Sonntag, 11. November 2012

இழப்பு

அறிவை இழந்தவன் மடையன் ஆனான்
உறவை இழந்தவன் அனாதையானான்
நாட்டை இழந்தவன் அகதியானான்
பேச்சை இழந்தவன் ஊமையானான்
பொறுமை இழந்தவன் குற்றவாளியானான்
பொருளை இழந்தவன் கடனாளியானான்
மனசாட்சியை இழந்தவன் மிருகமானான்
காதலை இழந்தவன் நடை பிணமானான்
உயிரை இழந்தவன் பிணமானான்


கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen