Samstag, 27. Oktober 2018


Me too யாருக்கு? 

சினிமா துறைக்கு போன பின்பு பெண்களுக்கு கற்பா மானமா
எல்லாம் அரை குறை ஆடையோடு காற்றிலை பறக்குது பாருங்கோ!
துடை தெரிய மெல்லிய ஆடைகளை உடுத்தி எத்தனை பேரு முன்னாலே வலம் வரும் பெண்களுக்கு காசுதான் கருத்தாய் இருக்கு கற்பு அல்ல கவர்சியை காட்டுவதே ஆடவர் கண்ணை கவரதானே?
இதற்கு பிறகு அவன் தொட்டான் இவன் தொட்டான் என்று புலம்புவதில் பயன் இல்லை!
ஆடைகள் எப்போதும் பெண்ணுக்கு அழகை கூட்டவே ஒழிய கவர்சியை காட்ட அல்ல, முள்ளு வேலியாகதான் ஆடைகள் இருக்க வேணும்,
தப்பான கண்ணோடு நோக்குபவனை கண்ணிலையே முறைக்கலாம், பெண்கள் நடனம் பழகுவதைவிட தற்பாது காப்பு கலையை பழக வேணும் என்பதை ஏன் சொல்கிறார்கள் தன்னை தானே பாது காக்க வேணும் என்பதற்காகதானே?
தன்னை கெடுத்தவனை அன்று அந்த பெண் ஒரு கத்தியாலே குத்தியிருந்தால் இந்த கலவரமே வந்திருக்காது
தன்னை கொல்ல வந்த பசுவை கூட கொல்லலாம் என்று நம்ம பகவத் கீதையே சொல்கிறது.
இதை விட்டு போட்டு கன நாளைக்கு பிறகு கத்தி கத்தி பேசுவதில் நியாயம் தான் பிறக்குமா?

ஆண்களை கெடுகிற பெண்களும் உண்டு
ஒரு சில நடிகர்கள் தற்கொலை முயற்சி கூட செய்திருக்கிறார்கள் சில பெண்களாலே!
அதனாலே Me too சொல்லுற எல்லாருக்கும் இரக்கபடகூடாது.
உண்மை உண்மையாக தெரிய வேணும் சும்மா நாமும் ஏதாச்சும்
சொல்ல வேண்டும் என்று சொல்லி வைக்க கூடாது.

கற்பு நெறியொடு வாழ்பவருக்குதான் கற்பு  பறி போகும்
இப்ப தாமாகவே விரும்பி கற்பை இழக்கிற பெண்கள் எமது இளம் சந்ததிகளிலேயே உருவாகி விட்டது.
அனேகமாக ஒரு பெண்ணோ ஒரு ஆணோ ஒருவன் ஒருத்தியோடு வாழ்ந்ததாக வாழ்வதாக
புலம் பெயர் வாழ்வில் நான் கண்கூடாக காணவில்லை ஒன்று போனா இன்னும் ஒன்று என்று மாறி மாறி கைமாறி போகுது கற்பு!
 இதற்கு இந்த இளம் சமுதாயம் கெட்டு போக பெற்றவர்களும் காரணமாகதான் இருக்கிறார்கள்.

கற்பா அப்படி என்றால் என்னவென்று கேட்கிறார்கள் சில பேரு புலம் பெயர் வாழ்வில் மனிதர்களுக்கு மட்டுமல்ல சுதந்திரம் கிடைத்தது இந்த
கற்புநெறி, ஒழுக்கம், நமது கலாசாரம் என்பதுக்கும்தான், இவை யாவும் போன இடம் தெரியாமல் போகுது.
யாராவது ஒரு குடும்பம் பிரிந்து விட்டால் வாயை பிளந்து கொண்டு கதை பேசும் தமிழ் குடும்பங்களில் அவர்களது பிள்ளைகள் மூன்று நாலு தடவை என்று மாறி மாறி சோடிகளை மாற்றி கொண்டே போவதும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்வதும் ஒரு தவறான விடயமாக அவர்களுக்கு தெரிவதில்லை பாருங்கோ!
அது மட்டும் ஏன் மனதில்  தப்பு என்று தெரிவதில்லையா?
இல்லாவிட்டால் அந்த ஒழுக்கம் என்பது எனி நம் சமுதாயத்துக்கு தேவை இல்லை என்று முடிவு செய்து விட்டார்களா?
கணவன் மனைவி வாழ்கையிலே ஒழுக்கத்தை அதில் ஒருவர் கடை பிடிக்காமல் போவதால்தான் குடும்பங்களே பிரிகிறது!

ஒழுக்கமாக வாழும் மனிதர்க இந்த புலம் பெயர் வாழ்வில் விரல் விட்டுதான் எண்ண வேண்டும்.
எல்லாரையும் நான் குற்றம் சொல்லவில்லை ஒரு சிலர் இன்னும் தமது கலாசாரத்தோடு வாழ்கிறார்கள்தான் ஆனாலும் அவர்களை காண்பதே அரிதிலும் அரிதாக காண படுகிறது.
இதை ஒவ்வொருத்தரும் சிந்தித்து பாருங்கள் உங்கள் வாழ்வில் நடப்பது என்ன ? உங்கள் பிள்ளைகள் வாழும் வாழ்க்கை என்ன ?
கவி மீனா







ஏன்டி இந்த வாழ்க்கை 

பசி வந்தால் சோற்று வண்டி
சோற்றை தேடுது
கண்டது எல்லாம் திண்டுவிட்டால்
இந்த வண்டி தொப்பையாகுது

மாடு செய்த பாவத்தக்கு
சுமை ஏறுது ஆனால்
ஐல் ஐல் என்று மாட்டு வண்டி
ஜோரா போகுது
விதி வந்து பிழைத்து விட்டால்
அச்சாணி உடைந்து போகுது
வாழ்க்கை வண்டி ஓடையிலே
குடை சாயுது

கொம்பு தேனுக்கு
ஆசை பட்டால் நொண்டி மனம்
நோந்து போகுது
பாண்டி மாங்காய் வாங்கி
உப்பு மிளகாய் தூளும் தொட்டு
உண்ட காலம் தூர போச்சுது

தோண்டி தோண்டி பார்த்தாலும்
இறைவன் அருள் இல்லையென்றால்
மண்ணில் பொன் கிடைக்காது
கிண்டி கிளறி பார்த்து விட்டால்
இந்த மனிதன் கதை நாறி போகுது

ஏண்டி உனக்கு இந்த வாழ்க்கை
என்று மனம் நோகுது
அதை எண்ணி பார்த்தால்
உலக வாழ்க்கை வெறுத்து போகுது
ஆடாத ஆட்டம் எல்லாம்
ஆடிய பின் இறுதியிலே
மனிதன் வாழ்க்கை
ஆண்டி ஆகுது
கவி மீனா

Freitag, 26. Oktober 2018


எதிரும் புதிருமாய்
காலத்தின் கோலமிது
சிலர் வாழ்வு பாதியிலே முடியும்
சிலர் வாழ்வு பாதியிலே பிரியும்
பாதைகள் மாறும் பயணங்கள் தொடரும்
எதிரும் புதிருமாய் போகும்
ஓட்டியிருந்த தண்ட வாளம்
தனி தனியாய் பிரியும்
சேர்ந்து இருந்த உறவுகளும்
வேறு திசையில் போகும்

காற்றாடி அறுந்தது போல்
மனித உறவுகளும் ஒரு நாள்
அறுந்து விடும்
நீ யாரோ நான் யாரோ
என்று கேட்டு செல்லும்

ஒரு சட்டியில் சேர்ந்து உண்டவனே
உன் உணவில் நஞ்சை போடுவான்
உத்தமன் என்று நம்பியவன்
உன் உயிருக்கே உலை வைப்பான்
கை கொடுத்து தூக்கி விட்டால்
எழும்பியவன் உன்னை இழுத்து
விழுத்திடுவான்
இது மனிதர்களின் சுபாவமா?
இல்லை விதி செய்யும் சதியா?
கவி மீனா


Sonntag, 6. Mai 2018


முதுமையிலே தனிமை
ஏதோ ஒரு சோகம்
என்னுள் இளையோட
யாரும் கூட வர போவதில்லை
என நினைத்து பார்த்தேன்
பாதையிலே வருபவர் எல்லாம்
பாதி வழியில் மாறிடுவர்
கடைசி வரை சேர்ந்திருப்போர்
ஒன்றாய் மடிவதில்லை
 என்றோ ஒரு நாள் யாவரும்
தனிமையை அறியதான் வேண்டும்
இதுதான் வாழ்க்கை!

இளமையில் கூடி வாழ்ந்து
கோடிகளை ஓடி சேர்த்து
முதுமையிலே தனிமை வந்து
மனம் நொந்து
இறைவனை நினைக்க வைக்கும்
அதுவும் இறைவன்
இட்ட வழியென நினைத்தால்
காற்றில் கரையும் மேகம் போலே
எம் துயரும் ஓடி போகும்
கவி மீனா


Freitag, 6. April 2018


காக்கை கூட்டம்

காக்கை கூட்டம் கொடுத்து உண்ணுது
மனிதர் கூட்டம் பறித்து தின்னுது
நாலு கால் மிருகங்கள் சேர்ந்து போகுது
இரண்டு கால் மனிதர்கள் அடிபட்டு
பிரிந்து போகுது

ஆண்டவன் படைப்பில் வேறுபாடு
கண்ணுக்கு நல்லாய் தெரியுது
ஜந்தறிவு மிருகங்கள் அன்போடு வாழுது
ஏன் ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டும்
ஆளையாள் அடித்து கடித்து குதற பார்குது

பறவைகள் கூட்டம் பாடி பறக்குது
இந்த மண்ணில் மனிதர்கள் மட்டும்
மண்ணுக்காக  பொன்னுக்காக பெண்ணுக்கா
ஏன் அடிபட்டு மாழுது

வானத்துக்கும்  பூமிக்கும் நடுவே ஒரு
அழகான  பூந்தோட்டம்
அதில் ஆயிரம் ஆயிரம் யுத்தங்கள் வந்து
பாலை வனமாய் மாறியதே!
அதில் வாழும் மனிதர்கள்  மனங்களும்
கற் பாறைகளாய் போனதே!
கவி மீனா