Donnerstag, 28. April 2022

 

கல்யாண சாப்பாடு போடவா 


ஊரிலை இருக்கும் வரை எனக்கு பிடித்த சாப்பாடே இந்த கல்யாண வீட்டு சாப்பாடுதான்  பாருங்கோ
, நான் சின்னனாக இருந்த காலத்தே எனக்கு காச்சல் வந்து இரண்டு மூன்று நாள் சாப்பிடாமே இருந்தால் நான் அம்மாட்டை கேட்பது கல்யாண வீட்டு சாப்பாடு செய்து தாங்கோ என்று அதை  வாரவை போரவைக்கு எல்லாம் நெடுக சொல்லி சொல்லி அம்மா சிரிப்பா,



கல்லாண வீட்டிலை வாளை இலை போட்டு அதில் ஒன்பது காய்கறிகளோடு வடை பாயாசத்தோடு உணவு பரிமாறுவார்கள் அதில் உள்ள சுவை வேறு எங்கும் வராது

வீட்டிலை விரத நாட்கள் என்றால்  ஐந்து கறி சோறும்  வடை பாயாசமும் அம்மா  சமைப்பது வழக்கம், அதை வாளை இலையில் சாபிடுவதும் உண்டு ஆனாலும் சைவ கல்யாண வீடுகளில் வரிசையாக இருந்து தூக்கு சட்டியில் கொண்டு வந்து பரிமாறும் போதும் அதை சாப்பிடும் போது வந்த சந்தோஸமும்  வேறு எங்கும் வருவதில்லை, அதனாலை நான் அம்மா போகிற கல்யாண வீடுகளுக்கு நானும் வாரன் என்று அடம் பிடிப்து உண்டு, ஆனால் அம்மா சொந்தக்காரங்க வீட்டுக்கு மட்டும்தான் கூட்டி போவா அயலுக்குள்ளை நடக்கிற கல்யாணத்துக்கு தானே தனிய போவா  எனக்கு அன்று முழுதும் கவலையாக இருக்கும் அன்று அது எல்லாம் ஒரு பெரிய சோக கதை ஆனால் இன்று நினைத்து பார்த்தால் அது  ஒரு ஞாபகம்தான்

வாளை இலையில்   சாப்பிடுவது அன்று ஒரு ஆசை அதில் மருத்து தன்மையும் இருபதாக சொல்கிறார்கள், கல்யாண வீட்டு சமையல் என்றாலே முக்கிய இடம் பெறுவது கத்தரிக்காய் குழம்புதான் மற்றும் உருளை கிழங்கு பிரட்டல்,  பருப்பு, பயிதம்காய், வாழக்காய் பொரியலும், வறையும், மாங்காய் இஞ்சி கலந்த சம்பலும்,

தக்காழி சம்பலும் என பல வித மரக்றி கறிகள் வரும் போது அதை ருசிக்க துடிக்கும் மனசு, அதிலும் பப்படம் என்றால் நான் இன்னும் ஒன்று தாங்கோ என்று கேட்பன்  என்னுடைய அம்மா வில்லி மாதிரி மற்றவைக்கு தெரியாமல் நுள்ளுவா கேட்டு வாங்காதே என்று,  வீட்டை வரும் போது வேறே பேசுவா வெள்ளிகழமை என்றால் வீட்டிலை பப்படம் செய்துதானே தாரன்  பிறகு என்னத்துக்கு காணாதததை கண்ட மாதிரி சபையிலே கேட்டனி என்று எனக்கும் கொஞ்சம் வாய் துடுக்கு நான் சொல்லுவன் என்னமோ இந்த பப்படம்தான் ரேஸ்றாக இருந்தது என்று

பரிமாறுகிற தூக்கு சட்டியிலை கொண்டு திரிந்து சபை வைக்க எனக்கும் ஆசையாக இருக்கும் அந்த  ஆசையையும் விட்டு வைக்க கூடாது என்று ஒருநாள் எங்க அம்மம்மாவின் அந்திரட்டி நடந்த போது யாரும் பார்காத நேரம் தூக்கு சட்டியை தூக்கி கொண்டு நானும் சபை வைக்கிற ஆட்களோடு

சேர்ந்து சாப்பிட இருந்தவர்களுக்கு எல்லாம் பரிமாறி கொண்டு வந்தன்  அம்மா என்னை காணவில்லை என்று சுற்றும் முற்றும் தேடுறது தெரிந்தும் நான் அவவை கணக்கு எடுக்கலை

எல்லாருக்கும் இரண்டு தடவையாக கறியும் போட்டு இரண்டு பப்படமும் போட்டு கொண்டு வர ஒரு மாமா சொன்னார் நீ கனக்க கறியை அள்ளி ஊத்துறாய் அத்தோடு ஒரு ஆளுக்கு ஒரு பப்பம்தான் போட வேணும்  இல்லாட்டி கடைசி பந்திக்கு சாப்பாடு இருகாது என்று ஆனால் அங்கை சாப்பிட்ட ஒரு ஆளு அவருதான் அன்று சமையல் செய்தவர் அவரு சொன்ன வார்த்தை எனக்கு இன்னும் ஞாபகமாக இருக்கு

அவரு சொன்னார் பிள்ளை உனக்கு நல்ல மனசு பெரிய கை உனக்கு எண்டைக்கும் சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது நீ நல்லாய் இருப்பாய் என்று மனம் குளிர அவரு சொன்ன வார்த்தை என் மனசிலை பதிந்தே போய் விட்டது, அன்று எனக்கு 18 வயது அவரு சொன்னது போலே  எனக்கு இன்று வரை சாப்பாடும் கிடைக்குது இன்னும் மற்றவர்களுக்கும் சாப்பாடு போட கூடியதாக இருபது கடவுளின் செயலும்தான்

பிறகு சபை வைக்க நீ ஏன் போனனீ என்று அம்மாடை கேள்விக்கு நான் மாமாதான் கூப்பிட்டவர் என்று சொல்லி சமாளித்திட்டன் அவவுடைய தம்பிதான் மாமா என்பதால் அவ வாயை மூடிட்டா

இல்லாட்டி பொம்பிளை பிள்ளைகள் ஆட்களுக்கு முன்னாலை நடந்து திரிவது எல்லாம் சரியில்லை என்று கிளாஸ் எடுத்திருப்பா

அன்றைய கல்யாண சாப்பாடும் சபை வைக்கும் முறையும் ஒரு தனி மரியாதையை காட்டும் வந்தவர்களை எப்படி உபசரிப்பது என்பதையே கண்ணும் கருத்துமாய் நினைபார்கள் அதிலும் யாருக்கு முதல் பந்தி, முதல் மரியாதை கொடுபது என்பதும் இருக்கும்,  குழந்கைளுக்கும் ஆண்களுக்கும் முதல் பந்தி பிறகு பெண்களுக்கு என்று பிரித்து வைபவர்களும் உண்டு இல்லை குடும்ப சமேதராய் இருந்து சாப்பிடுவதுமுண்டு எதுவாகிலும் அன்றைய பண்பாடு நிறைந்த கல்யாண வீடுகளும்  கல்யாண சாப்பாடும் இன்று வரை என் நெஞ்சை விட்டு அகலவில்லை,

வெளி நாடு வந்த பிறகு பல கல்யாணவீடுகளுக்கு போய் வந்தாச்சு, கும்பலிலை கோவிந்தா என்ற மாதிரி இங்கு கல்யாண சாப்பாடுகள் கொடுபார்கள் பாருங்க ஆரம்பத்திலை இருக்கிற மேசைக்கு சாப்பாடு கொணர்ந்து பேப்பர் தட்டிலை பரிமாறினார்கள், இப்ப எல்லாம்  நாமாக லைன் கட்டி நின்று  பேப்பர்தட்டு எடுத்து வைத்திருக்கிற சாப்பாடடை பார்த்து பார்த்து வாங்கி கொண்டு போக வேணும் அதிலும் கறிகளில் எல்லாம் எண்ணெய் மிதக்கும்  கத்தரிக்காய் கறிக்கு திரி போட்டால் எரியும் என்று ஒரு நண்பி சொன்னதை நினைத் நான் சிரிபதுண்டு

மேலை நாட்டிலை லைன் கட்டி நின்று நாமாகதான் பேப்பர் பிளேட்டில் போடுறதை வாங்கிட்டு  போய் இருந்து சாப்பிட வேணும் அதை கொண்டு போகும் போது

 கட்டியிருக்கிற நல்ல சேலையிலை பட்டிடுமோ என பயந்து ஒழுகிற கறி ஒன்றுமே நான் எடுப்பதில்லை

இதிலை பாயாசம் என்றால் ஒரு களி மாதிரி தருவாங்கள் வயிற்றை பிரட்டும் இங்கைதான் சனங்கள் ஏதோ காணததை கண்ட மாதிரி முந்தியடித்து சாப்பாடு வாங்க ஓடுவதும்,  பிறகு குறை சொல்லி கொண்டே வளிச்சு அடிபதும் பார்க்க வினோதமாகதான் இருக்கும்

அன்று ஊரிலை சாப்பிட்டது போலே ஒரு கல்யாண வீட்டு சாப்பாடு எனி என்றுமே இல்லை என்றாச்சு!

கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அது கௌரவ பிரசாதம் ஹஹஹஹஹஹ!

கவி மீனா

 

 

இச்சு இச்சு

கீச்சு கீச்சு என்று குருவிகள்

கீச்சு மாச்சு பண்ணுது

காலை நேர தென்றலில் ஆடி ஆடி

மரங்களும் மூச்சு வாங்கி நிக்குது

பாயும் கதிர் வீச்சிலே

கண்ணும் கூசி கூசி போகுது

மூச்சு பேச்சு இல்லாமே

கண்ணை மூடி சிந்தித்தால்

உலக வாழ்க்கை என்னெவென்று

பிச்சு பிச்சு விழங்குது

மனித நேயம் மாறி போய்

வஞ்சகமாய் எண்ணியே

வச்சு வச்சு பழி வாங்குறாங்கள்

பழாய் போன மனிதர்கள்

ஏச்சும் பேச்சும் சண்டையுமாய்

வீட்டுக்கு வீடு அடிபாடு

வாழ்க்கை என்ற பேரிலே

ஆணும் பெண்ணும் காமசேர்கையால்

காலத்தை ஓட்டுது

ஒளிந்து இச்சு இச்சு கொடுபதும்

இல்லாட்டி பிச்சுவா கத்தியோடு

காதலும் அடிபாட்டுடன் மடியுது


அச்சு அடிச்ச நோட்டு இல்லாட்டி

மனித வாழ்க்கை ஆப்பிழுத்த

குரங்கு போலே

அகபட்டே மச்சு போகுது

மச்சு போகுது

கவி மீனா

Sonntag, 10. April 2022

 

வொளவால்

வொளவால் என்றாலே ஒரு அருவருப்பான பறவையாகதான்  எண்ணத் தோன்றும் காரணம் அது பக்கத்தாலே பறந்தாலே ஒரு துர் நாற்றம் எம்மை தாக்கும், வொளவால் ஒரு நாளும் வெளிச்சமான இடத்தில் வாழாது அது எங்கேயாவது இருண்ட இடம் தேடி தென்னம் வட்டுகள், குகைகள், அல்லது வீட்டு  முகட்டில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாழடைந்து வீடுகளில் ஓட்டுக்கூரைகளில் இப்படிதான் அது இடம் தேடி கூட்டமாக அதுவம் தள்ளி தள்ளி தொங்காது ஒன்றோடு ஒன்று இடிச்சுக்கொண்டுதான் தலை கீழாக தொங்கும்,  கீச் கீச் என்று சத்தம் வேறே போடும் பகலில் நடமாடாது இரவிலைதான் இதுகள் சுத்தி பறந்து இரை தேடும்


இதுகள் தொங்கற இடத்தில் நாற்றமும் பிணியும்தான் குடி புகும்.

தொங்கும்.வொளவால்களை பாவம் செய்து செத்தவர்கள்தான் தண்டனை கிடைத்து வொளவாலாக வந்து தலை கீழாக தொங்குவதாக   ஊரிலை சொல்ல கேட்டதுண்டு, மேலை நாடுகளில் வொளவால்களை ஆவிகளாகதான், அதாவது வம்பியர் என்று நம்புகிறார்கள்.

அது பற்றி எத்தனை கொர பிலிம் எல்லாம் வந்துட்டுது, வொளவாலாக பறந்து பின் பேயாக போய் ஆட்களின் கழுத்தை கடித்து இரத்தம் உறிஞ்சும் பேய்கள் பகலில் மீண்டும் வொளவாலாக தொங்குவதாக அந்த படங்களில் சித்தரிக்கபட்டுள்ளது

 அந்த வம்பியர்கடித்தால் கடி வாங்கினவர்களும்  பின் பேய்களாக மாறி விடுவார்கள் என்பது அமெரிக்கர்களின் நம்பிக்கை! இது கொர பிலிம்மில் இப்படி காட்ட படுகிறது. எதுவோ வொளவால்களை இறந்த ஆட்களாகதான் பொதுவாக தமிழரும் சரி மேலை நாட்டவரும் சரி சொல்கிறார்கள் ஆனால் அந்த வொளவாலை பிடித்து சாப்பிடும் மனிர்களை என்னவென்று சொல்லலாம்?

இந்த நாத்தம் பிடிச்ச வொளவாலை சாப்பிடுறவங்களும் ஒரு நாத்தம் பிடித்த சமுதாயமாகதான் இருக்கும். சரி எங்கேயோ யாரோ சாப்பிடுறாங்கள் என்று நாம விட்டு வைத்தாலும் நம்மை இப்ப அந்த வொளவால் விடுவதாக இல்லையே!

வொளவால்லிருந்துதான் கொரானோ வைரஸ் மிருகங்களுக்கு போய் பின் மனிதர்களுக்கு பரவியதாக இன்று ஒரு சேதி உக்கிரமாக பரவுது அப்படியானால் அந்த வொளவாலை அது தாக்கவில்லையே!

வொளவாலை விரும்பி உணவாக சாப்பிடும் ஆபிரிக்கா நாடுகளிலும் இந்த நோய் அதிகமாக பரவவில்லையே!

அன்று எங்க ஊரிலும் சிலர் பெரிய வொளவாலை பிடித்து சாப்பிட்டதாக நான் கேள்வி பட்டிருக்கிறேன் அப்ப ஒன்றுமே  அவர்களுக்கு நடக்காத போது இப்ப மட்டும் இந் கொரோனா எப்படி வொளவாலுக்கு வந்தது?

 இன்று மனிதருக்கு பெரும் அழிவை உண்டாக்குது? இதை நம்ப கூடியதாக இல்லையே!

வொளவால் குட்டி போட்டு பால் கொடுத்து வளர்பதாக சொல்ல படுகிறது அது குட்டியை எப்படி போடுது குட்டி வெளியே வரும் போதும் விழாமல் எப்படி தொங்குது எல்லாமே ஒரு அதிசயம்தான் தலை கீழாக தொங்கும் வொளவாலும் வாழுது ஆனால் இன்று மனிதர்களால் வாழ முடியாமல் போனதுக்கு அந்த வொளவால் காரணமானதும் ஒரு அதிசயம்தான்!

வொளவாலை போலே வாழுகிற மனிதர்களும் உண்டு பாருங்க!

ஊரிலைதான் சில பேருக்கு வேலை வெட்டியில்லாமல் கஸ்டத்தின் நிமித்தம் பத்தாத இடத்தில் வளந்த பிள்ளைகளும் தாய் தகப்பன் இன்னும் பேரன் பேத்தி வரை ஒரு வீட்டில் கிடந்து குமைவதும் வறுமையின் எடுத்துக்காட்டு எனில் இங்கு வந்த சிலரும் அப்படிதான் வாழுகிறார்கள்

இங்கு வேலை இல்லாட்டியும் அரசாங்க உதவியும் குறைந்தது தனி ஒரு ஆளுக்கு 350 ஒயிரோ வாடகையும் கொடுத்து வீடு வசதிகளும் கொடுக்கும் போதும் சிலர் பத்தாத வீடுகளில் வளர்ந்த பிள்ளைகளும்  சேர்ந்து நெருகடியாக வொளவால்களை போலே இடிபட்டு வாழும் நிலையை பார்க்கும் போது இவர்களுக்கும் அந்த வொளவாலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை பாருங்கோ!

முப்பது வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளும்  தனித்து வாழ முடியாமே,  தன் காலில் நிக்க  தெரியாமே பெற்றவர்களுக்கு தொல்லையாக கூட இருபதும்,

பிள்ளைகளுக்கு ஒரு வசதியான தனி இடம் தேவை என நினைகாத பெற்றவரும்   இந்த வொளவால்களை போலேதான் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள், வசதி வாய்ப்பு இல்லையென்றால் வேறே கதை ஆனால் இங்குதான் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்க படுகிறதே!

வேலை செய்கிறவர்கள் வளர்ந்த பிள்ளைகள் தனிதனியே வீடு எடுத்து போனால் காசு மிச்சம் பிடிக்க ஏலாது என்று சொல்லி அவர்கள் உழைக்கும் காசையும் வேண்டி பூட்டி போட்டு இப்படி நெரிச்சலாக வாழுவதும் உண்டு

வேலையில்லாதவர்களும்  தனிய போனால் வீடு எடுக்கலாம் அரசாங்கம் உதவி செய்கிறது ஆனாலும் சிலருக்கு தனித்து வாழ பயம் அல்லது இருக்கிற வீட்டை விட்டு போட்டு வசதியான வீடு எடுக்க பயம் இப்படியே பயந்து பயந்து தலை கீழாக தொங்கும் வொளவால்களை போலே தொங்கும் வாழ்க்கையில்  சுகாதார இன்மையால் நோயும் பிணியும் வந்து

கடைசியாக இருந்த கதிரையை விட்டு எழும்ப முடியாத நிலையில் சிலர் வாழ்க்கை போகுது

வொளவால்கள் தொங்கும் இடத்தில் சிணி நாத்தம் அடிபது போலேதான் இப்படிபட்ட மனிதர்கள் வாழும் வீடுகளும்  துர் நாற்றம் இருக்கும்

காற்றுள்ள போதே தூற்றி கொள், வாழும் போதே வசதியை தேடி கொள், கைகால் எலாமல் போன பின் எதுவும் சரிபடுத்த முடியாது பாருங்க!

நெருக்கடியான வீடுகளில் வாழுகிறவர்களுக்கு உடம்புக்கு முடியாமை போய் பராமரிக்க ஆழு உதவி கிடைத்தால் கூட அவர்கள் வந்து வீடு துப்பரவாக்கவோ அவர்களை கழுவி துடைக்கவோ வீடும் பாத ரூமும் வசதியாக இருபது அவசியம்

இல்லையெல் அரசாங்கமாக இவர்களை வயோதிப மடத்துக்கு கொண்டு போய் விட்டு விடும்  இதுதாங்க உண்மை!

அவனவன் வாழ்க்கை அவன் கையில் அது எப்படி என்பது அவரவர் தீர்மானிக்க வேண்டியது  காற்றோட்டமாய் வசதியாய் வாழ ஊரிலை எல்லாருக்கும் வசதி இல்லாது போனாலும் வெறும் காணியிலிருந்து ஐன்னலை திறந்தால் காற்றாச்சும் உள்ளே வரும் இங்கு நாமாகதான் வசதியை உருவாக்க வேணும். ஆனால் வொளவால்களை போலே ஒட்டி உரசி கொண்டு இருண்ட இடத்தில் வாழ நினைக்கும் சில மனிதர்களை நாம் என்ன சொன்னாலும் திருத்தவே முடியாது

அதிலும் நம்ம சனம்தான் வெளிநாடு வந்து இப்படி வாழுகிறார்கள்  பத்தாத இடங்களில்  வொளவால்களை போலே  சிலரது வாழ்க்கை! காசை மட்டும் சேர்த்து என்ன பயன் இன்று கொரோனா பிடித்தால் நாளை பாடையில் பாடை கூட இங்கு இல்லை, மரண சடங்கும் இல்லை  இதுதான் இன்றைய நிலமை!

வொளவாலும் சரி வொளவாலை போலே வாழும் மனிதர்களும் சரி மற்றவர்களுக்கு  ஒரு அருவருக்க தக்க மாதிரிதான் தோணுகிறார்கள்

நாய் வாலை நிமித்த முடியாதப்பா! அடுதவனை திருத்த நம்மாலே முடியாதப்பா!

Samstag, 9. April 2022

 

பரதேசி

பழத்தை தேடி பறவைகள்

மரம் விட்டு மரம் பறக்குது

இரையை தேடி விலங்குகள்

யாவும் பாய்ந்து திரியுது

இன்று சோற்றை தேடி மனிதனும்

அலைந்து அலைந்து பரதேசியாகி விட்டான்

பணம் இருந்தாலும் புசிக்க

உணவு இல்லாட்டி

பணத்தை சாப்பிட முடியாது

 


தங்கம் விலை ஏறிட்டு என

தலையில் கை வைப்போர் ஒரு புறம்

எண்ணெய் இல்லாமல்

பொரியல் இல்லாமல்

புலம்புவோர் மறு புறம்

காலிருந்தும் நடக்க மறந்த

பலருக்கு இன்று

பெற்றோல் இல்லாமல் அந்தரம்

 

கொரோனா படுத்துது ஒரு புறம்

பஞ்சம் பசி பட்டினி வருகுது மறுபுறம்

இரண்டு பேரு சண்டையிலே

பார்தவர் மண்டை உடைவது போலே

இரண்டு நாடுகள் போடுற  யுத்தத்திலே

உலகமெங்கும் கூச்சலும் கூப்பாடும்

உலகம் போற போக்கை பாரு

எங்கு பார்த்தாலும் அவலம்

அவணிக்கு ஏன் வந்தது இந்த கோலம்

ஏன் வந்தது இந்த கோலம்?

கவி மீனா