Sonntag, 11. November 2012


இறைவனை தேடி

மலை மேலே பள்ளத்தே மாமலையின் தொடரினிலே கலை நிறையும் கோவிலிலே கவின் பள்ளி வாசலிலே கிறிஸ்தவர் சபைதனிலே கீர்த்தி மிகு மறைகளிலே சிறப்புயரும் பைபிளிலே சீரார் குரான் அதிலே ஒரு பயனும் காணாமல் உனைத் தேடி நான் அலைந்தேன் இருள் அடர்ந்த காட்டினிலே இழந்தவொரு குழந்தையை போல் யார் துணையும் இல்லாமல் அலறி துடித்திருந்தேன் பேரன்பே என் இறைவா பிறிதெங்கு சென்றாயோ நீ

என்று சுவாமி விவேகானந்தர் கூட இறைவனை தேடி தேடி அலைந்துள்ளதாக கூறப்படுகிறது
நாம் எங்கு தேடினாலும் இறைவனை கண்ணாலே காண முடியாது காரணம் அவன் நமக்குள்ளே அல்லவா உறைந்து இருக்கின்றான்  நித்தம் நித்தம் கோவில்கள் போய் பூசைகள் வைத்தாலும் மனசு சுத்தம் இல்லை என்டால் இறைவன் அருள் கிடைக்காது கையிலிலே பைபிளை சுமந்து கொண்டு நெஞ்சிலே பொறாமைகளோடு வாழ்பனுக்கும் இறைவன் அருள் கிட்டாது

நமக்குள்ளே இருக்கும் இறைவனை நாம் உணரும் நிலை வரும் போது அரச மரத்தின் கீழே ஞானம் பெற்ற புத்தனை போலே
ஆசைகளை துறந்து மனசு லேசாகி போகும் வேளை நமக்கு இறைவனின் பலம் தெரிய வரும்

நட்ட கல்லை சுத்தியே

நாலு புஸ்பம் சாத்தியே

சுத்தி வந்து முணு முணுத்து

சொல்லும் மந்திரம் ஏதுடா

நட்ட கல்லும் பேசுமோ

நாதன் உள்ளிருக்காமலே

சுட்ட சட்டி சத்துவம்  றி சுவை

அறியுமோ
என்று பாடியவர் சிவாக்கியார் சித்தர் ஆகும் ஆலயங்களிலே பூட்டிய கதவுகுள்ளே ஆண்டவனை வைத்து எமக்கு வசதியான நேரத்திலே கதவுகளை திறந்து பூசைகளும் திருவிழாக்களும் செய்வதால் ஆண்டவன் கோவிலிலே இருப்பதாக எண்ண கூடாது

சுத்தி வரும் பூமி ஆவனுக்கே சொந்தம் எட்டு திக்கும் அவனுக்கே சொந்தம் அண்ட வெளியும் அவனுக்கே சொந்தம்
வானத்து விண்மீன்களும் அவனுக்கே சொந்தம் உலக உயிர்கள் அத்தனையும் அவனுக்கே சொந்தம்
ஏங்கெல்லாம் இறைவன் இரண்டற கலந்து நின்ற போது எம் ஊனகண்ணால் அவனை காண முடியாது நமக்குள் இருக்கும்
ஞானகண்ணால் அவனை காண வேண்டும்

இறைவன் நம்மோடு இருக்கின்றான் என்கின்ற உணர்வோடு அவன் மீது நம்மிக்கையும் அன்பும் கொண்டு நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு காட்டி வாழ முடிந்தால் எமக்கு கண்டிப்பாக இறைவன் அருள் கிட்டும் நான்ங்கு வேதங்களும் கூறுகின்ற  „ஜீவன்முத்தநிலைலை மானி  வாழ்விலும் வாழுகின்ற போதே இறைவனை காண முடியும் என்று அன்று   சைவ பெரியார்கள் சித்தர்கள் சொல்லி சென்றர்கள்

கடலை நோக்கி ஆறுகள் ஓடுவது போலே  நாம் எங்கே இருந்தாலும் எதை செய்து கொண்டிருந்தாலும் எம் சிந்தனைகள் மட்டும் இறைவனை நோக்கி இருக்க வேண்டும் நமது சிந்தை இறைவனிடத்தே இருக்கும் பொது இறைவன் நம்மோடு எப்போதும் இருப்பதை நம்மாலே உரண முடிகிறது நாம் பூமியிலே வாழ்ந்தாலும் ஜீவன்முத்தராக வாழ முடிந்தால் பூமியிலே ஆசைகள் இன்றி துன்பம் இன்றி இறைவனிட த்தே ஒன்றி வாழ முடியும் என்று  உமாபதி சிவாச்சாரியார் அன்று சொல்லி சென்றார்
ஆசையை துற அகிலமும் நமக்கு என்றுஇன்றைய கவின்ஞர்களும் சொல்லி தானே வைத்தார்கள்
எனவே நாமும் புறத்தே இறைவனை தேடாது அகத்தே ஒழிந்திருக்கும் இறையருளை தேடி போவோமாக.

 கவி மீனா

 

 

2 Kommentare: