Sonntag, 18. Januar 2015


தலைகால் புரியாமல்

புலம் பெயர் வாழ்வில்

சுதந்திரம் என்ற பெயரில்

சிதைந்தது தமிழர் வாழ்வு

அழிந்தது இன்ப தமிழின் மூச்சு

சுததந்திரம் கூடியதாலே

தறுதலையாக சுற்றுதுகள் சில இளவட்டம்

தலைகால் புரியாமல் பேசுதுகள்

நம் இனிய தமிழ் மொழியை

தமிழனுக்கில்லை இங்கே நின்மதி

அவன் வாரிசுகளுக்கு இல்லை கலாச்சாரம்

புகைக்காத கையும் இல்லை

குடிக்காத வாயும் இல்லை

பருவம் வந்தால் ஜோடியின்றி போகாத

இளசுகள் இல்லை

ஆடை மாற்றி எறிவது போல்

இது ஆளை மாற்றும் உலகம்

நாகரீகம் என்று சொல்லி

அரை குறை நாகரீகத்தில்

அலங்கோலமாய் அலைவது

சிலருக்கு தினம் வாடிக்கை

அதை பார்த்து பேசுவதே

பலருக்கு நல்ல வேடிக்கை

குண்டுமணி தங்கமின்றி ஊரில்

குமரிகள் கண்ணீரில் வாட்டம்

இங்கு ஆண்கள் கழுத்திலும் கையிலுமே

குண்டு குண்டா தொங்குது தங்கம்

தமிழர் இங்கு இரவு பகல் தெரியாமல்

காசை தேடி ஓட்டம்

இளசுகளோ சற் என்றும் பேஸ்புக் என்றும்

டீஸ்கோ என்றும் ஜோடியை தேடி ஆட்டம்

இங்கே காசு பணம் கூடி கலாசாரம் ஓடி

போனதுதானே புலம் பெயர் வாழ்வில்

கலப்பட திருமணமும் கலந்தது காதலில்

பல வித பாசையும் குழைந்தது மோதலில்

கற்பா மானமா இதற்க்கு வி ளக்கம்தான் யாரம்மா?

இந்த உண்மைகளை பேசினால் குற்றவாளி நான் அம்மா

குற்றவாளி நான் அம்மா

கவி மீனா

Freitag, 16. Januar 2015


சிரிக்க வைத்து

 
எந்த குழந்தையும் பிறக்கும்

 போது சிரிப்பதில்லை

மனித வாழ்வின் துன்பத்தை

அது அறிந்தே அழுது கொண்டே பிறக்கிறது

அழுதுகொண்டே பிறந்த மனிதனுக்கு

இறக்கும் வரை அழுகை ஓய்வதில்லை

உலகில் எங்கோ ஒருவன் சிரிக்கின்றான்

அவன் வாழும் போதும் சிரிக்கின்றான்

ஒரு சிலரே அடுத்தவரை சிரிக்க வைத்து

தானும் மகிழ்கின்றான்

மனிதர் படும் துயரை கண்டு

ஆண்டவன் எங்கோ இருந்து சிரிக்கின்றான்

கவி மீனா

Samstag, 3. Januar 2015


திரை

பனி திரை விலக்கி பகலவன் வந்து ஒளி வீசும் போதும்

நித்திரை விலகா  பல மனிதர்கள் வாழும் உலகம் இது

சித்திரை மாத்தில் சிறுவன் பிறந்தால் அக்குடி நாசம் என்பர்

பத்தரை மாற்று தங்கம் போலே மானிடரை காண்பதும் அரிது

முகத்திரை விலக்கி வெண்ணிலா வானில் எட்டி பார்க்கும் வேளை

 கணணித்திரை முன் அமர்ந்தாலே கண்கள் அகல்வதும் இல்லை

முத்திரை இல்லா கடிதம் இன்று  .மெயில் கடிதமானது

வெள்ளித்திரையில் மட்டும் காதல் கதைகள் கவிநயம் ஊட்டும்

மோக திரை மூடில் மனம் மையலில் ஆடும்

நரை திரை வரும் முன்னே  நம் கடமைகளை செய்து

திரை விலக ஆலயத்தில் அம்பிகை தரிசனம் தருவாள்

மாயைதரை  திரை விலக  அவள் பாதம் பணியவே

கவி மீனா

தென்றலை தேடி
 

மலரை பற்றி கவி எழுத

இங்கு மலர்கள் கூட மலரவில்லை

நிலவை பற்றி கவி பாட

நிலவும் எட்டி பார்க்வில்லை

தென்றலை தேடி அலைந்தேன்

தென்றல் கூட வீசவில்லை

காதல் பாட்டை பாடி நின்றேன்

காதலனை காணவில்லை

அருவி அழகை பாட நினைத்தேன்

அருவி கூட அருகில் இல்லை

கொட்டும் பனியை தேடி நின்றேன்

வெண்பனியும் விழவில்லை

யாரை பார்த்து நான் கவி எழுத

யாரும் என்னருகில் இல்லை

இல்லாத ஒன்றை நினைத்து

இரவு பகலாய் கவி எழுத

என்னிடம் வார்தைகளும் இல்லை

வார்தைகளும் இல்லை

கவி மீனா

பற்றிஸ்

என் வீட்டில் இன்று புது வருடத்துக்காகான பலகாரம் பற்றிஸ் எனக்கு பிடித்த பற்றிஸ் இன்று சுட்டு காலையிலேயே  2 சாப்பிட்டு விட்டேன்.

பற்றிஸ்சுக்கு என்றே ஒரு கதை உண்டு என்னிடம்

நான் சின்னனாக இருக்கும் போது  அம்மா வீட்டிலை பற்றிஸ் செய்வதில்லை ஆனால் ஸ்கூல் கன்ரினிலை நான் ஒவ்வொரு நாளும் 2 பற்றிஸ் வாங்கி சாப்பிடுவன் அதுக்கு மேலே வாங்க என்னிடம் அப்போது காசு இருப்பதில்லை.

காலையிலே ஸ்கூலுக்கு போகும்போது தினமும் எனது பேரனிடமும் அம்மாவிடமும் காசு வாங்கி சேர்தால் அந்த நாளை காசிலை 30 சதம் தான் என்னிடம்  கையில் இருக்கும்.

ஒரு பற்றிஸ் கன்ரினிலை 12 சதம்  2 பற்றிசும் 1 மில்க் ரொபியும் வாங்க காசு சரியாக இருக்கும்.

அம்மா கட்டி தார சாப்பாட்டை நான் கொட்டி  ரிபின் பொக்சை கழுவி வைத்துவிட்டு இந்த பற்றிஸ்சும், மில்க் ரொபியும்தான் எனக்கு மத்திய உணவாக அன்று விரும்பி சாப்பிட்டன், கட்டிக் கொண்டு போன சாப்பாட்டை நான் சாப்பிடவில்லை என்று அம்மாவுக்கு தெரிந்தால் திட்டு விழுவதுடன் அடுத்த நாள் காசும் தர மாட்டா அதனால்தான் நான் சாப்பிட்டது போ லே சொல்லிடுவன்.

அந்த 2  பற்றிஸ் சையும்  ரசித்து ருசித்து நான் சாப்பிடுவதை பார்த்துவிட்டு ஒரு பள்ளி சினேகிதி ஒரு நாள் சொன்னா  அதற்குள்ளே இருக்கும் இறைச்சி மாட்டு இறைச்சி என்று ஒரு வேளை அவவாலே வாங்க முடியவில்லை என்கிறதாலே அப்படி சொன்னாவோ தெரியவில்லை, அன்று எனக்கு மாட்டு இறைச்சியின் சுவையும் தெரியாது அதை கண்டு பிடிக்க,  எதுவானாலும் மிக்க ருசியான பற்றிஸ் எங்கள் ஸ்கூல் கன்ரின் பற்றிஸ்.

எனது பிறந்த நாளுக்கு நான் தோழிகளுக்கும் பற்றிஸ்சும், ஐஸ்சொக்கும் கன்ரினில் வாங்கி கொடுப்பன்.

ஸ்கூலை விட்டு விலகிய போதும் எனக்கு அந்த பற்றிஸ் தினமும் வாங்க முடியாமல் போய்விட்டதே என்பதே கவலை,

அதனாலே நானே பற்றிஸ் செய்ய பழகி முதன் முதலாக வீட்டிலை பற்றிஸ் செய்ய போறன் என்று சொல்லி எல்லா பொருட்களும் வாங்கி முதல் முதலாக சமையல் அறையில் நின்று கஸ்டப்பட்டு  ஒரு மாதிரி பற்றிஸ் செய்து முடிச்சுட்டன் பார்த்தால் பற்றிஸ் அதற்க்கான வடிவில் வராமல் கொஞ்சம் கோணல் மாணலாக வந்திட்டுது.

 நான் என்னமோ சுடுகிறன் என்றதும் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரே வேடிக்கை இவ என்னதை செய்ய போகிறா என்று கடைசியா சுட்டு முடிஞ்சதும் அண்ணன்மார் வந்து பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிச்சினம், இதுக்கு பேரு பற்றிஸா? இது வண்ணாமூட்டை போலே இருக்கு என்று ஆனால் கொஞ்ச நேரத்திலை பார்த்தால் ஒரு பற்றிஸ் கூட மிச்சமாய் இருக்கவில்லை நான் செய்யும் போது சாப்பிட்ட ஒரே ஒரு பற்றிஸ்தான் எனக்கு அன்று கிடைத்தது.

அடுத்த நாள்தான் சொன்னார்கள் பற்றிசுக்கு சேப் சரியாக வராட்டியும் சுவை நல்லாக இருந்தது என்று அது எனக்கு அவர்கள் ஒன்று கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டதாலே சொல்லாமலே தெரிந்த விட்டது .

ஒவ்வொரு தடவை பற்றிஸ் சுடும் போதும் எனக்கு இந்த சம்பவம் ஞாபகத்துக்கு வரும் காரணம் இன்னும்தான் பற்றிஸ் சரியான சேப்பில் வரவில்லையே.

 ஹஹஹஹ

கவி மீனா