Freitag, 17. November 2023

பசி வந்தால்

Mexico இலே புழு,  பெரிய கறுத்த றும்பு எல்லாம் பொரித்து சாப்பிடுறாங்கள்  என்று ஒரு TV (Galileo )  புரோகிராமில் பார்தனான்,

சீனாகாரன் பாம்பு,  பங்கொக் தாய்வான் காரங்கள் தவளை, எலி ஆபிரிக்காக காட்டுவாசிகள் வொவ்வால், புழு இப்படி எல்லாம் சாப்பிடுறாங்கள்,  எங்களுக்கு அருவருப்பானவை அவங்களுக்கு சுவை மிகுந்து ( delicates food ) உணவு.

அடுத்வன் என்ன செய்யுறான் என்ன சாப்பிடுறான் என்று பார்கிற நம்ம சனம் கூட ஆதிகாலத்தில் சகல காட்டு மிருகஙங்ளையும் வேட்டையாடி சுட்டு சாப்பிட்டுதானே வாழ்ந்தார்கள், கால போக்கிலை கையாலே அள்ளி நக்கி சாப்பிட்ட தமிழர்கள் இன்று மேசையும் கத்தி கரண்டியும் பாவித்து சாப்பிடுற அளவுக்கு காலத்தின் வளர்ச்சியும்

நாகரீகமும் மேலை நாட்டு கலாச்சாரமும் நமக்குள்ளே கலந்து விட்டதுதான் உண்மை!

பசி வந்தால் பத்தும்  பறந்திடும் என்பது பழடோழி, இப்ப கையிலை காசு வாயிலை தோசை என்றாகி விட்டது நிலமை, அடிக்கடி ஏதாச்சும் நொருக்கு தீனிகளை சாப்பிடுவதால் பசியே எடுப்பதில்லை சில பேருக்கு, எக்கசக்க மாத்திரைகளை போடும் நோயாளிகளுக்கு பசி எடுப்பதில்லை காரணம் மருந்துகளின் பக்க விளைவு நாவின் சுவையை கூட இல்லாமல் பண்ணி வீடுகிறது பாருங்க!

அந்த நாளிலை கூழ் என்று காச்சி சிரட்டையிலை வைத்து குடித்தவனும், பழைய சோற்றை அடுத்தநாள் போட்டு பிரட்டி அள்ளி சாப்பிட்டவனும், ஆடு மாடு வெட்டி எறியுற களிவு நிறைந்த குடலை கூட எறியாமல் சமைத்து சாப்பிவனும்  கூட இன்று வெளிநாடு வந்த பின் அதையே மேசையிலை வைத்து சாப்பிடுறான் இது தெரியாமே நாம அடுத்த நாட்டு காரன் என்ன சாப்பிடுறாங்கள் என்று ஆராய்ச்சி செய்கிறோமே இதை நினைத்தால் சிரிப்புதானஇ வருகிறது

உலகம் ஒன்றுதான்,  உயிர்களுக்கு இரத்தமும் ஒரே நிறம்தான் ஆனால் அதில் வாழும் மனிதர்கள்தான் நிறம் மாறி, குணம் மாறி, மனம் மாறி, பழக்க வழக்கங்களும் மாறி வாழுறாங்கள்.

எல்லா உயிர்களையும் கடவுள் மண்ணில்தான் செய்து  உயிர் கொடுத்ததாக சொல்ல படுகிறது  ஆனால் அந்த உயிருக்குள்ளே உள்ள மனசை எப்படி உருவாக்கினார்?

கவி மீனா


மனித வாழ்க்கை

உடம்பில் உள்ள வெட்டு கொத்து காயங்களை ஆடை மறைக்குது

மனசில் உள்ள  வேதனைகளை முகத்தில் வரும் சிரிப்பு மறைக்குது

துன்பங்களும் இன்பங்களும் கலந்து வருகுது

கால போக்கில் ஒவ்வொன்றாய் கலைந்து போகுது

வானில் கார் மேகங்களும்  காற்றில் ஓடி மறையுது

மனித வாழ்வில் உறவுகளும் ஒவ்வொன்றாய் களன்று போகுது

 

பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம்

என்று  வாழ்க்கை போகுது

அதிலும் வாழ்ந்தவர் சிலரே வருந்துபவர்கள் பலரே

என அவரவர் வதியும் விளையாட்டு காட்டுது

மண்ணில் இந்த காயமும்  சாய்கின்ற வேளை வரை

நாய் படா பாடு பட்டு போராடுது

இதுக்கு  தானே மனித வாழ்க்கை என்று

பேரு வைத்தாங்க!

கவி மீனா

Donnerstag, 5. Oktober 2023

 

கலப்படம் 

எங்கே பார்த்தாலும் எதிலும் கலப்படம்  கலப்படம் இல்லாத சுத்தமான பொருட்கள் எதுவுமே இல்லை என்றாகி விட்டது உலகிலே, பாலுக்கு நீரை விட்டு கலக்குறாங்கள் அரிசியிலை கல்லை கலக்குறாங்கள்  மாடுகளுக்கு குடுக்கிற தவிட்டிலை கூட உமியை கலக்குறாங்கள்  அதுவும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகிற அனைத்து பொருட்களும் இப்ப கலப்பட பொருளாகவே வருகிறது

சுத்தமான மிளகாய் தூளும் இல்லை சுத்தமான அரிசிமா சவ்வரிசு கூட இல்லை எல்லா உணவு பொருட்களுக்குள்ளும் ஏதோ கலந்து சுவை குறைந்து மணம் குறைந்து தரமில்லாத  பொருட்களாக ஆரோக்கியமற்ற உணவு பொருட்களாகதான் எல்லாம் காணப்படுகிறது இருந்தும் நாமும் தேடி தேடி அலைந்து அவைகளையே வாங்குகிறோம் காரணம் நம்ம நாட்டு உணவுகளை சமைத்து சாப்பிட வேணும் என்ற பேராவலில் பாருங்க!

கலப்படம் இல்லாத தங்கமும் இல்லை கலப்படமில்லாத தமிழனும் இப்ப இல்லை பாருங்க! புலம் பெயர்ந்து  திக்கு திக்காய் போன தமிர்கள் வாழ்வில் பாசையிலும்  கலப்படம் வந்து விட்டது, சுத்தமான தமிழை பேசுவதுமில்லை எந்த நாட்டில் இருக்கிறார்களோ அந்த நாட்டு மொழியும் கலந்துதான் பேசுகிறார்கள் இது மட்டுமா? அவர்களது மதம் கலாச்சாரம் அதுவும் கலந்து கலப்படமாக மாறியது மட்டுமின்றி அவர்களது சிறார்கள்  மதம் மொழி  கலாசாரம் எதுவுமில்லாத ஒரு கலப்பட பிள்ளைகளாக வளர்வதும் உண்மை!

அதைவிட பெரிய மறுக்கமுடியாத உண்மை எதுவெனில்  வெளிநாட்டில் வாழும் தமிழ் பிள்ளைகள் அன்னிய மொழி பேசும் பிள்ளைகளையே விரும்பி மணமுடிபதாகும் ஒவ்வnரு புலம் பெயர் தமிழர் வீட்டிலும் ஒரு பிள்ளையாச்சும் தமிழ் பிள்ளை இல்லாத, வாழுகின்ற நாட்டு பிள்ளையை அல்லது அவர்கள் வாழுகின்ற இடத்தில் வாழும் வேறு நாட்டவர்களை காதலித்து மணமுடிப்பது இங்கு இயல்பாகி போய் விட்டது

அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள்தான் பெரிய கலப்படம் வெள்ளை கருப்பு இங்கே கலக்கின்றது, மொழியும் மதமும் இங்கே கலக்கின்றது  இரு நாடுகள் இங்கே இணைகின்றது

இங்கு தமிழ் பிள்ளைகள் யேர்மன் நாட்டவரை மட்டுமின்றி   மற்ற நாட்டு பிள்ளைகளையும் மணமுடித்துள்ளார்கள் இதற்கு மேலாக ஒரு கலப்படம் இருக்குமா உலகிலே?

இதை விட கலப்படத்தை பற்றி நான் என்னதான் சொல்ல முடியும்?

கவி  மீனா

 

Sonntag, 24. September 2023

 

மரம் இல்லாத உலகினிலே 

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே

நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய

மாட்டாதவன் நன் மரம்--

இதன் பொருள் காடுவழியே செழித்து நிக்கும் மரங்கள் அல்ல மரம்

ஒரு சபைதனிலே வாசிக்க தெரியாமல் நிக்குற படிப்பு அறிவு இல்லாதவனே மரம் என்று

மூதுரையில் ஒளவையயார் சொல்லியிருக்கிறார்

மரங்களின் சிறப்பு அறிந்து ஒவ்வொரு நாடுகளிலும் மரங்களை நட சொல்லி அரசாங்கம் ஒரு பக்கம் சொல்லிவர, இன்னொரு பக்கம் மரங்களை வெட்டி எறிந்து உயர் மாடிகளை கட்டி  காற்று இல்லாமல் மழை இல்லாமல் காய் பழங்கள் இல்லாமல் பறவைகளுக்கு வாழுமிடம் இல்லாமல் நிழல் இல்லாமல் செய்வோரே அதிகம் பேரு

நீங்கள் வெட்ட நினைத்தால் இந்த ஒளவையார் சொன்ன அறிவில்லாது நட்ட மரம் போலே நிக்கின்ற மனிதர்களை அழியுங்கள் அறியாமை ஆணவம் பொறாமை  போன்ற கொடிய குணம் கொண்ட மனிதர்களை அழியுங்கள் மரங்களை வளருங்கள் அன்பு பாசம் மனிதநேயம் உலகமெங்கும் நிலைக்க பாடு படுங்கள்

பழங்களை தருகிற மரங்கள் மட்டுமல்ல ஓங்கி வளர்ந்து நிற்கின்ற மரங்களால்தானே மழை பூமிக்கு வர காரணமாக இருக்கு அதை விட நிழல் கோடை காலங்களில் ஒரு பெரிய ஆறுதல் மனிதர்களுக்கு

மரங்கள் இல்லையேல் வெறும் பாலை வனமாகதானே உலகம் மாறி விடும் பசுமை இல்லாத உலகத்திலே உயிரினங்கள் எப்படி வாழ்வது? வெய்யில் காலங்களில் மர நிழல் கிடைத்தால் எம்மட்டு ஆனந்தம்  இதை உணர்ந்தவன் மரங்களை தறிக்க நினைக்க மாட்டான்

மரங்கள் இல்லா உலகத்தை நினைத்து பாருங்கள் பச்சை நிறமே கண்ணுக்கு தெரியாத ஒரு உலகத்திலை எப்படிதான் வாழ்வது? காயில்லை பூவில்லை இலை இல்லை என்றால்  உண்ண உணவுதான் இருக்குமா?

சிறிய தாவரங்கள் முதல் பெரிய மரங்கள் வரைதான் எமது  உணவுக்கு ஆதாரம்

ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு பயனையும் பழங்களையும் தருவது மட்டமல்லாமல் சுத்தமான காற்று கிடைக்கவும் உதவுகிறது  வளவுக்குள்ளை இருக்கிற புளியமரத்தை வெட்டி எறிந்து போட்டு கடையிலை தினமும் பழபுளியை காசு கொடுத்த வாங்குற சனங்கள்  ஊரிலை

இருக்குற காணிக்குள்ளை மரங்களை நட்டு காய் கறிகளை அறுவடை செய்யாமல் வெளிநாட்டிலை இருந்து காசு வருவதால் எல்லாம் கடையிலை வாங்குற சனமும் ஊரிலை இருக்கத்தானே செய்கிறார்கள் ஆனால் அவர்கள் சிந்தித்து பார்பதில்லை அவர்களை போலவே மற்றவர்களும் நினைத்தால் கடையில் காசை கொடுத்த வாங்க கூட காய்கள் பழங்கள் இருக்காது என்பதை!

மரங்கள் இல்லாமல் பசுமை இல்லாமல் வெறிச்சோடி போன நிலங்களை நினைத்து பாருங்கள்

காய்கள் பழங்கள் இல்லாமல் மனிதர்கள் பசியால் துடிக்க போவதை எண்ணி பாருங்கள் போற போக்கிலை எதிர்காலம் இப்படிதான் மாற போகிறது

சிந்தித்து பார்த்து செயல் படுங்கள் மரங்களை தறிபதா  மரங்களை வளர்பதா என்று?

கவி மீனா

 

அவன் எங்கே?

அவன் எங்கே அவன் எங்கே?

அந்த ஆதி சிவன் எங்கே?

அடியும் முடியும் காணாது

அண்டமெல்லாம் வளர்ந்து நின்ற

அந்த ஆதி யோகி எங்கே?


உமையவளை பாதி கொண்ட

பரமசிவன் எங்கே?

பரிதவித்து மானிடர் அழுகின்ற போது

அவன் எங்கே?

 

நச்சு பாம்புகளுக்கும் அடைகலம்

 கொடுத்த ஆண்டவன்

அவணியிலே அவதியுறும் மானிடர்கு

அடைகலம் கொடுக்க மறுப்பதேன்

பாதி உடலை பார்வதிக்கு கொடுத்த சிவன்

துன்பமுறும்  பெண் இனத்தை காக்க மறப்பதும் ஏன்

கங்கை கொண்டை சடையான்

உலகை காக்க கங்கயை தந்த  சிவன்

இன்று உலகம் அழிவதை தடுக்காமல்  நிப்பதும் ஏனோ?

அவன் எங்கே அவன் எங்கே?

அந்த ஆண்டவன்தான் எங்கே?

 கவி மீனா

 

Montag, 12. Juni 2023

 

இன்னும் எத்தனை நாள் 

நாடி தளர்ந்து நடை தளர்ந்து

இடை மெலிந்து பாடையிலே போவதற்கு

பிறப்பெடுத்த மானிடனே

கடை கடையாக ஏறினாலும்

உன் நோயும் பிணியும் தீர

மருந்துமில்லை

 சாக வரம் பெற்று நீடுழி வாழ

வழியுமில்லை

 


நீ மாடி கட்டி வாழ்ந்தாலும்

மடி மீது புரண்டு இன்பமுற்றாலும்

சோடி மாறி சுகம் கண்டாலும்

கடைசியிலே காடுதான்

கட்டுடலும் கலைந்து 

ஆணவமும் அழிந்து

உறவுகளும் தொலைந்து

உருக்குலைந்து நீ போக

காலம் மிக விரைவில்

வரும் என்று தெரிந்தும்

 

பிறரை மதியாமல் குதிக்கிறாய்

அன்பை உணராமல் மிதிக்கிறாய்

எக்கதாளமாய் சிரிக்கிறாய்

நேரமின்றி பறக்கிறாய்

இன்றோ நாளையோ

இன்னும் எத்தனை நாள்

என்பதை மறக்கிறாய்

இந்த நிமிடமாவது சிந்தித்து பார்

உண்மை எது என்பதை சிந்தித்து பார்

கவி மீனா

 

 

கதிரை

கதிரையை பற்றி என்னதான் எழுத போறன் என்று யோசிக்காதீங்கோ கதிரைதான் இன்று முதல் இடத்தை பிடிக்குது, இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இந்த கதிரைக்காகதானே ஒரே போராட்டமும், சண்டையும் நடக்குது அரசியல் வாதிகள் ஆளை ஆழு இழுத்து விழுத்த ஒரே அடிதடி சண்டை போடுறாங்க இந்த கதிரையை பிடிக்கத்தானே?

அன்று தொட்டு இன்று வரை இந்த பதவி என்ற கதிரையை பிடிக்க படாத பாடு படுறாங்கள் ஒரு ஆளு ஏறி இருந்தாலும் அடுத் கட்சிக்காரன் இழுத்து விழுத்துறான் இதுக்கு முடிவும் இல்லை சனங்களுக்கு அமைதியும் இல்லை, பதவி மோகமும் பணம் சம்பாதிக்க பேராசையும் தான் காரணம் அரசியல்வாதிகள்தான் பெரும் பணத்தை பதுக்கிறாங்களே!

பதவிக்காகவும் பாளிமென்றில் ( Parliament ) கதிரைக்காகவும்  போடும் கூச்சலுக்கு என்றுதான் முடிவு வருமோ தெரியலை

ஆனால் புலம்பெயர்ந்து  வெளிநாடு வந்து அரசியல் தஞ்சம் புகுந்த தமிழருக்கு கதிரை கிடைச்சுட்டுதுங்க

கூடுதலான தமிழருக்கு இங்கை நிரந்தமாக கதிர கிடைச்சுட்டுது என்றால் ஆச்சரியம்தான்

அதுதாங்க ஒவ்வொருத்தர் வீட்டிலும் உள்ள கதிரையைதான் சொல்லுறன்

இங்கு அனேகம் பேரு வீட்டிலை ரீவீ க்கு ( TV ) முன்னாலை ஆளுக்கொரு கதிரையிலை கிடந்து நாள் பூரா சேரியலை பார்பதுதான் வேலையுங்க!

அவை நினைத்தாலும் அந்த கதிரையை விட்டு எழும்பமுடியாது காரணம் அம்மட்டு நோயுங்க,  பக்கவாதம், பைபாசு, இருதய நோய், நீரிழிவு, கால் விறைப்பு,  முள்ளந்தண்டு பிரச்சனை, கான்சர் இப்படி பலதரப்பட்ட நோய்களும் இங்கு வந்த நம்ம ஆரோக்கியத்தை தாக்கி கதிரையிலை இருக்க வைச்சுட்டுது பாருங்க!

இதுக்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா என்று ஒரு படம் வந்திச்சுது அது போல நம்ம சனம் வெளிநாட்டுக்கு ஆசை பட்டு ஓடி வந்து ஆனேகமானோர் இப்படிதான் கதிரையிலை கிடக்கினம்

ஊரிலை இருந்திருந்தால் கொஞ்சமாச்சும் வளவுக்குள்ளை வேலை செய்திருக்கலாம் இல்லை கடைசி வீட்டு படியிலை குந்தி இருந்து எழும்பவும், சப்பாணி கட்டி இருந்து எழும்பவும் உடலும் ஆரோக்கியமாக இருந்திருக்கும் உண்டதும் செமிச்சு இருக்கும்

 

நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா

நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா

நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா

நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா

ஊரிலை குத்தரிசி சோறும் மீன் மரக்கறி என்று சாப்பிட்டவையும், இடித்து அரைத்து சமைத்தவையும் இங்கை வந்து பஞ்சி பட்டு வெள்ளைசோறு அதுவும் ரைஸ்குக்கரிலை போட்டு அவிச்சு எடுத்து சாப்பிடுவதும்

இங்கை வந்த சனத்திலை கனபேரு சுதந்திரம் தமக்கு கிடைத்த மகிழ்சியிலை நித்தம் நித்தம் இறைச்சி, முட்டை,  பட்டர், சீஸ், மது, மாது, புகை என நல்லாக கொண்டாடிதான் இப்படி அழுந்துறாங்க இப்ப !

புகை போட்டா பழம் பழுக்கும் ஊரிலை இங்கை புகை போட்டு கன ஆண்களுக்கு நுரையீரல் பழுத்துட்டுதுங்க! ஒரே கம்மு கம்முதான், ஊரிலை ஒழிச்சு ஒழிச்சு குடிச்சவன் எல்லாம் இங்கை வந்ததும் கூட்டு சேர்ந்து குடிக்க தொடங்கினாங்க,

குடிச்சு முடிய கத்தல் கூச்சல் அடிதடி கூட நடந்திச்சு கூடியிருந்த இடங்களிலை இல்லாட்டி ஒழிச்சு வீட்டிலை குடிச்சவன் மனுசியோடே மல்லு கட்டுவது வழக்கமாக போச்சுது,

அவனவன் வாழ்க்கை அவன் கையில் என்று ஏன் சோன்னார்கள் தெரியுமா? அளவுக்கு மிஞ்சி ஆட்டம் போட்டவர்களில் சிலருக்கு கதிரை நிரந்தமாச்சு, சிலபேரு போய் சேந்துட்டாங்க, இன்னும் ஒரு சிலருக்கு தனிமை சொந்தமாச்சு, ஏனெண்டால் குடிகாரண்டை மனுசி விட்டுபொட்டு போட்டாங்க ரோச்சர் தாங்க முடியாமே!

எது எப்படியோ இங்கை அதிகமானோருக்கு கதிரை கிடைச்சுட்டுது அதிலை கிடந்து ரீவீயை ( TV ) பார்த்துக்கொண்டு கிடைக்கிறதை முழங்கிட்டு எழும்ப பறிக்க ஏலாமே உளன்று கொண்டு கிடக்க வேண்டியதாயிற்று, கதிரையை பிடிக்க அடிபாடு உலகமெங்கும் நடக்குற நேரத்திலை நிரந்தரமாக கதிரை கிடைப்பதே பெரும் காரியம் ஆச்சு! இங்கை அவர்கள் கைவிட்டாலும் கதிரை அவர்களை கைவிடாதுங்க!

இது எல்லாம் அவனவன் தேடி கொண்ட வாழ்க்கை பாருங்க!

கவி மீனா

 

Mittwoch, 22. März 2023

 

பச்சை நிறை ஆடைகுள்

டிசம்பர் மாதம் மார்பில் ஒரு கட்டி அதை ஒப்பரேஸன் செய்ய வேணும் என்று வைதியர்கள் சொன்ன போது எனக்கு ஒரே பயமாக போய் விட்டது உள்ள வருத்தங்கள் போதாது என்று இது வேறே வரணுமா? என மனசு நொந்தேன் 3 வருடமாக வீட்டுக்குள் ஒழிந்து வாழுகிறேன் கொரோனாவுக்கு பயந்து 4 தடுப்பு ஊசி வேறே போட்டாச்சு கொரோனா பிடிக்க கூடாது என, ஆனால் விதி விட்டுதா? வீட்டுக்குள்ளேயே வந்து மார்பிலை கட்டி உட்கார்ந்து விட்டது எமது கையில் ஏதுமில்லை என்பதை நான் அறிந்திருந்தும்  ஒவ்வொரு தடவையும் இப்படி இன்னல்கள் வரும் போது மனசு சோர்ந்துதானே போகிறது

ஒரு மாதிரி அந்த நாளும் வந்தது எத்தனையேயா சோதனைகளை முடித்து 16 ம் திகதி மாச்சு மாதம் ஒப்பரேஸன் என்று நாள் குறித்தாச்சு அம்மனை நம்பி தினமும் கும்பிட்டு கொண்டிருக்கிற எனக்கு இப்படி நோய்களும் வருதே கடவுள் இருக்கா என்று ஒரு சந்தேகம் வேறே வந்துட்டுது

ஒப்பரேஸன் அண்டைக்கு மகனோடு கொஸ்பிட்டலுக்கு போக உடனேயே டிரெஸ் எல்லாம் மாற்றி  கட்டிலில் படுக்க வைத்து ஒப்பரேஸன் தியேட்டருக்கு கொண்டு போனார்கள், நான் திரும்பி உயிரோடை வராட்டி என்ன என்ன செய்ய ணும் என்று மகனுக்கு சொல்ல அவன் சும்மா வாயை மூடிகொண்டு வாங்கோ தேவையில்லாமல் கதைக்காமல் என்று சொல்லி போட்டான்

அவர்கள் தந்த ஒரு குழிசையை குடித்தும் எனக்கு அமைதி வரவில்லை உள்ளே போனதும் கதைச்சு கதைச்சு ஒரு ஊசியை போட்டார்கள் நான் எனக்கு பயமாக இருக்கு வேறே வருத்தங்கள் நிறைய இருக்கு நான் கண் முழிப்பனோ தெரியாது என்று அங்கை நின்ற வைதியர்களுக்கும் சொல்ல அர்கள் பயபடாதே எல்லாம் நாங்கள் சரியா பார்பம் என்று சொன்துதான் கேட்டது அதோடே நான்  நினைவிழந்து போனேன்

மீண்டும் கண் முழித்த போது எனக்கு நான் எங்கே இருக்கிறன் என்றே புரியவில்லை அப்படி ஒரே பச்சை நிற உடுப்புகளோடு தலையெல்லாம் மூடி கட்டி மஸ்க் போட்டபடி கனபேரு சிரிச்சு கதைக்கினம் பக்கத்திலை, எனக்கு ஒன்றுமே விழங்கலை நான் ஏதோ வேறே ஒரு உலகத்துக்கு வந்து விட்ட மாதிரி ஒரு உணர்வு

அப்படியும் இப்படியும் பார்கிறன் மெல்லமாக கையை ஆட்டி பார்கிறன்

உடனே என்தலையை ஒரு ஆளு தடவி நீ பயபடாதை எல்லாம் சக்சஸ், ஒப்பரேஸன் முடிஞ்சுது என்று சொல்ல இன்னுமொரு ஆளு என் கையை தடவி நீ எனி பயபட தேவையில்லை என்று சொல்ல  இன்னுமொரு ஆளு காலை பிடித்து நாங்கள் எல்லாம் இருக்கிறம் எல்லாம் நல்லாக முடிஞ்சுது உன்னை ரூமுக்கு கொஞ்சத்தாலை கூட்டி போறம் என்று சொல்ல தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக விழங்கியது எனக்கு ஒப்பரேஸன் முடிஞ்சுது இவர்கள் எல்லாம் வைதியர்கள்  என்பது

எம்மட்டு அன்பான அவர்களது வார்தைகளும் ஸ்பரிசமும் என்னை மெய் மறக்க வைத்தது எவ்வளவு உயர் கல்வியை கற்ற இந்த வைதியர்களுக்கு பெருமையே இல்லை தன்னட்டை வந்த நோயாளி உயிர் தப்பியது பிழைக்க வைத்ததையிட்டு அவர்களுக்கு மகிழ்ச்சி

ஊரிலை அதிகமான வைதியர்கள் கோட்சூட் கழட்டாமல் திமிராக சுத்தி வருவதை நான் கண்டிருக்குறேன், அங்கு ஒரு பிள்ளை டொக்கடருக்கு படித்துவிட்டால் பெற்றவர்களுககே திமிர் வந்திடும் ஆனால் இங்கு வெள்ளை கோட்டை போட்டு வராட்டி டொக்டர் யாரு கொஸ்பிட்டலிலை வேலை செய்யுறது யாரு என்று வித்தியாசமே தெரியாது

 அன்று நான் ஒப்பரேஸன் தியோடேரில் கண்டேன் கருணை வடிவான வைதியர்களை ஆனால் என்ன முகம் தெரியவில்லை குரல் மட்டும்தான் கேட்டது அந்த பச்சை நிறை ஆடைகுள் தலை வரை மூடி மஸ்க் போட்டு எம்மட்டு சிரமத்துடன்தான் நோயாளிகளை காப்பாற்ற வைதியர்கள் படாத பாடு படுகிறார்கள்

கடவுள் எங்கே எங்கே என்று தேடுகிறோமே இந்த கருணை உள்ளம் கொண்ட வைதியர்களின் அறிவிலும், துன்பதிலை கை கொடுக்கும் உதவும் கரங்களிலும்தான் கடவுள் இருக்கிறார் அதுதான் உண்மை!