ஆனால் சுகர் வருத்தம் உள்ளவர்கள் இனிப்பே சாப்பிட கூடாது என்பது சட்டமும் இல்லை.

  குளுக்கோஸ் இனிப்புக்களை அவர்கள் கைவசம் கொண்டே திரிய வேணும்  சுகர் குறைந்து கை நடுங்கி களைப்பு வரும் போது கண்டிப்பாக சீனியோ குளுக்கோசோ அவர்கள் சாப்பிட்டால்தான் உயிர் பிழைக்க முடியும்.

 

ஊரில் உள்ளவர்களுக்கு பாவற்காய் தினமும் கிடைக்கும்  இங்குள்ளுவர்களுக்கு அருமையாக தான் கிடைக்கும், கிடைக்கும் போதெல்லாம் வாங்கி சாப்பிட்டால் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.

ஊரில் இருக்கும் போது எங்க வீட்டிலை  எனது சகோதரன் செய்யும் வீட்டுத் தோட்டத்தில் பாவற்காய்,  பிசுக்கங்காய், புடலங்காய் என எல்லாமே காய்ச்சு தொங்கியது அதை காணும் போது ஒரு தனியான மகிழ்ச்சி ஏற்படும்.

நாமாக தோட்டம் வைத்து அதில் காய்களோ பூக்களோ வரும் போது அதை ரசிப்பதில் கூட பெரும் இன்பம் உண்டு, அதை எல்லாம் அனுபவித்து பார்த்தவர்களுக்குதான் புரியும்,

அதனால்தான் சொல்கிறேன் முடிந்தால் பாவற்கொடியை பயிர் செய்யுங்கள் செடி வளர்ந்து மஞ்சள் நிற பூக்களை தந்து காய்க்கும் போது  ரசியுங்கள் பின்னர் பாவற்காயை சுவையுங்கள்.

மனதிற்க்கும் மகிழ்ச்சி தரும் உடலுக்கும் நன்மை தரும் பாவற்செடி

 கவி மீனா