Mittwoch, 14. November 2012

பெண் என்றால்

பெண் என்றால் பூ என்றும் நிலவு என்றும் கண் என்றும் போற்றபட வேணும் என்று சொன்னவர்களும் நற் கவிஞர்களே
அப்படி பெண்களை வான்மதிக்கும் வண்ணமலருக்கும் ஒப்பாக பாடிய கவிஞர்கள் வாழ்ந்தது ஒரு காலம் இன்று பெண்களை பெண்ணாக கூட மதித்து நடப்பது அரிதாக போனது ஒரு காலம் பெண் என்பவள் பொறுமையின் சிகரமாய் புன்னகை முகத்தோடு பூமியிலே பூரண நிலவாக பொட்டோடு பூவோடு பதுமைகளாய் வாழ்ந்து வந்தது அக் காலம்

பெண் என்பவள் கவிஞர்களின் கற்பனையில் கவிதையாக உலாவந்தாள் கலைஞர்களின் கைவண்ணத்தில் கலைசிற்பமாய் உருகொண்டாள் ஆனால் நிஐ வாழ்விலே பெண்கள் ஆண்களுக்கு ஒரு பேதைகளாய்  சுகம் தரும் போதையாய் அடங்கி வாழ பிறந்த அடிமைகளாய் சுமக்க பிறந்த பாவ பட்ட   ஜீவன்களாய் குனிந்து தாலி வாங்கி குனிந்த தலை நிமிராது வாழ வேண்டிய பிறவிகளாய்  தான் பல ஆண்களாளல் கையாளப்பட்டு வந்தாள் இன்றும் சில ஆண்கள் பெண்களை அப்படிதான் கையாளுகின்றார்கள் என்பதில் பொய்மை இல்லை
பூமாதேவியும் ஒரு பெண் என்று போற்றப்படுகிறாள் பூமியில் நடக்கின்ற அத்தனை கொடுமைகளையும் சகித்து கொண்டு இத்தனை உயிர்களையும் தாங்கி கொண்டு இருக்கின்ற பூமாதேவி கூட கொடுமைகளை தாங்க முடியாத போது கொந்தளித்து புயலாக சுனாமியாக பொங்கி எழுகின்றாள் பெண் என்பவளும் அது போலதான் பெண்ணாக பிறந்ததுக்காக வாழும் காலம் வரை கொத்தடிமையாய் கொடும் சொற் கேட்டும் கொடுமைகளை தாங்கியும் வாழ முடியாது போகையில் அவளும் பொங்கி எழத்தான் செய்கிறாள்
„அமுது அளித்து
அழகுபார்த்து
அன்பு காட்டி
அறிவை ஊட்டி
முத்தம் தந்து
உச்சி முகர்ந்து“
எம்மை வழர்பவளும் தாய் என்னும் பெண்தான்

„இரவு பகல் ஏங்கி நின்று
உன்னை ஒரு முறை பார்த்தால் மகிழ்ந்திருந்து
உன் மொழி கேட்டே இன்புற்று
உன் ஒரு முத்தத்தில் காதல் உறவு கொண்டு“
உனக்காக காத்திருப்பளும் காதலி என்னும் பெண்தான்

„உயிர்ரோடு உயிர் கலந்து
உடலோடு உடலிணைந்து
உனக்கு உச்ச இன்பம் தந்து“
உன்னை  உயிராக நினைத்து வாழ்பளும் மனைவி என்னும் பெண்தான்

மேலும் தோழியாக தங்கையாக மகளாக பெண் பல வழியில் ஆணுக்கு உறவாக வந்து உதவியாகதான் இருக்கிறாள் அதனால் தானே பெண் இல்லா உலகத்திலே சுகம் இல்லை என்று பாடிவைத்தார்கள் கவிஞர்கள் அப்படிபட்ட பெண்ணை காலடியில் போட்டு மிதிக்காமல் மதித்து சம உரிமை கொடுத்து வாழ்பவன் எத்தனை ஆண்களடா?
இந்த உலகில் எத்தனை ஆண்களடா?

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள் ஆனால் சில ஆண்கள் பெண்களை பேயாக அல்லவோ பார்கிறார்கள் பெண்களை பூவாக நிலவாக கண்ணாக போற்றாவிடிலும் பெண்களை ஒரு உயிர் உள்ள  ஜீவனாக பெண்ணாக மதித்து வாழ விடுங்கள் ஆண்களே பெண்களை பெண்ணாக வாழ விடுங்கள்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen