Mittwoch, 22. März 2023

 

பச்சை நிறை ஆடைகுள்

டிசம்பர் மாதம் மார்பில் ஒரு கட்டி அதை ஒப்பரேஸன் செய்ய வேணும் என்று வைதியர்கள் சொன்ன போது எனக்கு ஒரே பயமாக போய் விட்டது உள்ள வருத்தங்கள் போதாது என்று இது வேறே வரணுமா? என மனசு நொந்தேன் 3 வருடமாக வீட்டுக்குள் ஒழிந்து வாழுகிறேன் கொரோனாவுக்கு பயந்து 4 தடுப்பு ஊசி வேறே போட்டாச்சு கொரோனா பிடிக்க கூடாது என, ஆனால் விதி விட்டுதா? வீட்டுக்குள்ளேயே வந்து மார்பிலை கட்டி உட்கார்ந்து விட்டது எமது கையில் ஏதுமில்லை என்பதை நான் அறிந்திருந்தும்  ஒவ்வொரு தடவையும் இப்படி இன்னல்கள் வரும் போது மனசு சோர்ந்துதானே போகிறது

ஒரு மாதிரி அந்த நாளும் வந்தது எத்தனையேயா சோதனைகளை முடித்து 16 ம் திகதி மாச்சு மாதம் ஒப்பரேஸன் என்று நாள் குறித்தாச்சு அம்மனை நம்பி தினமும் கும்பிட்டு கொண்டிருக்கிற எனக்கு இப்படி நோய்களும் வருதே கடவுள் இருக்கா என்று ஒரு சந்தேகம் வேறே வந்துட்டுது

ஒப்பரேஸன் அண்டைக்கு மகனோடு கொஸ்பிட்டலுக்கு போக உடனேயே டிரெஸ் எல்லாம் மாற்றி  கட்டிலில் படுக்க வைத்து ஒப்பரேஸன் தியேட்டருக்கு கொண்டு போனார்கள், நான் திரும்பி உயிரோடை வராட்டி என்ன என்ன செய்ய ணும் என்று மகனுக்கு சொல்ல அவன் சும்மா வாயை மூடிகொண்டு வாங்கோ தேவையில்லாமல் கதைக்காமல் என்று சொல்லி போட்டான்

அவர்கள் தந்த ஒரு குழிசையை குடித்தும் எனக்கு அமைதி வரவில்லை உள்ளே போனதும் கதைச்சு கதைச்சு ஒரு ஊசியை போட்டார்கள் நான் எனக்கு பயமாக இருக்கு வேறே வருத்தங்கள் நிறைய இருக்கு நான் கண் முழிப்பனோ தெரியாது என்று அங்கை நின்ற வைதியர்களுக்கும் சொல்ல அர்கள் பயபடாதே எல்லாம் நாங்கள் சரியா பார்பம் என்று சொன்துதான் கேட்டது அதோடே நான்  நினைவிழந்து போனேன்

மீண்டும் கண் முழித்த போது எனக்கு நான் எங்கே இருக்கிறன் என்றே புரியவில்லை அப்படி ஒரே பச்சை நிற உடுப்புகளோடு தலையெல்லாம் மூடி கட்டி மஸ்க் போட்டபடி கனபேரு சிரிச்சு கதைக்கினம் பக்கத்திலை, எனக்கு ஒன்றுமே விழங்கலை நான் ஏதோ வேறே ஒரு உலகத்துக்கு வந்து விட்ட மாதிரி ஒரு உணர்வு

அப்படியும் இப்படியும் பார்கிறன் மெல்லமாக கையை ஆட்டி பார்கிறன்

உடனே என்தலையை ஒரு ஆளு தடவி நீ பயபடாதை எல்லாம் சக்சஸ், ஒப்பரேஸன் முடிஞ்சுது என்று சொல்ல இன்னுமொரு ஆளு என் கையை தடவி நீ எனி பயபட தேவையில்லை என்று சொல்ல  இன்னுமொரு ஆளு காலை பிடித்து நாங்கள் எல்லாம் இருக்கிறம் எல்லாம் நல்லாக முடிஞ்சுது உன்னை ரூமுக்கு கொஞ்சத்தாலை கூட்டி போறம் என்று சொல்ல தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக விழங்கியது எனக்கு ஒப்பரேஸன் முடிஞ்சுது இவர்கள் எல்லாம் வைதியர்கள்  என்பது

எம்மட்டு அன்பான அவர்களது வார்தைகளும் ஸ்பரிசமும் என்னை மெய் மறக்க வைத்தது எவ்வளவு உயர் கல்வியை கற்ற இந்த வைதியர்களுக்கு பெருமையே இல்லை தன்னட்டை வந்த நோயாளி உயிர் தப்பியது பிழைக்க வைத்ததையிட்டு அவர்களுக்கு மகிழ்ச்சி

ஊரிலை அதிகமான வைதியர்கள் கோட்சூட் கழட்டாமல் திமிராக சுத்தி வருவதை நான் கண்டிருக்குறேன், அங்கு ஒரு பிள்ளை டொக்கடருக்கு படித்துவிட்டால் பெற்றவர்களுககே திமிர் வந்திடும் ஆனால் இங்கு வெள்ளை கோட்டை போட்டு வராட்டி டொக்டர் யாரு கொஸ்பிட்டலிலை வேலை செய்யுறது யாரு என்று வித்தியாசமே தெரியாது

 அன்று நான் ஒப்பரேஸன் தியோடேரில் கண்டேன் கருணை வடிவான வைதியர்களை ஆனால் என்ன முகம் தெரியவில்லை குரல் மட்டும்தான் கேட்டது அந்த பச்சை நிறை ஆடைகுள் தலை வரை மூடி மஸ்க் போட்டு எம்மட்டு சிரமத்துடன்தான் நோயாளிகளை காப்பாற்ற வைதியர்கள் படாத பாடு படுகிறார்கள்

கடவுள் எங்கே எங்கே என்று தேடுகிறோமே இந்த கருணை உள்ளம் கொண்ட வைதியர்களின் அறிவிலும், துன்பதிலை கை கொடுக்கும் உதவும் கரங்களிலும்தான் கடவுள் இருக்கிறார் அதுதான் உண்மை!