Freitag, 18. November 2022

 

இப்படியும் சிலர் 

அடுதவனை அழிக்க என்ன வழி என்றே நாள் பூரா சிந்திக்கும் சிலரும்

பக்கத்து வீட்டு காரனுக்கு ஐம்பம் காட்ட கடன் பட்டு கார் வாங்குவோர் சிலரும்

அடுதவன் காசை சுருட்டி கொண்டு ஓட்டம் எடுப்போர் சிலரும்


வயிற்று பசியில் அலையும் ஏழைகள் உலகிலிருக்க  இங்கு காம பசியில் அலையும் சிலரும்

அடுதவன் நேர்மையான வாழ்வை  கண்


டே ஏழனம் செய்யும் சிலரும்

எனக்கு உந்த பழம் பிடிகாது உது புழிக்கும் என்று சொல்லி தமக்கு கிடைகாததை சாமாளிக்கும் சிலரும்

வயிறு முட்ட உண்டு புழிப்பு ஏப்பம் வந்தாலும் அடுதவன் வீட்டு சாப்பாட்டுக்கும் அலையும் அவா பிடித்த சிலரும்

சிலர் அண்ட புழுகராய் ஆகாச புழுகராய் இங்கை ஊரை ஏமாற்றிக்கொண்டுமல்லோ இருக்கினம்

எல்லாரும் கேட்டால் நாங்ககள் ஊரிலை ராசாக்கள்தான் என்று புழுகுவினம் அங்கு பள்ளிக்கு போகாதவனும் தான் அங்கை பட்ட படிப்பு படித்ததாக இங்கை கதை அளக்குறதும்,  அங்கை சாப்பாட்டுக்கு வழியில்லாமே இருந்தவர்களும்  தாங்கள் தோட்டம் துரவு வீடு வாசல் என்று வாழ்ந்ததாகவும் வாரவை போரவைக்கு எல்லாம் அன்னதானம் பண்ணியதாகவும் பெரிய பிரப்புக்கள் போலே கதை அளப்பினம்

இதிலை பகிடி என்னவெனில் ஐந்து பெண் பிள்ளை பெத்தால் அரசனும் ஆண்டியாவான் என்பது பழமொழி இதிலை ஏழு பெண் பிள்ளையோடே பிறந்த  ஒருத்தி சொல்லுறா தங்களுக்கு ஊரிலை ஒவ்வொரு பிள்ளைக்கும் அப்பா 25  அல்லது 30 பரப்பு காணி சீதனமாக கொடுத்தவர் என்று 7 பிள்ளைகளுக்கும் இப்படி சீதனம் கொடுக்க அந்த அப்பாக்குதான் அந்த கிராமமே சொந்தமாக இருக்க வேணும் பாருங்க!

இத்தனைக்கும் மாப்பிள்ளைகள் கனக்க படித்தவர்களும் இல்லை டொக்டர் என்ஜினியரும் இல்லை

இவ இந்த மாதிரி இங்கை கதை அளக்குறா ஊரிலை சகோதரங்கள் அடுத்த வீட்டு காணியிலை மாங்காய் விழுகுதா? தேங்காய் விழுகுதா? என்று காவல் நின்று எடுத்தக்கொண்டு போனாதான் அன்றைக்கு வீட்டிலை சமையல் செய்யுற நிலமையிலை வாழுதுகள்

காணி பூமி இருக்க விட்டு போட்டு வெளிநாடு வந்தவர்களுண்டு ஆனால் ஊரிலை 25 பரப்பு காணி இருக்க அதை விட்டு போட்டு யாழ்பாணத்திலை வீட்டை விட்டு இறங்கி நடக்க இடமில்லாத ஒரு வீட்டிலை 6 பேரு கூடி ஒரு அறை உள்ள வீட்டிலை வாழுகிறது  நம்புகூடிய மாதிரியா இருக்கு?

யார் கேட்டார்கள் இப்படியெல்லாம் புழுக சொல்லி உண்மையான மனிதர்களென்றால் அப்படி கஸ்டப்படுகிற இனசனத்துக்கு அடுத்தவன் கிட்டே கை ஏந்தாமே வாழ வழி செய்து கொடுத்திருக்க வேணும் ஆனால் இவர்கள் பொய்யும் புழுகும் சொல்லி தாங்கள் அங்கும் பணக்காரார் இங்கும் பணக்காரர் என மார்பு தட்டி தம்மை தாமே மெச்சுகினம் இது ஒரு வாழ்க்கையா?

இப்படி சிலரும் பலருமாய் புலம் பெயர் வாழ்வில் மனிதர்கள்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று சொன்னர்களே! இப்படி பட்ட மானிடரை காணாமல் இருபதே அரிது என நான் நினைக்குறேன்

கவி மீனா

 

போனது எது?

சொந்த நாடு போனது


சொந்த மண்ணும் போனது

சொந்த வீடும் போனது

சொந்த மொழியும் போனது

சொர்கம் என்றும் நினைத்த

சொந்தங்களும் போனது

சுற்றி நிண்ட உறவுகளும்

சொல்லாமல் போனது

 

காதல் வந்து போனது

 கல்யாணமும் வந்து போனது

கடமைகளும் முடிந்து போனது

காலங்களும் ஓடி போனது

இளமையும் ஓடி போனது

எனி போவதற்கு எதுவுமில்லை

போனது எது என்று

எண்ணி  நீ கலங்காமல்

அதனால் இருக்கும் வரை இருந்து விட்டு

நீயும் சொல்லாமலே போய் விடு

கவி மீனா