Sonntag, 24. Dezember 2017

உண்மை முகத்தை 

நாம யாரையும் திருத்த முடியாது
நாமாக விலகி செலவதே மேல்
ஏனெனில் குற்றம் செய்பவன்
தெரிந்தே செய்கிறான்
நாம் அதை தடுத்தால் அவன்
 நமகு எதிரியாகிறான்

தகாத ஆசைகளில் அலைபவனை
சுட்டி காட்டினால்
சுட்டி காட்டிய விரலை எமக்கு
எதிராக திருப்புகிறான்
நாடகமாடுபவன் ஒவ்வொருத்தருக்கும்
ஒரு முகத்தை காட்டுவான்
இதில் நாம் கண்ட முகம்
யாருக்கும் தெரியாது

 ஒருவனின் உண்மை முகத்தை
காண்பதே அரிது
ஒவ் வொருத்தனுக்கும் ஒவ்வொரு ஆசை
அதை தீர்க அவன் பாடு படுகிறான்
காமம் காசும் என வெறி பிடித்து அலைபவனுக்கு
நேர்மை நியாயம் உண்மை பற்றி
நாம சொல்வது வேப்பம் காயாக கசக்கும்
நமக்கு ஏன் இந்த வீண் வம்பு?

அவனவன் விதைத்ததை அவனே அறுப்பான்
ஆடும் மட்டும் ஆடி விட்டு அவனே
குழிக்குள் அடங்குவான்
இதுதான் அவன் தலை விதி

கவி மீனா
ஒன்று என்று எண்ணும் மனம்

ஆயர் குலத்து கண்ணனும் கடவுளாகினான்
ஆடுகள் மேய்பவனாம் யேசுவும் தெய்வமாகினான்
நல்லதை எடுத்து  சொல்ல கடவுள் தோன்றினார்
ஆசியாவில் தோன்றியதால் கண்ணனாகினான்

ஐரோப்பாவில் தோன்றியதால் யேசுவாகினான்

யேசுவை சிலுவையில் அறைந்து கொன்றனர்
கண்ணனையும் அம்பால் எய்து கொன்றனர்
இரத்தம் சிந்தவே கடவுளும் மனிதனாகினான்
கடவுள் ஒன்று என்று எண்ணும் மனம் வேண்டுமே
உன் மதம் என் மதம் என்று மதம் பிடிக்க வேண்டாமே


அவன் அவன் பாவத்துக்கு 
தண்டனை நிச்சயம் உண்டு
இதை பைபிள் மட்டும் சொல்லவில்லை
பகவத் கீதையும் சொல்கிறதே
யாதும் அறிந்தவனுக்கு மதம் இல்லை
ஞானம் பெற்றவனுக்கு கோவில் இல்லை

கடவுள் என்பவன் நம் கூட்டில்
நமக்கு வேண்டாம் வம்பு அடுத்த வீட்டில்
யாருக்கு இந்த உண்மை புரியுமோ?

கவி மீனா