Samstag, 10. November 2012

தாலி படும் பாடு
 
 
மூன்று முடிச்சு போட்டதாலே
அன்று பெண்கள் வாழ்வு பாது காப்பு ஆச்சு
இன்று மூன்று முடிச்சு போட்டதாலே
நாற்பது பவுணுக்கு குறையாமே காசு வீணா போச்சு
தாலி என்பது அன்று இந்து கலாசாரம் ஆச்சு
இன்று தாலியோ கல்லு பூட்டுவைச்சு பெரும் நாகரீகமாச்சு
மஞ்சள் கையிற்றில் தாலி கட்டி
மகிழ்த காலம் போச்சு இன்று அடுத்தவள்
கழுத்தை பார்து பாத்து தாலி நிறை கூடி போச்சு
தாலி கட்டின புருசன் காலை தொட்டு
ஆசீர்வாதம் வாங்கின காலம் மலை ஏறி போச்சு
இன்று தாலி கட்ட முன்னமே அவன்
தலையில் பெண்கள் மிளகாய் அரைச்சாச்சு
மஞ்சள் கையிற்றுக்கு மஞ்சள் பூசி குங்குமம் பூசி
பெருமை கண்ட பெண்கள் மாறியாச்சு
பவுணை கூட்டி கல்லு பூட்டு போட்டு இன்று
தாலி கூட கண்களுக்கு காட்சி பொருள் ஆச்சு
புருசன் பேரை சொல்லாமே தாலி அடுத்தவர் கண்ணில் படமே
மறைத்து வைத்த காலம் எங்கோ போச்சு
இப்போ தாலி தூக்கி காட்டி காட்டி அதன்
எடையும் விலையும் பேசி பேசி வீண் புகழ்சியாச்சு
அன்று பதினாறு செல்வமும் பெற்று
திருமண வாழ்வும் சிறப்பாய் போச்சு
இன்று இப்படி தாலி படும் பாட்டிலே
பலர் மண வாழ்வும் வீணா போச்சு
வீணா போச்சு
                                                
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen