Sonntag, 25. August 2013


கருவினிலே
 
 
 

கருவினிலே மதழையாகி

கர்மமே வினையாகி

பிறப்பில் மனித உருவாகி

கண் இருந்தும் குருடாகி

கவலைகள் பல உருவாகி

மமதையிலே மனம் வீணாகி

வாழ்வதே மண்ணில் சுமையாகி

ஒரு நாள் காயமே பொய்யாகி

சாம்பாலகி நீ பொடியாகி

உன் சுவடு கூட மறைவாகி

முடிவினிலே போவதுதான் மெய்யாகி

மெய்யாகி

கவி மீனா

எங்கும் எதிலும்

முழு மதியாய் நீ வந்தால்

வெண்முகிலாய் வந்து உன்னை தழுவி செல்வேன்

தென்றலாய் நீ வீசி நின்றால்

அதில் நற் சுகந்தமாய் நான் கலந்திருப்பேன்

இன்னிசையாய் நீ ஓசை தந்தால்

அதில் ஏழு சுரமாய் நான் சேர்ந்;திருப்பேன்

மழை துளியாய் நீ விழுந்தால்

உனை தாங்கும் பூமியாய் நான் இருப்பேன்

பனி துளியாய்  நீ துளித்தால்

பசும் புல்லாய் நான் காத்திருப்பேன்

பாடும் குருவியாய் நீ பறந்தால்

நீ இளைபாறும் மரமாய் நான் தளிர்த்து நிற்பேன்

ஓடும் நதியாய் நீ வந்தால்

அதில் பொங்கும் அலையாய் நான் இருப்பேன்

மலர்களின் இதழாய் நீ விரிந்தால்

அதில் வண்ண நிறமாய் நான் ஒழிந்திருப்பேன்

எங்கும் எதிலும் நான் இருப்பேன்

உன் நினைவில் கலந்தே உறைந்திருப்பேன்

உன்னை பிரியா நானிருப்பேன்

மறுபிறவி ஒன்றிருந்தால் அதிலும்

உனை மறவாது நானிருப்பேன்

கவி மீனா

 

பொன்வானம்

பொல பொலவென விடிகின்ற அதிகாலை எங்கே

காற்றோடு கலக்கின்ற கோவில் மணியோசை எங்கே

காலை கதிரவன் ஒளியில் மின்னும் பொன் வானம் எங்கே

இசை பாடி துயில் எழுப்பும் புல்லினங்கள் எங்கே

அதிகாலை கூவி சேதி சொல்லும் சேவல்களும் எங்கே

ஓசையின்றி மலர் விரியும் காட்சிகளும் எங்கே

பசும் புல் வெளியில் துளித்து நிக்கும் நீர்திவலை எங்கே

மலர் வாசமோடு வீசி வரும் மாருதம்தான் எங்கே

நம் கண்ணை கட்டி இழுத்த இயற்கை காட்சிகள்தான் எங்கே

இயற்கையிடம் மனம் பறி கொடுத்து நின்ற காலங்கள்தான் எங்கே

இன்று கண் பனித்து மனம் பதைத்து வாடுகிறேன் இங்கே

தொலைத்து விட்ட இனிமைகளை எண்ணி தவிகிறேனே இங்கே

தவிக்கிறேனே இங்கே

கவி மீனா

பூனை க்குட்டி
 

நான் விழி மூடி தூங்கும் போதும்

விழி மூடாது குந்திதியிருந்து

என் விழி இரண்டும் பார்த்து முழித்திருக்கும்

நான் விழிக்கும் வரை காத்திருக்கும்

பாசமுள்ள ஒரு  ஜீவனை கண்டேன்

கறுப்பியானாலும் களையானவள்

களைக்காமல் எம் பின்னே வரும்

ஒரு துணையானவள்

என் செல்ல மகன் வீட்டில்

ஒரு சின்ன  பூனைக்குட்டி

கவி மீனா

 

தமிழே என் உயிர்
 

செந்தமிழ் நாடு என்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

என்று பாடிய பாரதி இன்று இல்லை ஆனால் அவர் சொல்லி சென்ற தமிழோ தமிழ் கவிதைகளோ என்றும் அழிவதில்லை

பால் இனிது தேன் இனிது தேனில் ஊறிய பழம் இனிது என்பர் ஆனால் அதிலும் இனியது தமிழே நம் தமிழே

நாம் கடல் கடந்து போனாலும் நம் மனம் கடந்து போகாதது தமிழே  இயல் இசை நாடகம் என்று தமிழை வளர்தனர் மூவேந்தர்கள் அன்று

கடல் கடந்து சென்று உலகம் பூரா தமிழை வளர்பவர்கள் ஈழ தமிழர்கள் இன்று கொழு கொம்போடே சேர்ந்து வளர்வது கொடி

தமிழர்கள் மனதோடே சேர்ந்து வளர்வது தமிழ்

நாம் எத்தனை பிற மொழிகளை கற்ற போதிலும்  மறக்காமல் இருப்போம் நம் தமிழை தாய் மண்ணில் புரண்டோம் தாய் மடியில் தவழ்ந்தோம் தமிழ் மொழியை  பயின்றோம் அதை தரணி எங்கும் வளர்தோம்  நம் தமிழ் என்றும் அழியாமல் காப்போம்

நம் தாய் நாட்டுக்கு ஈடாய் எந்த நாடும் இல்லை நம் தமிழ் மொழிக்கு இணையாய் எந்த மொழியும் இல்லை நாவில் இனிப்பது தேன் என்றால் நம் காதில் இனிப்பது நம் இனிய தமிழ் அன்றோ

நாம் நம் நாட்டை இழக்கலாம் வீட்டை இழக்கலாம் காசு பணம் யாவும் இழக்கலாம் உறவுகள் யாவும் பிரியலாம்  ஆனால் நாம் கற்ற கல்வியும் நம் இனிய தமிழ் மொழியும் நம்மை தொடர்ந்து வரும் என்பதில் ஐயம் உண்டோ?

எங்கு போனாலும் தொடர்ந்து வரும் வான் நிலவு போலே  நாம் போகும் இடம் எல்லாம் கூட வருவது நம் தமிழே நம் இனிய தமிழே என் உயிர் என்பேன்

கவி மீனா