Sonntag, 22. Dezember 2013


சுடலை ஞானம்
 

பூத்த மலர்கள் வாடிய போதும்

புதிதாய் ஒரு மொட்டு மீண்டும் மலரும்

வானை இருள் மூடிய போதும்

ஒரு நாள் முழுநிலா வானில் தெரியும்

வசந்த காலம் மறைந்த போதும்

மீண்டும் ஒரு வசந்தம் வரதானே வேணும்

இயற்க்கை என்றால் இடியும் இருக்கும்

மழையும் அடிக்கும்

வாழ்க்கை என்றால் துன்பமும்

இன்பமும் கலந்தே இருக்கும்

ஓடும் நதியில் அழுக்கும் சேரும்

மலையோரம் மூலிகை வழமும் கலந்தே ஓடும்

நீண்டு போன நெடும் சாலை முடியும்

அது குறுக்கு பாதையில் நெளிந்தே ஓடும்

வெட்டிய மரமும் மொட்டையாய் நிக்கும்

சில நாள் கழித்து புதிதாய் தளிர்க்கும்

சாவை நோக்கி நீ நடக்கின்ற போதும்

சுடலை ஞானம் உனக்கு கிடைக்கும்

கவி மீனா

 

Samstag, 14. Dezember 2013


நாவடக்கம்

தன் நாவின் ஒரு சுவையை தாண்ட அறியாதார் மலையளவும் காடளவும் தாண்டி அலைகின்றார் என்னே இம் மனிதர் மதி

இதை நான் சொல்ல வில்லை என்றோ இலக்கியத்தில் சொல்ல பட்டு விட்டது தனது நாவினை அடக்கி வாழ தெரியாதவர்கள்  மலைகள் காடுகள் எல்லாம் பின்பு அலைந்து வருந்துவதால் பயன் ஏதும் உண்டோ என்பது போலே பொருள் படுகிறது  இந்த இலக்கிய பாடலோடு அடங்கிய சிவகாமி சபதம் என்னும் ஒரு கதையை நான் சிறு வயதில் வாசித்த ஞாபகம்

இந்த நாக்குதான் சுவையை தேடி அலைகிறது இந்த நரம்பு இல்லாத நாவாலேதான் அடுதவர் மனம் புண் படும் படியாக வன்சொல் தீயசொல் சொல்ல படுகிறது அதனால்தானே வள்ளுவர் குறளில் சொல்லிவிட்டார் இப்படி

„தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு“

சொன்ன வார்தைகள் உனக்கு சொந்தமில்லை அதை கேட்டவர் என்றும் மறப்பதில்லை வன்சொல் சொல்லி போட்டு பின்பு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால் கூட கேட்டவர் மனதை விட்டு அது அகலாது கொட்டிய கடுகும் சொன்ன சுடு சொற்களும் மீண்டும் அள்ளி எடுக்க முடியாது என்பதுதான் உண்மை

இந்த வன்சொல் அல்லது தீயசொல்லை சொல்லும் நாவை விட கூரிய ஆயுதம் வேறு இந்த உலகத்தில் இல்லை என்பேன் நாவடக்கம் அற்றோருக்கு நட்புகள் முறிகிறது உறவுகள் விலகி போகின்றது

இந்த நாக்குதானே மதுவை தேடியும் அலைகிறது மாதுவை தேடியும் அலைகிறது சுவையை தேடி அலைகிறது  சுற்றங்களை விட்டு விலக செய்கிறது ஐம்பொறிகளில் ஒன்றான வாய் அதற்குள்ளே அடங்கி நாவு இல்லாது போனால்

பாவங்களை செய்து பாரினில் பாவியாக நம்மை அலையவைத்துவிடும்

கவி மீனா

ஞானி

 இல்லம் என்று ஒரு வீடு இல்லை

எங்கும் நிறைந்த இறைவனுக்கு

உலகமே அவன் மேடை

அதில் தினம் நடனமாடும்

அவன் பொற்பாதம்

அன்பின் வடிவே அவன் திருவுருவம்

அன்னையின் இதயமே அவன் வாசம்

கருணை பொழியும் இவன் யோகி

கவலையை மறக்க இவனை தியானி

ஐந்தெழுத்து மந்திரத்தை தினம் ஓதி

சிவன் பாதம் பணிந்தால் அவன் ஞானி

அவன் ஞானி

கவி மீனா

விதியின் கைகள்

பூட்டிய அறைக்குள்ளும் காற்று புகும்

மூடிய இதயத்துக்குள்ளும் காதல் வரும்

உலகின் எந்த கோடிக்கு ஓடினாலும்

விதியின் கைகள் உன்னை எட்டும்

எத்தனை கோடி பணம் இருந்தாலும்

காலனின் பாச கயிற்றை அறுக்கும்

வலிமை அதற்கில்லை

கவி மீனா

பிரம்மன் தீட்டிய அழகோவியமே
 

சொட்டும் மழை துளியில் கொட்ட நனைந்து நிற்கும்

வட்ட கரு விழியாள் என்னை கட்டி இழுத்து விட்டாள்

அவள் கண்களின் காந்த கணையினாலே

வெள்ளம் அலைந்தோட அவளோ மெல்ல நடை போட

நான் அவள் சிற்றிடையை கண்களினால் எடை போட

உள்ளம் துள்ளி குதி போடவே

மழை கொட்டையிலே மரதில் தொங்கும் மாங்கனிகள் போலே

அவள் சிற்றிடை மேலே காணும் அழகில் மனம் கவி பாடவே

கருமுகில்கள் கொட்டும் மழை போலே அவளின் நெளிந்தோடும்

கார்குழலில் வழிந்தோடும் நீர் திவலையின் எழிலில் மயங்கியே

நான் மது உண்ட வண்டானேன்

அவள் பேரழகின் பெட்டகமே  பிரம்மன் தீட்டிய அழகோவியமே

இப் பேரெழிலை கண்டு காதல்வயம் கொண்டு  பித்தனானேன்

 
  வேல்
 

 

திட்டாதீர்கள்

பண்டி என்று மற்றவர்களை பேசாதீர்கள் காரணம் பண்டி இறைச்சிதான் ஜேர்மனியருக்கும் ஐரோப்பியருக்கும் சுவையான முக்கிய உணவாகும்  விருந்து என்று சொன்னால் அங்கே பண்டி முழுசாக பொரிந்து கொண்டிருக்கும் பண்டி இறைச்சி இல்லாத கொண்டாட்டமே ஜேர்மனியில் இல்லை அந்த பண்டி அவர்களுக்கு கொடுக்கும் மகிழ்வை மனிதர்கள் கொடுக்க மாட்டார்கள்

எனவே எனிமேல் ஆச்சும் யாரையும் பண்டி என்று சொல்லி திட்டாதீர்கள்

நாய் என்று சிலர் அடுதவர்களை திட்டுகிறார்கள் நாய் போலே நன்றியுள்ள ஒரு மனிதனை காட்டுங்கள் பார்க்கலாம் அடிச்சாலும் காலால் உதைச்சாலும் கூட நாய் வளர்தவனை விட்டு எங்கும் ஓடி போகாது  அவனுக்கு ஒரு ஆபத்து என்றால் அது மற்றவர்களை கடித்து குதறி தள்ளி விடும் இந்த நன்றியுள்ள ஜீவனை போலே யார் உள்ளார்கள்?

மனிதர்கள் நன்றி என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கிறார்கள் எத்தனை உதவிகளை செய்தாலும் செய்யும் வரைக்கும்தான் மனிதர்கள் பல்லை காட்டி  காரியம் பார்ப்பார்கள் உதவி செய்ய முடியாது போனால் காலை வாரிவிட்டுதான் ஓடுவார்கள் அதனால் நாயை போலே என்று சொல்லி யாரையும் திட்ட வேணாம்

சனியன் என்று சொல்லி சில பேர்; திட்டுவார்கள் அந்த சனியனின் வலிமை தெரியாமல் அப்படி சொல்லுகிறார்கள் சனியன் பிடித்தால் ஒரு அரசனை கூட ஆண்டி ஆக்கி போட்டுதான் போகும் அரிசந்திர மகாராசாவை  சனியன் பிடித்ததும் நளமாகாராசனை சனியன் பிடித்ததும் கதைகளில் படித்ததில்லையா? கேட்டதில்லiயா?

சனியன் பிடித்தால் நடு வீதியில்தான் வரணும் என்பது தெரியாமல் சும்மா சனியன் என்று சொல்லி திட்டாதீர்கள்

அடுத்து சிலர் பேய் என்று சொல்லி திட்டுகிறார்கள் பேய்க்கு இருக்கும் வலிமை உயிரோடு இருக்கும் மனிதனுக்கு இல்லை பேய் உள்ள வீட்டிலை மனிதர்களை வாழ விடாது  மனிதர்களால் மனிதர்களை குடி எழுப்ப முடியாது ஆனால் பேய் குடி எழுப்பி போடும்

பேய் பிடித்தாலும் அவர்களை வாழ விடாது பேய் என்றால் சும்மாவா? அது தன்னுடைய வலிமையால்தான் நரகத்தக்கு கூட போகாமல் பேயாக உலாவி திரிகிறது எனவே பேயை கூப்பிட்டு திட்டாதீர்கள்

அதைவிட சிலர் மூதேவி என்று சொல்லி திட்டுகிறார்கள்  அட மூதேவி வீட்டுக்குள்ளே வந்தால் ஒரே தரித்திரம்தான் பிடிக்கும்  கடன் தொல்லை சண்டை வறுமை நோய் என்று உள்ள துன்பம் எல்லாம் அந்த வீட்டில் வர தொடங்கும் அங்கு வாழ்க்கையே இனிகாது போய் விடும்

எப்போதும் நாம் அதிகாலை துயில் எழுந்து வீட்டை சுத்தமாக வைத்து நாமும் சுத்தமாக இருந்து மாலை நேரம் வீட்டில் விளக்கு ஏற்றி வீட்டில் வெளிச்சத்துடனும் கடவுள் பக்தியுடனும் இருக்க வேண்டும் என்று எனது தாயாயர் ஊரில் நெடுக சொல்லுவார் இல்லாவிடில் மூதேவி பிடிக்கும் என்று

அப்படி இல்லாமல் அழுக்கு மூட்டையாக நடு பகல் வரை தூங்கி  வீட்டையும் தன்னையும் சுத்தம் செய்யாமல் கண்டதை உண்டு வாய் கூட கழுவாமல் குளிக்காமல் கடவுளை நினையாமல் திரிபவர்க்கு மூதேவிதான் தானாக வந்து பிடிக்கிறது என்பதுதான் உண்மை அவர்களை சந்தோசமாக வாழவிடாது அவர்கள் கூட இருப்பவருக்கும் அவர்களால் தொல்லையே நேரிடும்

எனவே எனிமேல் யாரையும் மூதேவி என்று உங்கள் வாயால் சொல்லி திட்டாதீர்கள்

தீய சொல்லை சொல்வதால் அது எமக்கே வாலாயம் ஆகிவிடும்

நல்லதையே சொல்லி நல்லதை செய்திடுவோம் தீயது செய்பவர்களை இறைவனிடம் முறையிட்டு விடுவதே சால சிறந்தது

கவி மீனா