Samstag, 30. November 2019


மண்ணுக்கே பாரமாய்

 பள்ளி காலத்தே படிக்க மனமில்லாமல்
இளமை இருக்கும் போது உழைக்காமல்
தன் சொந்த காலில் வாழ முடியாமல்
அடுத்தவனை நம்பி வாழ்பவனுக்கு
சோறு போடுவதும் உதவி பண்ணுவதும்
புத்திலிருக்கும் பாம்புக்கு
 பால் ஊத்துவது போலதான்

ஊனமுற்றோருக்கு உதவுங்கள்
அனாதை குழந்தைகளுக்கு உதவுங்கள்
முதியோருக்கும் வயோதிப பெற்றோருக்கும்
உதவுங்கள் ஆனால் ஒரு நாளும்
சோம்பேறிகளுக்கும் திண்ணைக்கு
மண் எடுக்கும் உதவாக்கரைகளுக்கும்
உதவாதீர்கள்!

மிரட்டி அடுத்தவன் சொத்தை
பறிப்பவனுக்கும்
பயந்து  தானம் பண்ணாதீர்கள்
இவர்கள் பெற்றவருக்கும்
உற்றவருக்கும் பாரமாய்
இந்த மண்ணுக்கே பாரமாய்
வாழும் ஈன பிறவிகளே!

கவி மீனா



நிலவும் நானும் 

நிலவோடு வான் முகில் விளையாடுதே!
என் நினைவோடு உந்தன் முகம் அலை பாயுதே!
நிலவை கண்டாலே பாடல் தானாக வருகுது இயற்கை அழகில் நிலவுக்கு ஒரு தனி இடம், என்றும் மாறாத காதல் எனக்கு நிலவிடம், எத்தனை தடவை பார்த்தாலும் நித்தம் நித்தம் பார்த்தாலும் அதன் அழகை அள்ளி பருக கண்கள் போதாமை இருக்கும். நிலவை கிட்ட போய் பார்த்தவர்கள் அது கல்லும் மண்ணும், குண்டும் குழியும் நிறைந்த ஒரு இடம் என்கிறார்கள் ஆனால் பூமியில் நின்று பார்கும் எமக்கு நிலவு ஒரு அழகு தேவதை!
நிலவை பற்றி எண்ணற்ற பாடல்களை கவிஞர்கள் எழுதி விட்டார்கள், பாடகர்கள் அதை பாடியும் விட்டார்கள் ஆனாலும் தினம் தினம் புது கவிதைகள் நிலவை பற்றி எழுதலாம் எழுதி கொண்டே இருக்கலாம் முழு நிலா பார்க்க பார்க்க தெவிட்டாத பேரழகு மட்டுமின்றி பார்த்தவர் மனதுக்குள் ஒரு  மன நிறைவை, மகிழ்சியை தர கூடிய ஒரு சக்தி நிலவுக்கு உண்டு.

நிலவுக்கு இருக்கும் ஈர்பு சக்தியில் ஒரு காந்த அலைகள் வீசுவதாக சொன்னார்கள் முன்னோர்கள், அந்த கதிர் வீச்சில்தான் கடல் அலைகள் பூரண நிலவு அன்று பொங்கி பெருகுவதாக நம்பப் படுகிறது.
பால் நிலாவின் ஒளியில் பரவசத்தை நாம் உணர முடியும் அதன் ஒளி பட்டாலே பேரின்பம் தானாக உண்டாகும், மை இருட்டு நேரத்தில் நிலவின் ஒளியில் உலகம் காணும் அழகே தனி அழகுதான், மனிதர்களுக்கு இரண்டு கண்ணும் அவசியம் அது போலேதான் பூமிக்கு சூரியனும் சந்திரனும் இரண்டு கண் போலே அத்தியா அவிசயமாகிறது.

நிலவை கண்டு அல்லி பூ மலருகிறது காரணம் நிலவின் ஒளி பட்டு அது காதல் கொண்டு விரிகிறது,  நிலவின் அழகில் மயங்காதவர் யாராச்சும் உண்டா?
நல்ல ரசனை உள்ள கவிஞர்களுக்கு  நிலவை காணும் போதெல்லாம் கவிதை தோன்றும்,  கண்கள் நிலவின் அழகை ரசிக்க கைகள் அதன் அழகை கவிதைகளாக வடிக்கும்.
நிலவே வான் நிலவே  வார்தை ஒன்று பேசு என்று நானும்  நிலவை காணும் போதெல்லாம் கேட்பேன்.
 ஆனால் நிலவு சிரித்த முகத்தோடு முகிலுக்குள் ஓடி மறையும்.
நிலவை பற்றி எத்தனை பாடல்கள் அன்றும் இன்றும், நிலவை வெறுப்பவர் யாரும் இல்லை.
நிலாவை பெண்ணாக பார்த்து பாடியவர்களும் உண்டு ஆணாக நினைத்து காதல் வரிகள் எழுதியவர்களும் உண்டு, நிலவு பார்பவர் மனதுக்கும், மனநிலைக்கும் எற்றாற் போலே கற்பனை வழத்தை அள்ளி தருகிறது.
நிலாவே வா செல்லதே வா
என்னாளும் உந்தன் பொன் வானம் நான் என்ற பாடல் எனக்கு பிடித்த ஒரு பாடல் எப்ப நிலவை கண்டாலும் இந்த பாடல் தானாக பாட வருகிறது காரணம்  நிலவோடு காட்சி தரும்  வானமாக நீல வானமாக இருக்கதான் மனது ஆசை கொள்ளும்.
என் கற்பனையில் நிலவு ஒரு ஆணாக அழகான என்றும் புன் சிரிப்பை சிந்தும் காதலனாக தெரிவதாலோ என்னுவோ
என்னாலே பூமியிலே ஒரு ஆண் மகனையும்  நேசிக்க முடிவதில்லை!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை  உன்னை தொட வழியும் இல்லை - இந்த பாடலை  கவிஞர் வைரமுத்து எனக்காகதான் எழுதியது  போலவும் பாடகர் பால சுப்பிர மணியம் எனக்காக பாடியது போலவும் எனக்குள் ஒரு கற்பனை ஓடி வரும் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் காரணம் நிலவை நான் அம்மட்டு நேசிப்பதுண்டு.
நிலவை பற்றி நானும் நிறைய எழுதி விட்டேன் ஆனாலும் அதை பற்றி எழுத எழுத பொங்கும் உற்று போலே ஆசை பெருகி கொண்டு வரும் எழுத வார்தைகள்தான் போதமை மனது தடுமாறும்.
நிலவை பற்றி நான் எழுதிய ஒரு கவிதை முதல் முதலாக வானொலியில் வாசிக்க பட்ட போது நானும் பெருமிதம் கொண்டேன் அதுவே எனது முதல் கவிதை வானொலியில் வாசிக்கபட்ட கவிதை!
மேலும் பாடகர் சிறினிவாஸ்  பாடிய  ஒரு  இனிய சோக பாடல் ஒன்று என் உள்ளத்தை கொள்ளை கொண்ட பாடல்
அதுதான் இன்று எனக்கு பொருத்தமான பிடித்தமான பாடலாக என்றும் பாடுகின்ற பாடலாக அமைந்து விட்டது
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை என்ற பாடலாகும்  இந்த பாடலில் பாடகரின் குரலில் ததும்பும் சோகம் எம்மையும் அந்த நிலைக்கு கொண்டு போய் விடும் எமது சோகங்களை நாம் மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது
ஆனால் நிலவிடம் மனம் விட்டு பேசலாம் அது யாரிடமும் போய் சொல்லாது மீண்டும் எம் கதை கேட்க  அது மறு நாளும் வரும்
நிலவுக்குதான் எனது சோகங்களும் காதலும் புரியும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை எனக்கு!

Mittwoch, 25. September 2019


அண்டமும் அவனே
முல்லை தீவில் சைவ கோயில் வளாகத்தில்  புத்த பிக்குவை தகனம் செய்ததால் இந்து மதத்தக்கு இழிவு ஏற்படுத்தியதாகவோ அல்லது அங்கு எரிக்கபட்ட பிக்குவுக்கு முத்தி கிடைக்க போறதாகவோ பிக்குகள் நினைத்தால் அது
ஒன்றும் நடக்க போவதில்லை  இதனால் உண்மையில் எந்த இழிவும் இந்து மதத்துக்கு உண்டாக போவதுமில்லை!
காரணம் அண்ட சாகரங்களையும் படைத்த இறைவனுக்கு சுடுடகாடும் ஒன்றே! கோயில்களும் ஒன்றே! யாதும் அவனதே!

சுடுகாட்டில் நடனமாடும் சிவனுக்கு சுடுகாட்டு சாம்பலை எடுத்து மேலில் பூசும் சிவனுக்கு இது எப்படி கேடு விளைவிக்கும்?
இந்து மதத்தின் முழுமுதல் கடவளான சிவனுக்கு பிடித்த இடமே சுடுகாடுதான் என்று இந்து மத புராணங்கள் கூறுகின்றன.
அதை அறியாத மூட பிக்குகள் தாம் ஏதோ இந்து மதத்தை இழிவு படுத்துவதாகவும் இடத்தை கைபற்றியதாகவும் எண்ணினால் அது அவர்களது அறியாமையே!

புத்தர் ஒன்றும் கடவுள் இல்லை, அவர் ஒரு சாதாரண அரச குடும்பத்தில் பிறந்து குடும்ப வாழ்கையிலும் ஈடுபட்டு
ஒரு கட்டத்தில் ஆடம்பர வாழ்க்கையில் மனம் வெறுத்து  துறவறம் பூண்டு, அரச வாழ்வை விட்டு வெளியேறிய போது நாடு நாடாக அலைந்து ஒரு அரச மரத்தின் கீழ் இருந்த போது அவர் ஞானம் பெற்றதாகவும், மற்றவர்களுக்கும் அதை எடுத்து சொல்லி நல்லது செய்யும் படி, பாவம் செய்ய வேணாம், ஏழைகளுக்கு உதவுங்கள் என்று அவர் எடுத்து சொன்ன விடயங்களை கூட இந்த பிக்குகளுக்கு விழங்கவில்லை, அதை கடைபிடிபதும் இல்லை.

புத்தர் ஒரு மகான் அவர் கடவுள் இல்லை அவருக்கு அருள் குடுத்ததே நமது இந்து கடவுளாக இருக்கலாம், காரணம் அரச மரம் இந்துக்களுக்கும் ஒரு முக்கியமான விஸேமான மரமாகிறது.
எல்லா சைவ கோயில்களிலும் அரச மரம் காண படுகிறது அதனால் புத்தர் எடுத்து சொன்ன கடவுளும்  இந்து கடவுளாக இருக்கலாம்,
காரணம் ஆதியும் அந்தமும் இல்லா இறைவன், ஆதி தொட்டு இந்த பூவலக மக்களால் வழங்கபட்ட மதம் இந்து மதம் ஒன்றே!
கண்ணுக்கு தெரியாமல் எங்கும் வியாபித்திருக்கும் இறை அருளை பற்றி சொன்னாலும் பிக்குகளுக்கும் விழங்காது, அறியாமை இருள்  மண்டி கிடக்கும் மனிதர்களுக்கும் விழங்காது.
பிள்ளையார் கோயில் வழாகத்தில் எரித்து விட்டால் எரிந்த  பிக்கு பிள்ளையார் ஆகுமா?  இல்லை இத்து மதத்தை இழிவு படுத்த முடியுமா?
கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை அங்கும் கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்த்துவுக்கு பின் என்று  காலத்தை பிரிக்கிறார்கள் அப்படியானால் கிறிஸ்துவுக்கு முன் இருந்த மதம் எந்த மதம்? இதற்கு விடை கூற கிறிஸ்தவர்களாலும் முடியவில்லை!
அதனால் எல்லா மாதத்தக்கும் மூலமாய், முன்னமாய் இருந்த ஒரே மதம் இந்து மதம் மட்டுமே என்பதே எனது கருத்து, இதுவே ஆணி தரமான கருத்தாகும்.
அந்த முழுமுதல் கடவுளான சிவனுக்கே பிடித்த அலங்காரம் சுடுகாட்டில் எரிந்த பிணங்களின் சாம்பல் தானே!

அண்டமும் அவனே பிண்டமும் அவனே
ஆதியும் அந்தமும் இல்லா சிவனே.


Montag, 19. August 2019


அன்பே சிவமாய்
கூட்டம் கூட்டமாய் பறவைகள் சுத்தி சுத்தி பறக்குது
தீட்டு திட்டாய் கரு மேகங்கள் திடர்களாய் சேருது
சில்லென்று காற்று வந்து மேனி சிலிர்க வைத்து செல்லுது
சொட்டு சொட்டாய் மழை துளிகள் பூமிக்கு வருகுது
மொட்டு  மலர்கள் எல்லாம் மொட்டவிழ்ந்து  விரியுது
கட்டு கட்டாய் கவிதை வந்து காற்றோடு கரையுது

காய்ந்து போன பூமி இன்று கழிப்பில்  மலரது
மழையும்  பூமி மேலே அன்பாக  பொழியுது
அன்புக்காக ஏங்கும் இதயங்களும் உலகில் வாழுது
அன்பு காட்ட உறவு இருந்தால் இதயங்களும் குளிருது
ஏங்க வைத்து மனிதர்களை கடவுளும் ஏன் படைத்தான்?
அன்பு இல்லா உலகினையே ஏன் வளர்த்தான்?

மனித உறவினிலே  காதல் இன்பம் கூடாமல்
தாய் பிள்ளை உறவினிலே பாசங்களும் இல்லாமல்
வறண்டு போன வாழ்வாக பல மானிடர் தன் வாழ்வு
எட்டு திக்கும் முட்டி மோதி பூமி தாய் அழுகுது
மானிடரின் கண்ணீர்  கலந்தே ஆறுகளும் பாயுது
அன்பே சிவமாய் என்று அவணி மாறுமோ?
அன்றே மானி னிலத்தில் விடிவு தோணுமே!
கவி மீனா