Dienstag, 25. Mai 2021

 

கல்யாண சாப்பாடு போடவா

ஊரிலை இருக்கும் வரை எனக்கு பிடித்த சாப்பாடே இந்த கல்யாண வீட்டு சாப்பாடுதான்  பாருங்கோ, நான் சின்னனாக இருந்த காலத்தே எனக்கு காச்சல் வந்து இரண்டு மூன்று நாள் சாப்பிடாமே இருந்தால் நான் அம்மாட்டை கேட்பது கல்யாண வீட்டு சாப்பாடு செய்த தாங்கோ என்று அதை  வாரவை போரவைக்கு எல்லாம் நெடுக சொல்லி சொல்லி அம்மா சிரிப்பா,

கல்லாண வீட்டிலை வாளை இலை போட்டு அதில் ஒன்பது காய்கறிகளோடு வடை பாயாசத்தோடு உணவு பரிமாறுவார்கள் அதில் உள்ள சுவை வேறு எங்கும் வராது


வீட்டிலை விரத நாட்கள் என்றால்  ஐந்து கறி சோறும்  வடை பாயாசமும் அம்மா சமைப்பது வழக்கம் அதை வாளை இலையில் சாபிடுவதும் உண்டு, ஆனாலும் சைவ கல்யாண வீடுகளில் வரிசையாக இருந்து தூக்கு சட்டியில் கொண்டு வந்து பரிமாறும் போதும் அதை சாப்பிடும் போது வந்த சந்தோஸமும்  வேறு எங்கும் வருவதில்லை, அதனாலை நான் அம்மா போகிற கல்யாண வீடுகளுக்கு நானும் வாரன் என்று அடம் பிடிப்து உண்டு ஆனால் அம்மா சொந்தக்காரங்க வீட்டுக்கு மட்டும்தான் கூட்டி போவா அயலுக்குள்ளை நடக்கிற கல்யாணத்துக்கு தானே தனிய போவா  எனக்கு அன்று முழுதும் கவலையாக இருக்கும் அன்று அது எல்லாம் ஒரு பெரிய சோக கதை ஆனால் இன்று நினைத்து பார்த்தால் அது  ஒரு ஞாபகம்தான்

வாளை இலையில்   சாப்பிடுவது அன்று ஒரு ஆசை அதில் மருத்துவ தன்மையும் இருபதாக சொல்கிறார்கள், கல்யாண வீட்டு சமையல் என்றாலே முக்கிய இடம் பெறுவது கத்தரிக்காய் குழம்புதான் மற்றும் உருளை கிழங்கு பிரட்டல்  பருப்பு பயிதம்காய் வாழக்காய் பொரியலும் வறையும் மாங்காய் இஞ்சி கலந்த சம்பலும்

தக்காழி சம்பலும் என பல வித மரக்றி கறிகள் வரும் போது அதை ருசிக்க துடிக்கும் மனசு அதிலும் பப்படம் என்றால் நான் இன்னும் ஒன்று தாங்கோ என்று கேட்பன்,  என்னுடைய அம்மா வில்லி மாதிரி மற்றவைக்கு தெரியாமல் நுள்ளுவா கேட்டு வாங்காதே என்று,  வீட்டை வரும் போது வேறே பேசுவா வெள்ளி க்கிழமை என்றால் வீட்டிலை பப்படம் செய்துதானே தாரன்  பிறகு என்னத்துக்கு காணாதததை கண்ட மாதிரி சபையிலே கேட்டனி என்று, எனக்கும் கொஞ்சம் வாய் துடுக்கு நான் சொல்லுவன் என்னமோ இந்த பப்படம்தான் ரேஸ் ராக இருந்தது என்று

பரிமாறுகிற தூக்கு சட்டியிலை கொண்டு திரிந்து சபை வைக்க எனக்கும் ஆசையாக இருக்கும் அந்த ஆசையையும் விட்டு வைக்க கூடாது என்று ஒருநாள் எங்க அம்மம்மாவின் அந்திரட்டி நடந்த போது யாரும் பார்காத நேரம் தூக்கு சட்டியை தூக்கி கொண்டு நானும் சபை வைக்கிற ஆட்களோடுசேர்ந்து சாப்பிட இருந்தவர்களுக்கு எல்லாம் பரிமாறி  கொண்டு வந்தன்  அம்மா என்னை காணவில்லை என்று சுற்றும் முற்றும் தேடுறது தெரிந்தும் நான் அவவை கணக்கு எடுக்கலை

எல்லாருக்கும் இரண்டு தடவையாக கறியும் போட்டு இரண்டு பப்படமும் போட்டு கொண்டு வர ஒரு மாமா சொன்னார் நீ கனக்க கறியை அள்ளி ஊத்துறாய் அத்தோடு ஒரு ஆளுக்கு ஒரு பப்படம்தான் போட வேணும்  இல்லாட்டி கடைசி பந்திக்கு சாப்பாடு இருகாது என்று, ஆனால் அங்கை சாப்பிட் ஒரு ஆளு அவருதான் அன்று சமையல் செய்தவர் அவரு சொன்ன வார்த்தை எனக்கு இன்னும் ஞாபகமாக இருக்கு

அவரு சொன்னார் பிள்ளை உனக்கு நல்ல மனசு பெரிய கை உனக்கு எண்டைக்கும் சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது நீ நல்லாய் இருப்பாய் என்று மனம் குளிர அவரு சொன்ன வார்த்தை என் மனசிலை பதிந்தே போய் விட்டது, அன்று எனக்கு 18 வயது, அவரு சொன்னது போலே  எனக்கு இன்று வரை சாப்பாடும் கிடைக்குது இன்னும் மற்றவர்களுக்கும் சாப்பாடு போட கூடியதாக இருபது கடவுளின் செயலும்தான்

பிறகு சபை வைக்க நீ ஏன் போனனீ என்ற அம்மாடை கேள்விக்கு நான் மாமாதான் கூப்பிட்டவர் என்று சொல்லி சமாளித்திட்டன் அவவுடைய தம்பிதான் மாமா என்பதால் அவ வாயை மூடிட்டா, இல்லாட்டி பொம்பிளை பிள்ளைகள் ஆட்களுக்கு முன்னாலை நடந்து திரிவது எல்லாம் சரியில்லை என்று கிளாஸ் எடுத்திருப்பா

அன்றைய கல்யாண சாப்பாடும் சபை வைக்கும் முறையும் ஒரு தனி மரியாதையை காட்டும் வந்தவர்களை எப்படி உபசரிப்பது என்பதையே கண்ணும் கருத்துமாய் நினைபார்கள், அதிலும் யாருக்கு முதல் பந்தி முதல் மரியாதை கொடுப்பது என்பதும் இருக்கும்,  குழந்கைளுக்கும் ஆண்களுக்கும் முதல் பந்தி பிறகு பெண்களுக்கு என்று பிரித்து வைபவர்களும் உண்டு, இல்லை குடும்ப சமேதராய் இருந்து சாப்பிடுவமுண்டு எதுவாகிலும் அன்றைய பண்பாடு நிறைந்த கல்யாண வீடுகளும்  கல்யாண சாப்பாடும் இன்று வரை என் நெஞ்சை விட்டு அகலவில்லை,

வெளி நாடு வந்த பிறகு பல கல்யாணவீடுகளுக்கு போய் வந்தாச்சு, கும்பலிலை கோவிந்தா என்ற மாதிரி இங்கு கல்யாண சாப்பாடுகள் கொடுபார்கள் பாருங்க ஆரம்பத்திலை இருக்கிற மேசைக்கு சாப்பாடு கொணர்ந்து பேப்பர் தட்டிலை பரிமாறினார்கள், இப்ப எல்லாம்  நாமாக லைன் கட்டி நின்று  பேப்பர்தட்டு எடுத்து வைத்திருக்கிற சாப்பாடடை பார்த்து பார்த்து வாங்கி கொண்டு போக வேணும் அதிலும் கறிகளில் எல்லாம் எண்ணெய் மிதக்கும்  கத்தரிக்காய் கறிக்கு திரி போட்டால் எரியும் என்று ஒரு நண்பி சொன்னதை நினைத் நான் சிரிபதுண்டு

மேலை நாட்டிலை லைன் கட்டி நின்று நாமாகதான் பேப்பர் பிளேட்டில் போடுறதை வாங்கிட்டு போய் இருந்து சாப்பிட வேணும் அதை கொண்டு போகும் போது கட்டியிருக்கிற நல்ல சேலையிலை பட்டிடுமோ என பயந்து ஒழுகிற கறி ஒன்றுமே நான் எடுப்பதில்லை

இதிலை பாயாசம் என்றால் ஒரு களி மாதிரி தருவாங்கள் வயிற்றை பிரட்டும் இங்கைதான் சனங்கள் ஏதோ காணததை கண்ட மாதிரி முந்தியடித்து சாப்பாடு வாங்க ஓடுவதும்,  பிறகு குறை சொல்லி கொண்டே வளிச்சு அடிபதும் பார்க்க வினோதமாகதான் இருக்கும்

அன்று ஊரிலை சாப்பிட்டது போலே ஒரு கல்யாண வீட்டு சாப்பாடு எனி என்றுமே இல்லை என்றாச்சு!

கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அது கௌரவ பிரசாதம் ஹஹஹஹஹஹ!

கவி மீனா

 

சீழ் பிடித்தசிந்தனை

டண்டநக்கா டண்டநக்கா

ஒரு தண்ட சோறு கிங்கு

புட்டுக்கிட்டு போட்டாரு இன்று

இருந்தும் கெடுத்தான் இறந்தும் கெடுத்தான்

என்று ஆனதுதான் வாழ்க்கை

இந்த மனித வாழ்க்கை

உட்கார்ந்த இடத்தில் இருந்தாரு

ஓடி ஓடி ஒழிந்தாரு

ஒட்டாண்டியா வாழ்ந்தாரு

காலன் வந்த போது வகையாகதான்

 மாட்டிகிட்டாரு

 


சுடுகாட்டில் பிணம் எரிந்த தீயும்

இன்னும் ஆறலை

கோட்டான் ஒன்று அலறுது

அவல சத்தம் கேட்குது

நாயும் நரியும் ஊளையிட்டு

ஓடி ஓடி திரியுது

கழுகும் காகமும் அடுத்தவன் சொத்தை

பிச்சு தின்ன சுற்றி சுற்றி பறக்குது

 

என்டை சொத்து என்டை சொத்து என்று

அடிபடுவோர்தான் எத்தனை

இன்றிருப்போர் நாளை இல்லை

இதுதானே உண்மை

சீழ் வடியும் உடம்புக்குள்ளே

சில மனிதருக்கு எத்தனை

சீழ் பிடித்தசிந்தனை

 

என்டை என்டை என்று சொன்னவர்கள்

ஒரு பிடி மண்ணை கூட

அள்ளி செல்ல முடிந்ததா?

கண்ணை மூடி விட்டாலே

காட்சி கூட தெரியுதா?

இந்த உலக காட்சி கூட தெரியுதா?

கவி மீனா