Sonntag, 22. November 2020

 

கொரோனா 

சீனா காரன்தான் கொரோனா வீருஸ்சை கண்டு பிடிச்சு  மற்ற நாடுகளுக்கு ஏவி விட்டதாக ஒரு வதந்தி பரப்பினம் அப்படி அவனது செயல் என்றால் அவன் ஏன் தன்டை நாட்டுக்கே அதை விடுகிறான்?

சிந்திக்காமல் புரளி பேசும் மனிதர்கள்  கொஞ்சம் சிந்திச்சு பாருங்க!

அப்படி இந்த நோய் கிருமி சீன தயாரிப்பு என்றால் அவன் எம்மட்டு புத்தி சாலி பாருங்க!



அணுகுண்டை தயாரிக்கும், றொக்கெற்றை விண்வெளிக்கு விடும்  அமெரிக்கர்களால் கூட இதை அழிக்க ஒரு மருந்தை கண்டு பிடிக்க முடியவில்லையே!

ஒரு நாட்டையல்ல அகில உலக நாடுகளையே நடுங்க வைக்குது இந்த கொரானோ, கட்டியணைத்து முத்மிட்டவர்களும், கட்டிபிடி வைதியம் பார்த்தவர்களும், டிஸ்கோ, பார் என்று கூடி கும்மாளம் போடுபவர்களாலும்,

இன்றைய நவின காதலர்கள் அதாவது தினம் ஒருவனையோ ஒருத்தியையோ மாத்தி மாத்தி பிடித்து சல்லாபிக்கும் நவீன காதலர்களாலும்,  சாமத்தியம், கல்யாணம், வளைகாப்பு, பிறந்நாள் என்று கொண்டாட்டங்கள் வைத்து கூடி குழுமி போடுகிற ஆடம்பர விழாக்களாலும்,  செத்தவீடு ஊரிலை நடந்தாலே இங்கே கூடி அழும் நம் தமிழர்களாலும் கடத்தபடும் இந்த வைரஸ் அப்பாவி மக்களையும் சேர்த்து கொல்லுது தெரியாமல் பக்கம் நின்ற காரணத்தாலே!

இதன் தீவிரத்தை உணர்ந்து எனியாவது தள்ளி நில்லுங்க, ஆளை ஆழு முட்டாமல் தூர நின்று கைகாட்டுங்க என்று சொன்னாலும் இந்த சுவையை கண்டவர்களுக்கு அதை ஏற்று கொள்ள முடியாது, களவாக தன்னும் சந்திச்சு கட்டிபிடி வைதியம் பார்கிறாங்க!

அப்ப நோய் பரவாமல் என்ன செய்யும்?  ஒரு உடம்பில் பதினாலு நாள்தான் இந்த கொரானோ உயிர் வாழுமாம், ஒரு முறை கொரானோ பிடித்து அதிலிருந்து தப்பி உயிர் வாழுபவர்களுக்கு அது மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தாதாம்.

 ஆனால் கோரோனா தாக்கிய மனிதர்கள் கை பட்ட இடத்தில் கூட கொரானோ குறைந்தது ஒரு சில  மணித்த்தியாலம் குந்திக்கொண்டு இருக்குதாமே சாகாமல் அடுத்தவனை காவு வாங்க!

பேய் பிடிச்சால் கூட ஒருவனையோ ஒருத்தியையோதான் பிடிக்கும் ஆனால் இந்த கொரானோ டப் டப்பென்று பாய்ந்து பாய்ந்து பிடிக்குது கைக்கு எட்டிவர்களை எல்லாம்.

இது ஒருவேளை வேற்று கிரகங்களிலிருந்து வந்து இறங்கியிருக்குமோ எனக்கு ஒரு சந்தேகம்தான் மற்றவனை சொல்லிபோட்டு நான் வேறே புரளி கிழப்பி விடவில்லை ஆனாலும் யோசிக்க தோணுது,

எந்த சரித்திரத்திலும் இப்படி ஒரு நோய் அகில உலகையே அள்ளி கொண்டு போக பரவவில்லை! இது ஒரு பார தூரமான பாதிப்பு!

கொரோனா கோரோனா கருணை காட்டு என்று கேட்டாலும் வீடுகுது இல்லை, யாருக்கும் அஞ்சாத சனங்கள் கூட இந்த நோய்க்கு அஞ்சி ஒழிக்க நேரிடுதே!

 பெற்ற பிள்ளைகள் பேர பிள்ளைகளை கூட அணைக்க முடியாது தடுக்கும் இந்த நோய்   மனிதர்களுக்கு வந்த சாப கேடே!

வட்ஸ்அப்பிலும், ஸ்கைபிலும் பிள்ளைகளுக்கும், பேரபிள்ளைகளுக்கும் முத்தம் கொடுக்கும் காலமிது, இணையத்தோடு இணைய தெரியாத வயோதிப சனம் எம்மட்டு தனிமையிலே பூட்டிய வீடுகளுக்குள் மனமொடிந்து சாகுதுகள்,

இது யார் செய்த பாவமோ நான் அறியேன்.

அன்று ராவணன் ஒருவன் செய்த பாவத்துக்கு அனியாயமாக இலங்கையே தீபிடித்து எரிந்ததாம் அதுபோல் இன்று எவன் செய்த பாவமோ எல்லாரையும் பிடித்து விரட்டுது.

கைகழுவு கைகழுவு என்று சொல்கிறார்களே கை கழுவி விட்டால் உறவுகளை கைகழுவி விடலாம், ஆனால் கொரானோவை கை கழுவினாலும் மூக்கினுடாக  அல்லது  வாயினுடாக உள்ளே போய் விடும்.

 இப்போதெல்லாம் முகத்தை மூக்கை மூடிகொண்டுதான் வெளியே போக வேண்டியிருக்கு முகமூடி கொள்ளைகாரர்களை போலே, இதிலை பக்கத்திலை உண்மையான மூகமூடி கொள்ளைகாரன் நின்றாலும் தெரியாது பாருங்க!

இன்றைக்கு கதைச்ச ஆளு நாளை இருப்பாரா? என்பதே தெரியாத நிலமை இன்று,

சிலபேருக்கு எந்த நோய் தொத்தினாலும் ஒன்றும் செய்யாது ஆனால் அவர்களால் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்பு உண்டு.

கடைகளுக்குள்  குறைந்தது 2 மிற்றர் தள்ளி நிக்க சொல்கிறார்கள் ஆனால் கடைக்குள் முந்தியடித்து சாமான்களை அள்ள நிக்கும் சனங்கள் இடித்துக்கொண்டு போக நிக்கும் போது இடைவெளி குறைந்துதான் போகிறது.

சாவு என்பது எல்லாருக்குமுண்டு ஆனால் ஒட்டுமொத்தமாக செத்தால் ஒழுஙகான செத்தவீடு கூட நடக்காது.

கும்பலொடு கோவிந்தா கோவென்று எங்கை கொண்டு போய் போடுறாங்களோ தெரியாது.

சாம்பலை கடலிலை கரைக்காட்டி ஆவி அந்தரத்திலை தொங்கும் ஆத்ம சாந்தியின்றி, அந்த பயம்தான் பாருங்கோ எனக்கு!

பிறப்பெடுத்து அந்தரித்தேன் இறப்பின் பின்பும் அந்தரிப்பா? அதை நினைத்தால்தான் பயம் வருகுது!

கடவுளை கும்பிடும் இந்துக் கோவில்கள், தேவாலயங்கள்,  மசுதி யாவற்றையும் மூட வைத்தது கொரோனா!

அப்படியானால் கொரோனா ஒரு நாஸ்தீகன் என்பது தெரிகிறது.

எந்த  கிரகத்திலிருந்து வந்தது என்பதுதான் புரியவில்லை எனக்கு!

புரியாத புதிராக கொரோனா கண்ணுக்கு தெரியாத எதிரியாக கொரோனா!

 

 

நீ

மனிதனே  குணத்தாலும்

செயலாலும் மிருகம் நீ

கூட்டமாய் வருவதிலே பன்றி நீ

மனம் தாவி பாய்வதிலே குரங்கு நீ

கண்டபடி கத்தி குரைப்பதிலே நாய் நீ

சீறி கொத்துவதில் பாம்பு நீ

அடுத்தவரை முட்டி மோதுவதால் எருமை நீ


தட்டி பறிபதிலே காகம் நீ

சதி வேலை செய்வதிலே குள்ள நரி நீ

வெறும்  தோற்றதிலே மட்டும் மனிதன் நீ

மனிதன் நீ