Samstag, 7. November 2015

டை
 
ஆனைபந்தியில் ஒரு  தேனீர் கடை
அதிலிருக்கும் என்றும் சுவையான வடை
ஆரோக்கியத்து க்கு வேணும் நடை
மழை வந்தால் தேவை குடை
இன்று யார் தலையை பார்த்தாலும் டை
ஆண்களின் கண்கள் தேடுவதோ இடை
பெண்களுக்கு அழகு தருவது அழகிய தொடை
மதிப்பை தரும் அடக்கமான உடை
 
ஓடி பாயும் வெள்ளம் திறந்தால் மடை
வந்து பிடிக்கும் தீராத நோய் கூடினால் எடை
ஐந்து தானியம் அரைத்து செய்தால் அடை
ஊழியம் இல்லாது போனால் வரும் முடை
வாழ்க்கை பாதையில் வந்து விழும் தடை
அதை தூக்கி போட முடிந்தால்
தெரியும் விதியின் கேள்விக்கு விடை
கவி மீனா
இந்த ஆண்டவனின் செயலை பாரு
 
நாறுகின்ற குடலை வைத்து
அதில் ஒன்பது வாசல்வைத்து
உடல் என்னும் போர்வையால்
மூடிவைத்தான் மனிதனை
 
மூளையில் அறிவை வைத்து
மூச்சு குளாயில் சுவாசம் வைத்து
உயிர் மூச்சை உள்ளடக்கி
ஊதி வைத்தான் உடல்  என்னும்
காற்றடைத்த பந்தை
 
ஆசை என்னும் உணர்வை வைத்து
அவணியிலே அலைய வைத்து
அழுகை என்றும் சிரிப்பென்றும்
நவரச உணர்வும் வைத்து
அவணி என்னும் மேடையிலே
ஆட விட்டான் மனித பொம்மையை
 
நாவினிலே சுவை வைத்து
நரம்பில்லாத நாவாலே
தீயதையும் பேச வைத்து
பாதகங்களும் செய்ய வைத்தான்
பாவி மனிதர் வாழ்வினிலே
 
பாசம் என்றும் நேசம் என்றும்
உறவுகளை சேர்த்து வைத்து
 பிரிவு என்னும் புயல் காற்றை வீசி
சிதற வைப்பான் மனங்களை
 
நித்தமும் ஓர் நாடகம்
நடத்தி வைப்பான் பாரினிலே
நினைவு என்னும்  பேரலையை தந்து
துடிக்க வைப்பான் மனங்களை
ஆடிய ஆட்டம் எல்லாம்
அடங்க வைப்பான் ஒரு நாளில்
உள் மூச்சு வாங்கையிலே
உயிர் மூச்சும் அடங்கி விடும்
அவன் செயலில்
 
கவி மீனா
பேனாவில் ஊறும் மையும்
 
அகர முதல் எழுத்தெல்லாம்
ஆதிபகவான் முதற்க்கே உலகு
எண்ணும் எழுத்தும் கண் என தகும் என்று சொன்னார்கள் காரணம் எழுத்து வடிவில் வந்த உண்மைகளும், எழுத்துருவில் உள்ள ஆக்கங்களும், விஞ்ஞான ரீதியாக கண்டு பிடிச்சு நூல்வடிவில் எழுதபட்ட  ஆவணங்களும், இல்லையென்றால் நாம் கல்வி கற்க முடியுமா? இல்லை அறிவை பெறதான் முடியுமா?
ஆக்க பூர்வமான எழுத்துகளை  எல்லாராலும் எழுத முடியாது அறிவோடு கலந்து, ஒரு கருவோடு அமைந்த நல்ல ஆக்கங்கள் நம் மனசை தொட்டு செல்கின்றன, அள்ள அள்ள ஊற்று நீர் வருவது போலே எழுத எழுததான் தமிழும் புது மெருகோடு புது புது கவிதைகளாகவும் கட்டுரைகள் கதைகள் ஆகவும் உரு பெறுகின்றுன.
படித்தவனுக்கு எழுத்தின் அருமை புரியும், தமிழை அறிந்தவனுக்கு தமிழின் சுவை  புரியும், தமிழின் இனிமை அதை  கற்று அறிந்தவனுக்குதானே  விழங்கி கொள்ள முடிகிறது, தழிழ் பேசினால் மட்டும் போதாது அதை ஆழந்து ரசித்து விழங்கி கொள்கிற அறிவு வேண்டும்.
எப்போதும் எழுதுக்கள் முதல் இடம் பெறாவிடில் ஒரு சினிமா படம் கூட ரசிகர்களால் ரசிக்க முடியாது காரணம்  படங்களில் இனிமை ஊட்டுவது தமிழ் பாடலகள்தானே? அந்த பாடல்களை ஒரு கவிஞன் கவி நயத்தோடும் காதல் ரசத்தோடும் எழுத வில்லை யென்றால் அந்த படத்துக்கே மதிப்பு இன்றி போகிறது.
 
சிறந்த எழுதாளர்கள் கவிஞர்கள் இல்லையென்றால் தமிழ் இயல் இசை நாடகம் என இன்று வளர்ந்து இருக்குமா? ஒரு சிறந்த சிந்தனையாளன் ஒரு சிறந்த எழுத்தாளன் ஆகின்றான் காதல், தாய் பாசம் ,வீரம்,தாலாட்டு,பக்தி என பல ரசனை ஊறும் கவிதைகள் மண்வாசனை வீசும் கதைகள்  என தமிழ் நம் தமிழ் எழுதாளர்கள் கையில் தவழ்ந்து விழையாடி வந்து நம் நெஞ்சை கொள்ளை கொள்வதும் தமிழின் இனிமைதனை எடுத்து சொல்வதும்  எழுதாளர்களின் எழுதின் வல்லமையே.
நம் பேனாவில் ஊறும் மையும் அறிவில் ஊறும் கருவும் ஒன்றுபடும் போது தமிழும் உரு பெறுகிறது பேனா முனைக்கு உள்ள வலிமை வேறு எதிலும் இல்லை இன்று பேனாக்கள் ஓய்ந்தாலும் கணணியிலே பொறிக்கப்படும்  எழுதுக்கள் நாம் அழிந்தாலும் நம் எழுதுக்கள்  அழியாமல் என்றும் வாழ்ந்து இருக்கும் அதனால்தான் சொல்கின்றேன் எழுதும் கைகள் ஓய்வதில்லை என்றும் ஓய்வதில்லை.
கவி மீனா