Samstag, 17. Oktober 2015

இரண்டு வரி கவிதைகள்
 
என் கை பிடித்து நீ நடந்தாய் நடை பயில அன்று
உன்  கை பிடித்து நான் நடக்கின்றேன் முதுமையிலே இன்று
மகனே நீயே என் துணை
கவி மீனா
விதை மண்ணில் விழுந்தால் அதன் முளை நிலத்தை கிளித்து எழும்
மனிதன் மண்ணில் சாய்ந்தால் அவனது புகழ் விழித்து எழும்
கவி மீனா
குழந்தையில் அனாதைகள் குப்பை தொட்டியிலே
முதுமையில் அனாதைகள் அனாதை விடுதியிலே
கவி மீனா
காயங்கள் ஆற காலங்கள் போதும்
மனக்காயங்கள் ஆற யுகங்கள் வேணும்
கவி மீனா
நாம் இருக்கும் வரைதான் எமக்கு கொண்டாட்டம்
நாம் இல்லையென்றால் அடுத்தவனுக்குதான் கொண்டாட்டம்
கவி மீனா
அடிமை விலங்கு
நானா இது நானா இது?
என்று நம்ப முடியவில்லை
வாசல் தாண்டா பெண்ணாக
வாழ்ந்ததுதான் உண்மை
இன்று அடுத்த பெண்களுக்கே வழி காட்ட
என்னை மாற்றியது யார்?
மாறியதும் நானா?
 
அடிமை விலங்குகளை
 உடைத்தெறி பெண்ணே
சிறை கதவாய் நிக்கும்
உறவுகளை தூக்கியெறி முன்னே
படைத்தவன் யாரோ
உன்னை பெற்றவரும் யாரோ
உன்னை அடைத்து வைக்க
முயல்பவன்தான் யாரோ?
 
யாருக்கும் யாரும் அடிமை இல்லை
அன்புக்குதான் அடிமை என்று
எடுத்து காட்டாய் வாழ்ந்து விடு
எழுத்தாணியை கையில் எடுத்து விடு
ஏறு பிடித்தவனும் எழுத்தாணி எடுத்தவனும்
சரிந்ததாய் சரித்திரம் சொன்னதில்லை
 
சாவுக்கும் அஞ்சாமல் வாழ்ந்த விடு
உண்மைக்கு மட்டும் பணிந்து விடு
உயிர் உள்ள வரை குற்றங்களை
தட்டிக்கேட்டு விடு
ஊர் வாயை மூட முடியாது 
மூடர்கள் கூட்டம் உள்ள வரை
ஏற முயன்றால் இழுத்து விழுத்தும் மனிதர்களும்
உயர்ந்து நின்றால் தூற்ற நிக்கும் வாய்களும்
நிலவை பார்த்து குரைக்கும் நாய்கள்
என்று நினைத்தே நீ நட பெண்ணே
நீ நட பெண்ணே
 கவி மீனா
 
பிதிர்களா?
உள்ள அழுக்குகளை சாப்பிட்டு குப்பை தொட்டிகள்  சுத்தம் செய்யும் காகங்களுக்கு புரட்டாதி மாத்து சனி கிழமைகளில் மட்டும், அல்லது ஏதாவது விரத நாட்களில் மட்டும் சுத்தமான இலையில் முதல் சோறு கறி மற்றவர்கள் ருசி பார்க முந்தி கா கா என்று கூப்பிட்டு சோறு வைப்பார்கள்.
மற்ற நாட்களில் யாருமே காகத்துக்கு சாப்பாடு வைப்பதும் இல்லை அன்பாக பார்பதும் இல்லை.
 
விரத நாட்களில் மட்டும் காகங்கள் பிதிர்களாம் சாப்பாடு வைக்க வேணும் என்று சொல்லுகிறார்களே பிதிர்களை எப்பவாச்சும் மீன், முட்டை, ஆட்டு இறைச்சி என்று விதம்விதமாய் விருந்து உணவு சமைக்கும் போது நினைக்கிறார்களா?
பிதிர்கள் எல்லாரும் சைவமாக மாறிட்டார்களா? என்கிற கேள்வி எனக்கு அடிக்கடி வருகிறது.
என்னுடைய இந்த கேள்வி சில பேருக்கு முட்டாள்தனமான கேள்வியாக தோன்றும் ஆனால் சிந்தித்து பார்த்தால் அவர்களது முட்டாள்தனமும் மூட நம்பிக்கைகளும் புரியும்.
 
பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் இரக்கம் காட்டுவதனால் நெடுக் காட்ட வேண்டும் தமக்கு வேண்டிய போது கூப்பிட்டு உணவு கொடுத்து பின் துரத்தி அடிக்கும் எங்கள் குணம் மாற வேண்டு காகங்கள் பிதிர்கள் என்றும் அவைகளுக்கு விரத நாட்களில் உணவு கொடுத்தால் தங்கள் தோசங்களும், பாவங்களும் நீங்கும் என்ற மூட நம்பிக்கையில்தான் இப்படி செய்கிறார்கள், இது வழி வழியாக வந்த ஒரு பழக்கம் ஆனால் அதே காகத்தை பின் துரத்தி அடிக்கும் போது தாமே பாவங்களை செய்கிறார்களே!
 
வெளி நாட்டில் காகங்கள் கூட புத்தி சாலி ஆகி விட்டன கூப்பிட்டாலும் வரமாட்டுதுகள் ஆனால் ஊர் காகங்கள் இன்னும் கூப்பிட்டால் ஓடி வரத்தான் செயகின்றன.
பிதிருகள் என்று நம்பபடுகிற இந்த காகங்களுக்குள்ள நல்ல குணம், சேர்ந்து உண்ணும் பழக்கம் ஏன்தான் உயிரோடு வாழும் மனிதர்களுக்கு இல்லையோ?
காகங்கள் பிதிர்களா?  அல்லது ஆவிகளா?
ஆவிகள் கூட சில சமயம் பறவைகளாகவோ, பாம்புகளாகவோ, கறுத்த பூனைகளாகவோ, வொவ்வால்களாகவோ திரிவதாக  கதைகள் எல்லாம் எழுதியிருக்காங்களே!
வொவ்வால்களை போலேதான் ஆவிகள், இரத்தக்காட்டேறிகள் திரிவதாக அமெரிக்கர்கள் கூட படம் எல்லாம் எடுத்திருக்கிறார்கள், பேய் பிசாசுகள் என்கின்ற விடயத்தை நம்பாதவர்களும் இப்படியான படங்களை பார்த்து பயபடத்தான் செய்வார்கள்.
எது உண்மை? எது பொய்? என்பதை நன்கு அறிந்தவர்கள் உணர்ந்தவர்கள்தான் சொல்ல வேணும்.
கவி மீனா