Freitag, 30. November 2012


ஆதவன் என்றும் அழிவதில்லை

ஒருநாள் கார் முகில் வந்து மூடும்

ஆதவன் நம் கண்ணுக்கு தெரியாமல் போவான்

ஆனால் ஆதவன் என்றும் அழிவதில்லை

மறுநாள் இடியோடு மழையும் கொட்டும்

ஆதவன் நம் கண்ணுக்கு தெரியாமல் போவான்

ஆனால் ஆதவன் என்றும் அழிவதில்லை

மீண்டும் பனி மூட்டம் வந்து மூடும்

ஆதவன் மீண்டும் கண்ணுக்கு தெரியாமல் போவான்

ஆனால் ஆதவன் என்றும் அழிவதில்லை

இது போலே நம் அறிவை மூடி நிற்க்கும்

ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றும் நம்மை

விட்டு விலகும் போது ஆண்டவன் நம் அறிவு கண்ணுக்கு

தெரிவான் என்கிறது இந்து மதம்

கவி மீனா

தமிழே என் உயிர்

செந்தமிழ் நாடு என்னும் போதினிலே

இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

என்று பாடிய பாரதி இன்று இல்லை ஆனால் அவர் சொல்லி சென்ற தமிழோ தமிழ் கவிதைகளோ என்றும் அழிவதில்லை

பால் இனிது தேன் இனிது தேனில் ஊறிய பழம் இனிது என்பர் ஆனால் அதிலும் இனியது தமிழே நம் தமிழே

நாம் கடல் கடந்து போனாலும் நம் மனம் கடந்து போகாதது தமிழே  இயல் இசை நாடகம் என்று தமிழை வளர்தனர் மூவேந்தர்கள் அன்று கடல் கடந்து சென்று உலகம் பூரா தமிழை வளர்பவர்கள் ஈழ தமிழர்கள் இன்று

கொழு கொம்போடே சேர்ந்து வளர்வது கொடி
தமிழர்கள் மனதோடே சேர்ந்து வளர்வது தமிழ்
நாம் எத்தனை பிற மொழிகளை கற்ற போதிலும்  மறக்காமல் இருப்போம் நம் தமிழை

தாய் மண்ணில் புரண்டோம் தாய் மடியில் தவழ்ந்தோம் தமிழ் மொழியை  பயின்றோம் அதை தரணி எங்கும் வளர்தோம்  நம் தமிழ் என்றும் அழியாமல் காப்போம்

நம் தாய் நாட்டுக்கு ஈடாய் எந்த நாடும் இல்லை நம் தமிழ் மொழிக்கு இணையாய் எந்த மொழியும் இல்லை நாவில் இனிப்பது தேன் என்றால் நம் காதில் இனிப்பது நம் இனிய தமிழ் அன்றோ

நாம் நம் நாட்டை இழக்கலாம் வீட்டை இழக்கலாம் காசு பணம் யாவும் இழக்கலாம் உறவுகள் யாவும் பிரியலாம் அனால் நாம் கற்ற கல்வியும் நம் இனிய தமிழ் மொழியும் நம்மை தொடர்ந்து வரும் என்பதில் ஐயம் உண்டோ?
எங்கு போனாலும் தொடர்ந்து வரும் வான் நிலவு போலே  நாம் போகும் இடம் எல்லாம் கூட வருவது நம் தமிழே நம் இனிய தமிழே என் உயிர் என்பேன்

கவி மீனா

 

Donnerstag, 29. November 2012


மாடப்புறா இரண்டு

மாலையிலே வந்து மாடப்புறா இரண்டு  காதல் கதை பேசும்

தினம் அந்தி பொழுதில் இவை ஓடி வந்து இருந்து கொஞ்சி பேசி மகிழும்

ஓடும் நீரில் முழ்கி எழுந்து இவை  சிறகடித்து நீராடி மகிழும்

முகில் ஓடி மறையும் காட்ச்சி கண்டு கழித்து உள்ளம் திளைக்கும்

ஆதவன் ஓடி அடிவானை தொட்டு முத்தமிடும் காட்ச்சியையும் காணும்

மலர் சோலை தனில் பூத்து குலுங்கும் மலர்களையும்  மெல்ல ரசிக்கும்

மாலை நேரம் வந்து வீசும் தென்றலிலே உடல் களைப்பை நீக்கும்

ஓடி ஓடி உளைத்து பகல் முழுதும் ஓய்ந்து போய் இவை காணும்;

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று இவை பேசி கொள்ளும்

மாடி வீடும் இல்லை ஒரு கூடு தன்னும் இல்லை ஆனால் நின்மதியை காணும்

சாதி மதம் இல்லை பேதம் எதுவும் இல்லை காதல் அங்கே இருக்கும்

காசு பணம் இல்லை போட நகையும் இல்லை வெறும் கையோடு தான் இருக்கும்

ஆனால் கூடி மகிழ கோடி இன்பம் பெற அவை நாடி தினம் சேரும்

ஓடி களைத்த புறா வாடி நிக்காமல் மற்றதை நீவி தடவி கொடுக்கும்

அங்கே இணையில்லா காதல் வந்து  இருவருக்கும் இனிய  சுகம் பிறக்கும்

வானில் மதி வந்து தேன் நிலவை பொழிய இவை உறங்கி துயில் கொள்ளும்

நாளையும் உண்டு வாழ்வு என இவை மனம் துணிந்து அமைதி கொள்ளும்

கவி மீனா

 

Dienstag, 27. November 2012


காதலும் இயற்கையும்

பூவில் தூங்கும் வண்டு

தேனை உண்டு போதை கொண்டு

பாடும் காதல் சிந்து

அந்தி மாலை அல்லி மலரை கண்டு

காதல் சொல்ல ஓடி வரும் திங்கள்

தினமும் மோகம் கொண்டு

சல சலத்து ஓடும் அருவி ஓரம்

மோகன ராகம் ஓடு சதிராடும்

தேன்றல் வந்து

அந்தி சாயும் ஆதவன் அழகை கண்டு

களித்தாடும் பொன் வானம்

வண்ண நிறம் கொண்டு

நீல வானில் விண் மீன்கள் மின்னி நகையாட

பூமி உவகையோடு சிரித்து மகிழும்

நெஞ்சில் நிறைவோடு

ஆழ்கடலும் வெண் மதியை கண்டு

பொங்கி  கரையோடு அலை மோதும்

இறைவன் தந்த படைப்பில்

இயற்கை எங்கும் காதல் ரசத்தோடு

நல்ல கவி பாடி செல்லும்

கவி பாடி செல்லும்

கவி மீனா

Sonntag, 25. November 2012


விழியிரண்டும்

உனை பார்த்த விழியிரண்டும் பரவச மாகி

உனை தாங்கும் என் இதயம் ஏழு இசை ராகமும் பாடி

உன் இதழ் சிந்தும் புன்னகையில் மனம் கற்பனையில் மூழ்கி

வானை சுற்றி வரும் நிலவாக என் சிந்தனைகள் உனையே சுற்றி சதிராடி

கவி மழையில் நான் நனைந்தேன் உன் மடி மீது சாய

வருமா வருமா ஒரு காலம் மரணம் வரும் முன்னே

வருமா ஒரு காலம்

கவி மீனா