Dienstag, 26. Februar 2013


மை எழுத்தில்

மை இல்லை என்றால் என் பேனாவால்

எழுத முடியாது

மை எழுத்து இல்லை என்றால்

நம் தமிழில் அதிகம் பேச முடியாது

 
கருமையான கார் மேகம் கண்டு

கான மயிலும் குதித்தாடும்

அருமையான காதல் கண்டே

இளமை என்றும் சதிராடும்

புதுமை செய்யும் பெண்கள் வாழ்க்கை

புரட்ச்சியாக மாறி விடும்

முதுமை வந்த மனிதருக்கே

பழமை கலாச்சாரம் தங்கி விடும்

ஆமை புகுந்த வீடும் பொறாமை புகுந்த மனசும்

என்றும் உருப்படாமலே போய்விடும்

எளிமை கொண்ட மனிதர் என்றும் இம்மை மறுமை

வந்த போதும் கலங்காதே வாழ்ந்திடுவர்

சுமை தாங்கியாக நீ பொறுமையோடு வாழ்ந்தாலும்

தனிமை வந்து உன் வாழ்வில் இனிமை இன்றி

செய்துவிடும்

வறுமை வந்த போதும் நீ உன் கடமை செய்து வந்தால்

நேர்மையான பெண் என்று உனக்கு பேரும் புகழும் சேர்ந்து விடும்

ஆண்மை இல்லா ஆண்மகன் பெண்மை தன்னை

குறை கூறி வாழ்வதாலே

பசுமையான குடும்ப வாழ்கை நிலை குலைந்தே போய்விடும்

கண்ணை இமைதான் காப்பது போல்

என்னை காக்க ஒரு இறைவி என் பக்கம் துணை உண்டு

என்றும் என்னை காக்க ஒரு இறைவி

என் பக்கம் துணை உண்டு

கவி மீனா

 

 

 

 

Sonntag, 24. Februar 2013


பரம் பொருள்

பிரம்மன் படைத்த அழகு சிலை நான்

ரவிவர்மா தீட்டிய ஓவியம் நான்

வாசம் வீசும் வண்ண மலர்களும் நான்

வீசி செல்லும் தென்றலும் நான்

வானில் ஓடும் வெண் மேகம் நான்

அந்தி வானில் தோன்றும் நிலவும் நான்

ஆடி  செல்லும் அலையும் நான்

பாடி செல்லும் சிறு பறவை நான்

எங்கும் நிறைந்த அழகே நான்

சுற்றி பார்கும்  சூரியன் நான்

சுற்றும் பூமியன் அழுகும் நான்

இயற்கையில் நிறைந்த உயிர்களும் நான்

எதிலும் நிறைந்த காட்சியும் நான்

எங்கும் இருக்கும் பரம் பொருள் நான்

கடவுள் என்னும் பரம் பொருள் நான்

கவி மீனா

 

Sonntag, 10. Februar 2013


காகங்கள் பிதிர்களா?

(காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கற்று கொடுத்தது யாருங்க? என்ன அருமையான பாடல்) இப்படியான பாடலை கேட்டாவது நாம் திருந்திறோமா?

காகத்துக்கு எல்லாரும் மரக்கறி சாப்பாடுதான் கூப்பிட்டு கொடுகிறாங்கள் ஏன் என்று தெரியவில்லை காகம் மரக்கறி சாப்பாடுதான் கேட்டிச்சா? ஆட்டு கறி நண்டு கறி மீன் கறியோடே சோறு வைத்தால் சாப்பிடாதா?

கேட்டால் காகம் நம்ம பிதிர்கள் என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் நம்ம பிதிர்கள் உயிர்ரோடு இருக்கும் போது மாடு ஆடு எல்லாம் சாப்பிட்டார்களே? ஆடு கோழி வெட்டி பலி கூட கொடுத்தார்களே இதுக்கு என்ன சொல்ல போறீங்கள்?

உள்ள அழுக்கு எல்லாம் சாப்பிடுற படியால்தான் காகங்களை மோட்சத்துக்கு போகாமல் இன்னும் ஆசைகளோடு பூமியிலே அலைகிற பிதிர்களாக மக்கள் நம்புகிறார்கள்

அந்த பிதிர்கள் மோட்சத்துக்கு போக ஏதாச்சும் வழி உண்டானால் செய்வதை விட்டு விரத நாட்களில் மட்டும் கா கா எண்று கத்தி கூப்பிட்டு சோறு போட்டு அது சாப்பிட்ட பின் நீங்கள் சாப்பிட்டு மற்ற நாட்களில் காகத்தை கண்டால் துரத்தி சனியன் காகம் வத்தல் வடகம் ஒன்றும் வெளியில் காய விடுது இல்லை என்று திட்டுவதும் எந்த மதத்தில் சேருது?

காகம் பாவம் அது அழுக்கை சாப்பிட்டாலும் தன் இனத்தை கூப்பிட்டு கொடுத்து சாப்பிடும் நல்ல குணத்தை கொண்டு இருக்கு அந்த காகத்தை கூட மனிதர்கள் தங்கள் பாவங்கள் தீரும் என்பதுக்காக தானே விரத நாட்களில் மட்டும் கூப்பிட்டு சோறு போடுறாங்கள்?

மனிதரின் சுயநலத்தை எண்ணி காகம் சிரிக்குமா? சிந்திக்குமா?

கவி மீனா

 

 

Samstag, 9. Februar 2013


ஆதவன் என்றும்

ஒருநாள் கார் முகில் வந்து மூடும்

ஆதவன் நம் கண்ணுக்கு தெரியாமல் போவான்

ஆனால் ஆதவன் என்றும் அழிவதில்லை

மறுநாள் இடியோடு மழையும் கொட்டும்

ஆதவன் நம் கண்ணுக்கு nரியாமல் போவான்

ஆனால் ஆதவன் என்றும் அழிவதில்லை

மீண்டும் பனி மூட்டம் வந்து மூடும்

ஆதவன் மீண்டும் கண்ணக்கு தெரியாமல் போவான்

ஆனால் ஆதவன் என்றும் அழிவதில்லை

இது போலே நம் அறிவை மூடி நிற்க்கும்

ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றும் நம்மை

விட்டு விலகும் போது ஆண்டவன் நம் அறிவு கண்ணுக்கு


தெரிவான் என்கிறது இந்து மதம்

கவி மீனா

Montag, 4. Februar 2013


பிச்சை வேண்டாம்

பிச்சை எடுக்க போற இடத்தில் நாய் துரத்தி வந்தால் பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கோ என்று ஓடுவது போலேதான்

சில தமிழரை கண்டால் நாமும் ஓட வேண்டி இருக்கிறது பட்டது போதும் தமிழனாலே என்பதுதான் உண்மையாச்சு

அகதிகளாய் வெளிநாடுகள் வந்தோம் இங்கு கூட  நம் இனம் என்று ஒன்று கூடி வாழ முடியுதா நம்மாலே?

இல்லையே தமிழருக்கு ஒற்றுமையாக வாழுகிற குணம் இரத்தத்திலே இல்லை என்பதுதான் தெரிந்து போன விடயம் ஆச்சு

வெள்ளைகாரன் சொல்லுகிறான் உங்கள் இனம் உங்க ஊர் ஆட்கள் எல்லாரும் இலங்கை தமிழர் என்று ஆனால்

நம்ம இனம் என்று நாம் ஒன்றாய் இணைந்து  ஒரு காரியம் தன்னும் செய்யவோ இல்லை அன்பாய் பழகவோ முடியல்லை முடியல்லை

எத்தனை பேர் நீங்கள் சண்டை சச்சரவு இன்றி இருக்கிற இடத்திலே ஒற்றுமையாய் வாழுகிறீர்கள் என்று எண்ணி பாருங்கள்

 அன்பு பாசம் நேர்மை கடமை கண்ணியம் கட்டுபாடு என்பது எல்லாம் தமிழர் பண்பாடு என்று படித்தும் பாடல்களில் கேட்டும் இருக்கின்றோம் ஆனால் அதை நம் கண்ணாலே காண்பதோ அரிது அரிது இன்று

ஒருவர் கஸ்டப்பட்டால் ஓடி உதவ கரங்கள் இல்லை அவனை ஏறி மிதிக்க கால்கள் உண்டு ஒருவன் நல்லதுகள் செய்தால் அவனை புகழ்ந்து பேச வாய்கள் இல்லை அவனில் உள்ள சின்ன குறைகளை கூட இகழ்ந்து பேச ஓடி வருவோர் பலர் உண்டு அன்பே சிவம் அன்பே சிவம் என்பதை திரையில் கண்டேன்  இங்கு வம்பே பேசி வம்பை வழர்க்கும் மனிதரையே வாழ்வில் கண்டேன்

சிறு எறும்பு கூட சேர்ந்தே வாழும் சிறு பறவை கூட சேர்ந்தே பறக்கும் காகம் கூட கொடுத்தே உண்ணும்  காட்டில் வாழும் மிருகங்கள் கூட கூட்டம் கூட்டமாய் திரியும் ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் சுயநலமாய் வாழுகின்றான்

மனிதன் என்பவன் கூடி மகிழ்வான் பின் அந்த கூட்டையே கலைத்திடுவான்  அடுத்தவனிடம் செல்வமும் செல்வாக்கும் இருந்துவிட்டால் ஓடி போய் நன்மைகள் பெற்றிடுவான் கொண்டாடம் போட்டு கும்மியும் அடித்திடுவான் ஆனால் சிந்தனையாலே நண்பனை எப்படி விழுத்தலாம் என்பதிலேயே குறியாக இருந்திடுவான் உண்மை அன்பை எங்கும் காணலையே உண்மை நட்பை இதுவரை காணவில்லையே உண்மை காதலை கூட இன்னும் காணவில்லையே  சுய நலத்தோடே சேர்ந்ததே தமிழனின் நட்ப்பு காதல் யாவும்

இங்கே வந்த தமிழர்களோடே நான் பழகி பட்டது போதும் என்று நான் ஓடுகிறேன் ஐயா ஓட்டம் ஓடி ஓடி மூச்சும் இரைக்குது எங்கே போனாலும் நம் தமிழனின் போக்கும் இடிக்குது பிச்சை வேணாம் நாயை பிடியுங்கோ என்பதே என் முடிவாச்சு
கவி மீனா